saibol cream uses in tamil சேற்றுப்புண்ணுக்கு கண் கண்ட மருந்து சரும ரோக நிவாரணி சைபாலின் பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?
கை, கால்களில் ஏற்படுத்தக்கூடிய தொற்று நோய்களை சைபால் குணப்படுத்துகிறது.
saibol cream uses in tamil
சைபால் இது அக்காலத்தில் துவங்கப்பட்ட மருந்து கம்பெனி.மழைக்காலத்தில் வயலில் வேலை செய்வோர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதால் இவர்கள் தோல்கள் அனைத்தும் மிருது தன்மைஅடைந்து ஒரு சிலருக்கு வெடிப்பு ஏற்படும். அதுதான் சேற்றுப்புண் என அழைக்கின்றனர்.
எத்தனையோ மருந்துகள் மார்க்கெட்டில் வந்தாலும் சைபாலின் மார்க்கெட்டானது இன்று வரை சரிவை சந்திக்கவில்லை. அந்த வகையில் மக்களின் மனதில்இன்றளவில் இடம்பிடித்து வரும் சைபாலுக்கு அப்படி என்ன குணங்கள் என கேட்கிறீர்களா? பாருங்க...
சைபால் என்பது வெள்ளைநிறத்தில் சிவப்பு டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ள க்ரீம். இதனை கால் சேற்றுப்புண், தீப்புண், வெட்டுக்காயம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் நமைச்சல், அரிப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தடவலாம்.
saibol cream uses in tamilஇம்மருந்தினை நம் தோலின் வெளிப்புற பகுதிகளுக்கு மட்டுமே அப்ளை செய்ய வேண்டும். இந்த மருந்தானது ஜிங்க் ஆக்சைட் 5 சதவீதம், போரிக் ஆக்சைட் 5 சதவீதம், சாலிசிலிக் ஆசிட் 2 சதவீதம், சல்பேசடமைடு சோடியம் 2 சதவீதம், ஒயிட் சாப்ட் பாரபீன் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் வெள்ளை நிற க்ரீம்தான் சைபால்.
இம்மருந்தானது நம் உடலில் ஏற்படும் சிராய்ப்பு கொப்பளங்கள் சிறு காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் மற்றும் மருக்களை நன்கு குணப்படுத்த உதவுகிறது. இதனுடைய முழு பலனே சேற்றுப்புண்ணுக்கு அரு மருந்துதான். அதாவது நம் கால் பாதத்தில் விரல்இடுக்குகளில் ஏற்படக்கூடிய சேற்றுப்புண் மற்றும் பித்த வெடிப்புகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.எக்ஸிமா என்று சொல்லக்கூடிய வண்டுக்கடி நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு கடும்அரிப்பு ஏற்படும். மேலும் தோல் சிவந்து போதல் போன்ற நோய்களைக் குணப்படுத்த சைபால் பேருதவி புரிகிறது.
சொறி சிரங்கு மற்றும் கை அரிப்பு , தொடை அரிப்பு , நமைச்சல் உள்ளிட்டவைகளைக் குணமாக்க இது பயன்படுகிறது.
saibol cream uses in tamilநம் உடலில் காணப்படும் தோலில் பல வித நோய்கள் உண்டாகின்றன. அதாவது தோல் அழற்சி, தோல் வறட்சியால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குணப்படுத்த சைபால் உதவுகிறது.மேலும் பூஞ்சைக்காளான் எனப்படும் படை நோய்களுக்கும் இது அருமருந்தாக திகழ்கிறது. வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவைகளுக்கும் இதனை அப்ளை செய்யலாம்.
பக்க விளைவுகளற்றது
saibol cream uses in tamilஇம்மருந்தில் இருக்கும் வேதிப்பொருள்கள் நம் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளையும் அளிப்பதில்லை. பக்க விளைவுகள் மற்ற மருந்துகளில் இருப்பதுபோல் இதில் அதிக அளவு இல்லை. இருந்தாலும் நாம் குறைவாகவே இந்த மருந்தினை பயன்படுத்துவது நல்லது.மேலும் இம்மருந்தினை வீடுகளில் வைக்கும்போது குழந்தைகள் கைக்கு எட்டாத தொலைவில் வைப்பது நல்லது. மேலும் நம் சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் நன்கு வெந்நீரில் கழுவிய பின்னர் இந்த மருந்தினை அப்ளை செய்யவும். மேலும் காலை அல்லது மாலை நேரத்தில் பயன்படுத்துவது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu