ஆரோக்யம் குறித்த டாக்டர் கேள்வி-பதில் பகுதி- 3: படிச்சு பாருங்க....

question and answers,about health நாளுக்கு நாள்நோய்கள் பெருக்கத்தினால் நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் வருகிறது. விளக்கம் அளிக்கிறார் டாக்டர்...படிங்க...

HIGHLIGHTS

ஆரோக்யம் குறித்த டாக்டர் கேள்வி-பதில்    பகுதி- 3: படிச்சு பாருங்க....
X

உடல் ஆரோக்யம் சம்பந்தமான  டாக்டர் கேள்வி-பதில்  (கோப்புபடம்)


question and answers,about health

உங்கள் ஆரோக்யம் உங்கள் கையில் என்பதே தற்போதைய தாரக மந்திரமாக உள்ளது.காரணம் கொரோனா வந்த போது உறவுகள் கூட போய் பார்க்க அனுமதிக்கவில்லை. ஆகையால் நம் ஆரோக்யம் கெட்டுவிட்டால் நாம்தான் சிரமப்பட வேண்டும். எனவே முடிந்தவரை அவரவர்களின் ஆரோக்யத்தில் தினந்தோறும் அக்கறை கொள்ளுங்கள். உணவுகளை தேர்ந்தெடுத்து வயதுக்கேற்றவாறு சாப்பிடுங்கள். பொரித்தஉ ணவுகளை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்...

*கே: உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் அடிக்கடி வியர்க்கின்றன?- இதற்கு என்ன காரணம்? என்ன சிகிச்சை?

*ப:இந்தக் கோளாறு பெரும்பாலும் அதிக உஷ்ண சூழ்நிலையாலும் மனப்பிரச்னைகளாலும் எளிதில்உணர்ச்சிவசப்படுவதாலும், பயம், பதற்றம் போன்றவற்றினால் ஏற்படுகிறது. இதனைப்போக்க வியர்வை உண்டாகும் இடத்தில் பூசிக்கொள்ளும் படியாகச் சில மருந்துகள் உள்ளன. அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது உசிதமில்லை. ஆகவே மருத்துவ நேரடிப் பார்வையில் தொடர்ந்து பல மாதங்களுக்குச் சிகிச்சை பெற்றால் குணம் கிடைக்கும்.

question and answers,about health


question and answers,about health

*கே: காசநோய் வரக் காரணம் என்ன?

*ப: காசநோய் உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். காசநோய்க்குக் காரணம் மைகோ பேக்டரியம் ட்யூப்ர் குலோசிஸ் என்ற கிருமியே. நுரையீரல் காசநோயின் அறிகுறிகளாவன. இருமல்,காய்ச்சல், மார்புவலி, எடையிழப்பு, பசியின்மை, சோர்வு, எப்போதாவது இருமலில் ரத்தம், காசநோய் உடலின் எந்தப்பகுதியைப் பாதிக்கிறதோ அதைப்பொறுத்து அறிகுறிகள் இருக்கும். பெரும்பாலும் 90 சதவீத நுரையீரல்களே காசநோயால் பாதிக்கப்படுகின்றன.

*கே: உடலில் படை எப்படி வருகிறது? இதனைப் போக்க வழி என்ன?

*ப: படை என்பது ஒரு காளான் நோய். பூஞ்சைக் காளான் கிருமிகள் தோலை பாதிக்கும்போது ''காளான் படை'' ஏற்படும். இது ஒரு தொற்று நோய் படை நோய் உள்ளவரிடமிருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்புமூலம் பரவுகிறது. இந்நோயைப் போக்க பல்வே மருந்துகள் உள்ளன. கீடோகோனசோல் மற்றும் ஃப்ளுக்கோனசோல் மருந்துகள் அண்மையில் வந்துள்ளவை. இவற்றில் ஒன்றைப் படையுள்ள இடத்தில் தினமும் பூசினால் இரண்டு வாரங்களில் நோய் குணமாகும். சுயசத்தம் காத்தால் படைக்கு உடலில் இடமில்லை.

question and answers,about health


question and answers,about health

*கே: லோ பிரஷர் ஏற்படக் காரணம் என்ன?

*ப:குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. அண்ணீரக நோய் மற்றும்சில மருந்துகள் , நோய் குறைவது போன்ற பல காரணங்களால் ரத்தஅழுத்தம் குறைகிறது.

*கே: குழந்தைப் பருவ தடுப்பூசிகள் எத்தனை ஆண்டுகள் எதிர்ப்பு கொடுக்கும்?

*ப:பொதுவாக குழந்தைப் பருவத்தில் போடப்படுகின்ற தடுப்பு ஊசிகள் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச்சக்தியைக் கொடுக்கும். காரணம் என்ன வென்றால், மேற்சொன்ன தடுப்பு ஊசிகள் தொடர்ந்து பணி செய்யும் பொருட்டுக் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஊக்குவிப்புத் தடுப்பு ஊசிகளையும், குழந்தைகளுக்குப் போடுவதுதான்.

*கே: கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு வாயிலும் மூக்கிலும் புண் வருகிறதே? ஏன்?

*ப:கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு வெளிப்படும் மூச்சு வெப்பமாக உள்ளது. மெல்லிய சிலேட்டுப் படலத்தால் மூடப்பட்டுள்ள மூக்கும் வாயும் இந்த வெப்பத்தைத் தாங்கமுடியாது. அதனால் புண்கள் தோன்றுகிறது. சிலபோது ஹெர்பீஸ் என்ற வைரசும் இதற்கு காரணமாக அமைகிறது.

question and answers,about health


question and answers,about health

*கே: அடிக்கடி மூச்சு வாங்குகிறது? சிறிது துாரம் நடந்தாலே மூச்சு வாங்குகிறது? என்ன காரணம்?தீர்வுதான் என்ன?

