/* */

குடல் புண்களை குணப்படுத்தும் ராண்டக் மாத்திரை பற்றி தெரியுமா?

உடல் நலம் நன்றாக இருந்தால்தான் உங்களுடைய மனநலமும் நன்றாக இருக்கும். இதனடிப்படையில் உங்கள் ஆரோக்யம் சிறக்க தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளுங்க.

HIGHLIGHTS

குடல் புண்களை குணப்படுத்தும் ராண்டக் மாத்திரை பற்றி தெரியுமா?
X

rantac tablet uses in tamil

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருமே அவரவர்களின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டவேண்டியது மிக மிக முக்கியம். ஒரேகுடும்பத்தில் பலர் அருகருகே இருந்தாலும் அவரவர் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை அவரவர்கள் வெளியே சொன்னால்தான் மற்றவர்களுக்கு தெரியும். ஒரு சில நேரங்களில் பரபரப்பான உலகில் நமக்கு ஏற்பட்டதை மற்றவர்களிடம்சொன்னால் அவர்கள் வேலையும் கெட்டுவிடும் என்ற அவசரத்தில் சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.

அது நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே சொல்லாமல் விடுவதன் விளைவு அது பெரிய சிக்கலில் கொண்டு போய்விட்டுவிடும். எப்படிங்க? என கேட்போருக்கு இதுதாங்க பதில்.அதாவது எந்தவொரு நோயும் ஆரம்ப நிலையில் டாக்டரிடம் சென்றுவிட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடுவார். நோய் முற்றிய பின் நாம் செல்லும்போது மெத்த படித்த டாக்டராலேயே முடியாமல் போய்விடுகிறது. எனவே யாராக இருந்தாலும் உங்களுக்கு உடலளவில் ஏதாவது அசௌகரியம் ஏற்படுகிறதா? உடனே டாக்டரை சென்று பாருங்க. நமக்கு வேலை என்பது வருடம் முழுக்க இருக்கத்தான் செய்யும்.. ஆரம்ப கட்டத்தில் டாக்டரிடம் காண்பித்தால் செலவு ,பிரச்னைகள் குறைவு. அதுவே நோய் முற்றிய பின்னர் சென்றால் எல்லாமே பிரச்னை தான் போங்க...

rantac tablet uses in tamilநமக்கு குடலில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய டாக்டரிடம் செல்லும்போது அவர் பரிந்துரைக்கும் மாத்திரைதான் ராண்டக். இது இரைப்பையில் உருவாகும் அமில உற்பத்தியின் அளவை குறைக்கிறது. மேலும் இரைப்பை மற்றும் குடல் புண்களை குணமாக்கும் வல்லமை பெற்றது. மேலும் இரையக நோய் மற்றும் சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி போன்ற நிலைமையைக் கட்டுப்படுத்தவும் இம்மருந்து உதவுகிறது.

நோயாளிகள் இம்மாத்திரையை அதிகம் உட்கொண்டால் நிமோனியா வருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. மார்பு வலி, காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உள்ளிட்டவைகளே அறிகுறிகளாகும்.உங்களுக்கு டாக்டர் இந்த மாத்திரையினை பரிந்துரைத்தால் இதனால் உங்களுக்கு எந்தவித அலர்ஜியும் இல்லை என்பதை உறுதி செய்துக்கங்க. கல்லீரல், சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள், போஃபைரியா போன்ற மற்ற உடல் நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் இதுகுறித்து டாக்டரிடம் கேட்டு செய்யுங்க.கர்ப்பிணிப்பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை உட்கொள்ளும் முன் டாக்டரிடம் இதுகுறித்து தகவல் சொல்லிவிட்டால்அவர் அதற்கேற்றாற் போல் உங்களுக்கு மருந்துகளை பரிந்துரைப்பார்.

முன்னெச்செரிக்கை

rantac tablet uses in tamilடாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே இந்த மாத்திரையினை நீங்கள் உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே சுயமாக கடைகளில் வாங்கி சாப்பிடுதல் கூடாது. டாக்டர் என்ன அளவு சொல்கிறாரோ அதனை கடைப்பிடித்து அதன் படி உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையினை வாய்வழியாக எடுத்துக்கொண்டு தண்ணீ்ரில் விழுங்க வேண்டும். உங்கள் வாயில் வைத்த பிறகு இதனை மெல்லக்கூடாது. அல்லது அதுவாகவே கரைந்துவிடும் எனவும் விட்டுவிடக்கூடாது. மாத்திரையை கரைக்கும் நீரின் அளவு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைஅளவைப் பொறுத்ததாகும். அல்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமாகும் வரை இம்மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டும். அல்சர் குணமாக 8 வாரங்கள் வரை ஆகும்.

பக்க விளைவுகள்

rantac tablet uses in tamilராண்டக் மாத்திரையினால் பக்க விளைவுகள் ஏற்படும். துாக்கமின்மை, தலைச்சுற்றல், தலைவலி, மென்மையான அல்லது ஆண்களுக்கு வீக்கமான மார்பகங்கள் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், குமட்டல் , வாந்தி போன்ற ஒருசில பொதுவான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.இந்த மருந்தினை சாப்பிடுவது என்பது நபருக்கு நபர் மாறுபடும். அந்த வகையில் இதனை சாப்பிடும் முன் கேஸ்டிரோன்டர்லாஜிஸ்ட் ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொள்வது நலம்.

டியோனல் அல்சர்

ராண்டக் மாத்திரையானது சிறுகுடலில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த குறுகிய காலசிகிச்சைக்கு பயன்படுகிறது. சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மீண்டும் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

இரைப்பை புண்

நமக்கு ஏற்படும் வயிற்றுப்புண்களை ஆற்றும்குறுகிய காலசிகிச்சைக்கு ராண்டக் மாத்திரையானது பயன்படுகிறது. புண்கள் குணமானதும் இது ஒரு பராமரிப்பு சிகிச்சையாகவும் பயன்படுகிறது.

மிகைசுரப்பு நிலை

இரைப்பையில் சுரக்கும் அமிலத்தின் அளவு வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும் நிலையை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் ராண்டக் பயன்படுகிறது.

சோலிங்கர்-எலிசன் நோய்க்குறி

இரைப்பையில் அமில சுரப்பு வழக்கத்துக்கு அதிகமாக இருக்கும் இந்த அரிதான நோயின் அறிகுறிகளைத் தணிக்க ராண்டக் மாத்திரை பயன்படுகிறது.

உணவுக்குழாய் அழற்சி

இரைப்பையிலிருந்து நீண்ட நேரம் அமிலம் பின் வழிதல் காரணமாக உணவுக்குழாயில் அரிக்கப்பட்டு இருக்கும் ஒரு நிலைக்கு சிகிச்சையளிக்க ராண்டக் மாத்திரை பயன்படுகிறது.

இரைப்பை உணவுக்குழாய் பின்வழிதல் நோய்

இரைப்பையில் உற்பத்தியாகும் அமிலம், உணவுக்குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற நிலைமையில் சிகிச்சை அளிக்க ராண்டக் மாத்திரையானது பயனளிக்கிறது.

எந்த நோய்க்காக மருந்து நாம் ஏற்கனவே சாப்பிடுகிறோம் என்பதையும் நோயாளிகள் டாக்டரிடம் முன்னதாகவே தெரிவித்துவிடுதல் நலம். அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்கு இந்த மாத்திரையின் அளவினை டாக்டர்கள் பரிந்துரைப்பர்.

Updated On: 17 Aug 2022 8:15 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...