/* */

வாழ்க்கைக்கு பயனளிக்கும் டாக்டர் - கேள்வி பதில் பகுதி -2

question and answers regarding health அன்றாட பரபரப்பான வாழ்க்கையில் யாருமே அவரவர்களுடைய ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஆரோக்யம் குறித்த டாக்டர் கேள்வி-பதில் படிச்சு பாருங்க...

HIGHLIGHTS

வாழ்க்கைக்கு பயனளிக்கும்  டாக்டர் - கேள்வி பதில் பகுதி -2
X

question and answers regarding health

சுவர் இருந்தால்தான் சித்திரமானது வரைய முடியும். அந்த சுவர்தான் நம் ஆரோக்யம். நம் உடலானது ஆரோக்யமாக இல்லாவிட்டால் எல்லாம் பயனற்று போய்விடும். எனவே நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி ,நடைப்பயிற்சி, எண்ணெயில் பொறித்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்ற காரணிகளைப் பயன்படுத்தினால் நல்லஆரோக்யம் கிட்டும்.

question and answers regarding health


ஆரோக்யத்தைப் பாதுகாக்க தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை (கோப்பு படம்)

question and answers regarding health

ஆனால் பலரும் தம்முடைய ஆரோக்யத்தில் போதிய அக்கறை செலுத்தாதன் விளைவு ஆஸ்பத்திரிகளிலும் மெடிக்கல்ஸ்டோர்களிலும் இன்று பெருங்கூட்டத்தினைத்தான் காண முடிகிறது. ஒரு சிலரைப் பார்த்தால் தட்டில் சாப்பாடு சாப்பிடுவது போல் மாத்திரைகளை கொத்து கொத்தாக சாப்பிடுகின்றனர்.

இவற்றையெல்லாம் தடுக்க அவரவர்களின் ஆரோக்யத்தில் அக்கறையாக இருப்பது அவசியம். சரி. ஒரு சில சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டு அதனைப் பதிலாக சொல்வதை உங்களுக்கு விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது படிங்க...

கே:பிறவியிலேயே காது கேட்காமலும் வாய் பேச இயலாமலும் இருப்பவர்களை நவீன சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா?

முடியும் என்று உறுதி சொல்லவும் முடியாது. முடியாது என்று ஒதுங்கிச் செல்லவும் இயலாது. காது கேட்காமைக்கும்வாய் பேச இயலாமைக்கும் காரணம் அமைவதைப் பொருத்து சிகிச்சையின் பலனும் அமையும். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களிடம் நேரில் அழைத்துச் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை செய்தல் நலம்.

கே:தண்ணீரில் நின்றால் கால்களில் அரிப்பு ஏற்படுகிறது?இது எதனால் டாக்டர்? இதைக்குணப்படுத்த வழி உண்டா?

காளான் கிருமிகள் கால் பாதங்களைப் பாதித்திருந்தால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனைக் குணப்படுத்தக் காளான் கொல்லிக் களிம்புகள் உதவும்.தினமும் காலை, இரவு இருவேளைகளில் சோப்புத் தண்ணீரில் கால்களைச் சுத்தப்படுத்தி, ஈரத்தைத் துடைத்துவிட்டு காளான் கொல்லிக் களிம்பைத் தடவ ஒரு வாரத்தில் அரிப்பு நின்றுவிடும்.

கே:சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் எளிதில் ஆறுவதில்லையே ஏன்?

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் பொதுவாகவே தடுப்பாற்றல் சக்தி குறைவாகவே இருக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பது நோய்க்கிருமிகள் வளர்ச்சியடைய வசதியாக இருக்கிறது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகளின் புண்கள் சீக்கிரம் குணமடைவதில்லை. மேலும் ரத்தநாளங்கள் குறுகலடைவதும் நரம்பூட்டம் குறைவதும் மற்றும் பல காரணங்களாகும்.

question and answers regarding ஹெஅழ்த்question and answers regarding health

கே:எந்தவயது முதல் ''யோகா'' பயிற்சிகளை மேற்கொள்ளலாம்?