*ப: மூச்சு வாங்குவதற்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாகச் சொல்லப்போனால் இதயம் ,நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், ரத்தம் தொடர்பான குறைபாடு அல்லது பாதிப்பு இ ருந்தால் மூச்சு வாங்கும். நடந்தாலே மூச்சு வாங்குவது என்பது நோயின் தீவிரத்தை உணர்த்துகிறது. ஆகவே உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரை அணுகி, இதற்கான காரணத்தினைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கேற்ப சிகிச்சை கிடைக்கும். நோயும் தீரும்.

*கே: பொறியல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா?

*ப: பொறியல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றபோது புற்று நோயை உண்டாக்கும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் என்ற வேதிப்பொருளாக மாறி நம் உணவில் சார்ந்து விடலாம். ஆகையால் சமையல் எண்ணெயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓரிரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. கெட்டியாகிவிட்ட எண்ணெயையோ அல்லது கருப்பாகிவிட்ட எண்ணெயையோ அறவே பயன்படுத்தக்கூடாது.

*கே: மூக்கில் சதை வளர்ந்தால் சளி பிடிக்குமா?

*ப: சந்தேகமென்ன? மூக்கில் சதை வளர்ந்தால் அதில் நுண்கிருமிகள் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகும். கிருமிகள் புகுந்தால் சளி பிடிக்கவும் வழி கிடைக்குமல்லவா? இதுதான் காரணம்.

*கே: பல் கூச்சம், மற்றும் பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?

*ப: மாவு பதார்த்தங்கள், வெண்சர்க்கரை கொண்ட உணவுப் பதார்த்தங்கள், சாக்லேட்ஐஸ் க்ரீம், போன்றவை பற்களின்மேல் உள்ள பற் சிப்பியைக் கரைத்து ஊறுவிளைவிக்கின்றன. தவிர சிலருக்குப் பாரம்பரியநோயாக பற்சொத்தை ஏற்படக்கூடும். பற்சிப்பி கரையும் நிலையில் பல் கூசுதல் ஏற்படும்.

question and answers,about health


பொறித்த எண்ணெயினை மீண்டும் உபயோகிப்பதால் கேன்சர் வர வாய்ப்பு உண்டு என ஆய்வு சொல்கிறது (கோப்பு படம்)

question and answers,about health

*கே: வயிற்றில் சில சமயங்களில் இரைச்சல் ஏற்படுகிறதே ஏன்?

*ப: புரதச்சத்து நிறைந்த பருப்பு, பயறு பால், முட்டை, மற்றும் மாவுச்சத்து மிகுந்த உருளைக்கிழங்கு, வாழைக்காய், போன்ற உணவுகளைத் தேவைக்கு மேல் உண்ணும்போது இவை உணவுப்பாதையில் வாயுவை உற்பத்தி செய்யும் குடலில் திரவ நிலையில் உள்ள உணவுடன் இந்த வாயு பயணம் செய்யும் போது குமிழ்களாக உருவாவதால் வயிற்றில் இரைச்சல் கேட்கும். மேலும் வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, குடல் காசநோய், இரைப்பைப்புண், அஜீரணம், உளவியல் கோளாறுகள், காரணமாக குடலின் அசைவுகள் அதிகமாகும்போதும் வயிற்றில் இரைச்சல் ஏற்படும்.

*கே: யானைக்கால் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?

*ப: யானைக்கால் வியாதி கொசுக்கடியால் பரவக்கூடிய நோய். இந்த ஃபைலேரியா நோய் காரணமாகத் தொடையில் நெறி சுழற்சி ஏற்பட்டு அடிக்கடி குளிர் காய்ச்சல் ஏற்படும். பலமுறை சுழற்சி நிலை ஏற்படுதல் காரணமாக காலில் நிணநீர் தேக்கம் ஏற்பட்டு, கால் வீங்கத்தொடங்குகிறது.இவ்விதம் குளிர்காய்ச்சல் ஏற்படாமல் உடலிலுள்ள நோயினைக் குணப்படுத்த மாத்திரை மற்றும் பெனிசிலின் ஊசிகள் தேவைப்படும்.

question and answers,about health


question and answers,about health

*கே: அடிக்கடி வாந்தி வருகிறது? சாப்பிடமுடியவில்லை? காரணமென்ன?

இரைப்பையில் புண் இருந்தால் அடிக்கடி வாந்தி வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. இது தவிர குடலில் அடைப்பு ஏற்படுமானால் , மூளை நரம்புக் கோளாறு இருந்தால் குடலில் புழுக்கள் இருந்தால்,சிறுநீரில் கிருமித் தொற்று இருந்தால் மனநிலை வேறுபாடுகள் ஏற்பட்டால் அடிக்கடி வாந்தி ஏற்படலாம். உங்கள் குடும்ப டாக்டரின் நேரடி ஆலோசனையின் பேரில் மருந்துகளை சாப்பிடுங்கள். விரைவில் குணமடைவீர்கள்.

(இன்னும் வளரும்...)

நன்றி:டாக்டர்.மாணிக்கவேல்.

Updated On: 25 Dec 2022 2:49 PM GMT

Related News