உங்க பற்களை சரியாக பராமரிக்கிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...

regular teeth maintanance for good health உடல் ஆரோக்யத்துக்கு முக்கியமானது பற்களின் பராமரிப்பும்தான். பல்போனால் சொல்போகும்என்று சொல்வார்கள். அந்த வகையில் பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் பிரச்னைகள் அதிகரிக்கும்.

HIGHLIGHTS

உங்க பற்களை சரியாக பராமரிக்கிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க...
X
முறையாக பற்களை பராமரித்ததால்  பளிச்சிடும் முத்து பற்கள் 

regular teeth maintanance for good health


பற்களில் உள்ள பிரச்னைகளை பரிசோதிக்கும் பல் டாக்டர் (பைல்படம்)

நம்முடைய உடலைப்பேணிக்காக்கும் உறுப்புகளில் பற்களும், வாயும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாயின்மேல் கீழ்த்தாடைகளில் பற்கள் வரிசையாக பொருந்தியுள்ளன. பால்பற்கள், நிலைப்பற்கள், என மனிதனுக்கு இரண்டு வித பற்கள் உள்ளன.பால்பற்கள் 20,குழந்தைப்பருவத்தில் தோன்றி, வளரும் காலத்துஇவை விழுந்துவிடும்.

நிலைப்பற்கள் 32 , சிறுவயதில் தோன்றி வாழ்நாள் முழுவதும் இப்பற்கள் நிலைத்திருக்கும் தாடையின் மையக்கோட்டில் இருந்து பற்களை 1. வெட்டுப்பற்கள், 2.கோரைப்பற்கள்,3.முன்கடவாய்ப்பற்கள்,4.பின்கடவாய்ப்பற்கள்,என நால்வகைப்படுத்தி உள்ளனர்.

இந்த பற்கள்தான் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவதோடு, முகத்திற்கு அழகினையும், சொல்லிற்கும் தெளிவூட்டும் வகையில் அமைந்துள்ளன. மேலும் இந்த பற்களினாலும் மனிதர்களுக்கு பல வித நோய்கள் உண்டாகின்றன. பல்வலி, பல்வீக்கம், சாப்பிட முடியாமை, உணவினை விழுங்க முடியாமை, நாக்கு நீளாமை, ஈறுகளில் ரத்தக்கசிவு, போன்ற நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன. சில சமயங்களில்இதனால் பற்களை இழக்கவும்,நேரிடும். சில நேரத்தில் வாயில் ஏற்படக்கூடிய நோய்களினால் தோன்றும் நச்சுப்பொருள்கள் உடலெங்கும் பரவி இதயம், சிறுநீரகம், இரைப்பை,மூட்டுகள்,தொண்டை முதலிய உறுப்புகளைப்பாதிக்கும்.வளமான வாழ்வு வாழ வேண்டுமாயின் நம்முடைய பற்களையும், வாயினையும், நோய்கள் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

regular teeth maintanance for good health


பற்களின் மாடல் படத்தினை காண்பிக்கும் டாக்டர்.. (பைல்படம்)

regular teeth maintanance for good health

ஈறுகளினால் ஏற்படும் பாதிப்பு

பற்களில் படியும் படலத்தை (பிளாகு) அகற்ற வேண்டும். இதனை அகற்றாவிட்டால் பற்களில் கறையாக மாறி உறுத்தலினால் ஈறுகள் சிவந்து வீங்கி ரத்தம் கசியும் நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.மேலும் ஈறுகள் காயம்அடையும்போதும் பிற பொருள்களை உறுத்தும்போதும் ரத்தம்கசியும் நுண்ணுயிர் கிருமிகள் ஈறுகளைத் தாக்கும்போதும் ஈறுகள் தடித்து புண்ணாகி ரத்தம் கசியும்.

இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தற்காலத்தில் நாகரிக வாழ்க்கை வாழ்ந்தாலும் கிராமப்புறங்களில் இன்றும் பல்துலக்க மண், மணல், சாம்பல், செங்கற்பொடி, கரிப்பொடி, காப்பிப் பொடி, போன்றவற்றைச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் சொல்வதினால் பற்களில் கூச்சம் ஏற்பட்டு பற்களில் உருவம் சிதைந்து போவதற்கும் காரணமாகின்றன. ஒரு சிலருக்கு பற்களில் காரை படிதலால் பற்களின் நிறம் அடியோடு மாறி விடுகிறது. மேலும்நாம் சாப்பிட்டவுடன் பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

அவ்வாறு சுத்தம்செய்து அகற்றாத பட்சத்தில் பற்களில் பற்படலமாய் மாறி காரையாக உருவெடுத்து ஈறுநோய்கள் தோன்ற காரணமாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் பற்பசையைக் கொண்டும், நல்ல பிரஷ் மூலமாக பற்களைத் துலக்குதல் வேண்டும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி எனும் பழமொழிப்படி ஆலவிழுதுகளையும் வேலங்குச்சிகளையும், நன்கு நசுக்கி மிருதுவாக்கி பற்களை நன்றாக துலக்கலாம்.

சொத்தை பற்கள் எப்படி?

