ராகியிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ...படிங்க...

Ragi Benefits in Tamil

Ragi Benefits in Tamil

Ragi Benefits in Tamil-கிராமப்புறங்களில் முக்கிய உணவாக இருந்த ராகி, இன்று நகர்ப்புறங்களை நோக்கியும் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதிக்கு அரு மருந்து ராகி...படிங்க....

Ragi Benefits in Tamil

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்திலும் போதிய சத்துகள் இருக்குமா? என்பது ஒருசிலருக்குசந்தேகத்தினை உருவாக்குகிறது. வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சத்துகள் மிகுந்த ராகியைப் பயன்படுத்தலாம். இதில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் உள்ளது.

கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார்.

வயல்களில் விளைந்த பயிரை காயவைத்து பின்னர் கிடைக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட ராகி (கோப்பு படம்)

தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், கேழ்வரகு ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.

கேழ்வரகு வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

ராகி களிக்கு சைடு டிஷ் வத்தக்குழம்பு மற்றும் தாளித்த மோர்.. ஆஹா ...என்ன ருசி...கடிச்சுக்க சின்ன வெங்காயம்(கோப்பு படம்)

சாகுபடி முறை

கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.

கேழ்வரகுக் களி

கேழ்வரகுக் களி என்பது நன்கு அரைத்த கேழ்வரகு மாவை கொதிநீரில் இட்டு கிளறி உருண்டையாக வார்த்துச் செய்யப்படும் உணவு வகையாகும். இது கர்நாடக மாநில கிராமப்புறங்களில் முக்கிய உணவாக உள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இவ்வுணவு "ராகி களி" என அழைக்கப்படுகிறது. இக்களியில் சேர்க்கப்படும் பொருள்கள் இடத்துக்கிடம் சற்று மாறுபடும்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 200 கிராம், அரிசி நொய் - 100 கிராம், தண்ணீர் - 450 கிராம், உப்பு - தேவையான அளவு.

சற்று கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றி அந்நீரில் அரிசிநொய் (அ) கம்புநொய் இட்டு சிறிது வேக விடவேண்டும். அதில் கேழ்வரகு மாவை இடவும். நீர் கொதித்தபின் தட்டையான பாத்திரத்தால் மூடி மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். ஆவியில் நன்கு வெந்தவுடன 2 (அ) 3 நிமிடம் மரக்கரண்டியால் கட்டடியில்லாமல் கிளரவேண்டும். பாத்திரத்தில் மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பயன்படுத்த வேண்டும்

ராகி மாவினல் பல கூட்டுப்பொருள்கள் சேர்த்து தயார் செய்யப்பட்ட ராகி தோசை (கோப்பு படம்)

ராகி ரொட்டி என்பது இந்திய மாநிலமான கர்நாடகத்தின் காலை உணவு ஆகும். இது தெற்கு கர்நாடகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான உணவு. இது கேழ்வரகு மாவினால் தயாரிக்கப்படுகிறது. ராகி-ரொட்டி என்ற கன்னடச் சொல்லுக்கு கேழ்வரகு ரொட்டி என்று பொருள். இது அக்கி ரொட்டியைப் போலத் தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகு மாவானது உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கப்படுகிறது. மாவு பிசையும்போது; வெட்டிய வெங்காயம் கேரட் போன்றவை சேர்க்கப்படுகின்றன, இதனுடன் கொத்தமல்லித் தழை மற்றும் சீரகம் ஆகியவற்றையும் சுவைக்காக சேர்க்கலாம். தோசைக் கல்லில் சற்று எண்ணெயைத் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டி, சிறிதளவு எண்ணெயை ரொட்டிமேல் பூசி நன்கு வெந்த பின்னர் சூடாக பரிமாறவேண்டும். உடன் சட்டினி இருந்தால் நல்லது.

ராகி மாவில் செய்யப்பட்ட ராகி இட்லி சுவையான சாம்பார் சைடு டிஷ் (கோப்பு படம்)

தேவையான பொருட்கள்:

1/2 கிண்ணம் கேழ்வரகு மாவு, வெட்டிய வெங்காயம், 1/4 கிண்ணம் கேரட், 1/2 தேக்கரண்டி குறைந்த கொழுப்பு தயிர், 1 / 2 தேக்கரண்டி பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு

*ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு போதுமான தண்ணீரை இட்டு பிசையுங்கள்.

*மாவை 4 சம பாகங்களாக பிரிக்கவும்

*தோசைக்கல்லில் மாவை, 125 மிமீ (5 ") விட்டத்தில் வட்டவடிவில் தட்டவும்

*தோசைக்கல்லில் சில நொடிகள் விட்டு ரொட்டியை திருப்பிப் போடவும்.

*அடுத்தப் பக்கத்தையும் சில நொடிகள் வேகவைக்கவும்.

*ஒரு ஜோடி இடுக்கிகளின் துணையுடன் ரொட்டியை எடுத்து, ரொட்டியின் இரு பக்கங்களிலும் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும் வரை தீ வெப்பத்தில் சுடவும்.செய்த பின்னர் சூடாக பரிமாறவும்

மருத்துவ பயன்கள்

ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

தாவர வகை இரசாயன கலவைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.குடலுக்கு வலிமை அளிக்கும்.

உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story