பற்களில் பெருமளவில் தாக்கும் நோய்களில் பற்சொத்தை (டென்டல் கேரிஸ் ) நோயாகும். இது ஒரு சிதைவு நோய். பற்களை நாள் தோறும் சரிவரத் துலக்காத போது உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருள்களும், சாக்லேட் ,ஐஸ்கிரீம்,பிஸ்கட் , மிட்டாய், போன்ற தின்பண்டங்களும் பற்களின் இடைவெளிகளிலும் பற்களின் குழிகளிலும் தங்குகின்றன. அவைகளை உமிழ்நீர் அமில அணுக்கள் தாக்குகின்றன. அதனால் ஓர் அமிலம் தோன்றி பற்களில் தங்கி பற்சிப்பியைச் சிறுக சிறுக சிதைக்கிறது. இவ்வாறு ஏற்படக்கூடிய பற்சிதைவே நாளடைவில் பற்சொத்தையாக மாறுகிறது.

சொத்தைபல் தடுக்கும் வழிமுறைகள்

பற்களை நன்றாக துலக்கி உணவுப்பொருள்கள் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவிற்கு முன்பும் பின்பும் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.பற்களில் ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை கலந்த உணவுப்பொருள்களை மிகுதியாக உண்ணக்கூடாது. சாக்லேட், ஐஸ்கிரீம், மிட்டாய், ஆகிய தின்பண்டங்களை மிகுதியாக உண்ணுவதும், வாயில் வைத்து உறங்கவும் கூடாது.

regular teeth maintanance for good health


regular teeth maintanance for good health

செயற்கைப் பல்செட்டின் மாடல் (பைல் படம்)

உணவு உட்கொள்ளும் காலங்களுக்கிடையே நொறுக்குத்தீனி உண்ணுதல் கூடாது. புளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தினால் பற்சொத்தையினைத் தடுக்கலாம். மேலும் இப்பற்பசையினை விழுங்காதிருத்தல் நல்லது. பற்சொத்தை வந்துவிட்டால் அதனை மருந்து தடவி குணப்படுத்த முடியாது. மாத்திரை கொடுத்தும் போக்கமுடியாது. பற்சொத்தை, பற்கூழ்ப்பகுதியைத் தாக்காதிருக்கும் போதே பல் டாக்டர் இயந்திரத்தால் பற்சொத்தையை அகற்றி அப்பகுதியினை அடைப்புகளால் அடைத்துவிடுவார். முன் பற்களுக்கு பற்களின் நிறத்திற்கேற்ற ரோபின் அடைப்புகளும், பின் பற்களுக்கு உணவினைக் கடித்து அரைப்பதற்கேற்ற உறுதியான உலோக அடைப்புகளும் டாக்டர்பொருத்துவார். பற்சொத்தை, பற்கூழினைத்தாக்கும் போது பற்கூழ் அகற்றும் மருத்துவத்தை மேற்கொண்டு அடைப்புகளைப் பொருத்திக்கொள்ளவேண்டும். பற்சொத்தையானது பெருமளவில் பரவி வேர்முனையில் சீழ்கட்டிகளை உண்டாக்கினால் வலியும், வீக்கமும் தோன்றும் , வீக்கத்தைக் குறைக்க மருத்துவம், செய்தபின், அப்பல்லினை பக்குவமாக அகற்றிவிடவேண்டும்.

ஒரு பல்லானது தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தால் பல் டாக்டரிடம் சென்று உடனே அப்பல்லினை அகற்றிவிடுதல் நல்லது. இதனால் பிற பற்களும் நோயில் இருந்து தப்பிக்கும். பல்லினை அகற்றிய பின் அந்த இடத்தில் புண் ஆறிய பின் செயற்கைப் பல்னைக் கட்டிக்கொள்ளலாம். பல்போனால் சொல்போகும் என்னும் பழமொழிக்கேற்ப பல்லை அகற்றிவிட்டால் அந்த இடத்தில் வேறு செயற்கை பல்லினைக் கட்டிக்கொள்வது பாதுகாப்பானது.மேலும் செயற்கைப்பல்லினால் நாம் உணவினை நன்கு கடிக்க முடியும். சொற்களும்நன்கு வரும். முகப்பொலிவும் குன்றாது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

காலையில் விழித்தவுடன் மற்றும் இரவில் படுக்க போவதற்கு முன்பாகவும் பற்களை நன்கு பற்பசையினை வைத்து துலக்குதல் வேண்டும். பல் இடுக்குகளையும், இடைவெளிகளையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பற்களைத் துவக்கிய பின் ஈறுகளை இதமாக அழுத்திவிட வேண்டும். உணவிற்குமுன்பும், பின்பும் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். பச்சைக்காய்கறிகளையும், பழவகைகளையும் உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.மிருதுவான உணவுப்பொருள்களை உணபதோடு சற்று கடினமான உணவுப்பொருள்களையும் கடித்து உடைத்து மென்று உண்பதால் பற்களில் படியும் பற்படலம் அகலும்.

வாயில்தோன்றும் எப்புண்ணும் 2 வாரத்திற்கு மேல் நலமாகாமல் இருப்பின் அது புற்று நோயாகவும் இருக்ககூடுமாகையால் உடனே பல் டாக்டரை அணுகவேண்டும். ஆண்டுக்கு இருமுறை தவறாமல் தக்க பல் டாக்டர்களிடம் பற்களைப் பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.எனவே பற்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தவேண்டும். நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பது பற்களே .மற்ற உறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல பற்களுக்கும் அளிப்பது உடலுக்கு நலம் பயக்கும் என பல்மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Updated On: 5 Oct 2022 8:21 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...