ஐந்து வயதிலிருந்து காரணம் இந்த வயதில் உடலில் உள்ள குருத்தெலும்புகளில் சுமார் 80 சதவீதம் முழு எலும்பாக வளர்ச்சி பெற்றிருக்கும். அப்போதுதான் யோகா பயிற்சிகளை முறைப்படி செய்ய இயலும். இந்த வயதிற்கு முன்பு யோகா செய்தால் எலும்புகளின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் மாறுதல்கள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கே:சில வேளைகளில் உடல் குளிரில் விறைப்பது போல் தானாகவே புல்லரிக்கின்றதே- எதனால்?

புல்லரிப்பது என்பது உடலிலுள்ள மயிர்க்கால்கள் நிமிர்வதன் காரணமாக ஏற்படுவது எனக்கூற வேண்டும். குளிர் மற்றும் மயிர்க் கூச்செரியும் சம்பவங்கள் இந்த மயிர்க்கால்களை நிமிர வைக்கின்றன. திடீர் அதிர்ச்சி, பயம், மன சங்கேதம் போன்ற நிலைகளில் இவ்விதம் நேர்வதற்குத் தன்னிச்சை நரம்புகளின்செயல்தான் காரணம் என்று தெரியவருகிறது.

கே:நாம் உள்ளிழுக்கும்போது காற்று நுரையீரல், இதயம், உதரவிதானம் போன்ற மார்பக உறுப்புகளைத்தானே சென்றடைகிறது. பிறகு ஏன் டாக்டர் வயிறு எழுந்து எழுந்து இறங்குகின்றது?

நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று நுரையீரல்களுக்கு மட்டுமே செல்லும் இதயம், உதரவிதானம், ஆகியவற்றுக்குச் செல்வதில்லை. மூச்சு இயக்கத்தின்போது மார்புத் தசைகள் விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும். மார்பையும் வயிற்றையும் பிரி்க்கின்ற உதரவிதானம் மேலும் கீழுமாக விரிந்து சுருங்கும் ஆகையால்தான் உதரவிதானத்தை ஒட்டியுள்ள வயிற்றுத் தசைகளும் சுவாசத்தின்போது ஏறி இறங்குகின்றன.

question and answers regarding health


நம் ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்களும், சிவப்பணுக்களும் (மாதிரி கோப்பு படம்)

question and answers regarding health

கே:நம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் இருந்தால் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா?

வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதும் குறைவதும் பல்வேறு சூழ்நிலைகளைப் பொருத்தது. அதன் எண்ணிக்கைக்கும் எதிர்ப்பு சக்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கிருமி பாதிப்பு நோய்கள் உண்டானால் கிருமிகளை எதிர்க்கும் முறையில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைவதும் அதிகரிப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவா, காரணமா, எனக் கூற முடியாது. லுகேமியா போன்ற ரத்த வெள்ளணுப் புற்று நோயில் வெள்ளையணுக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. புற்று நோய் எதிர்சிகிச்சை அளிக்கப்படும்போது வெள்ளையணு எண்ணிக்கை மிகவும் குறைகிறது. மேற்கூறிய இரண்டு நோய் நிலைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கிறது.

கே:பிளாக் ஹெட்ஸ் என்றால் என்ன? இதுவும் மருவும் ஒன்றா?

பிளாக் ஹெட்ஸ் என்பது பருக்களைத் குறிக்கும். மருக்களை அல்ல. பருக்களின் மேற்பகுதித் தோல் கறுப்பாகத் தோன்றுவதால் பருக்களுக்கு ஆங்கிலத்தில் இப்படியொரு பெயர் உண்டானது.

கே:ஒருவருக்கு எவ்விதக் காரணங்களால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது?மாற்றுச் சிறுநீரகம் எத்தனை ஆண்டுகள் சீராகச் செயல்படும்?

சிறுநீரகக் குறைவு காரணமாக உடலில் விஷப்பொருள்கள் சேர்ந்து, உயிருக்குஆபத்து ஏற்படுவது இன்று ஓர் அளவுக்குக் குணப்படுத்தக்கூடிய நிலை எனக் கூறலாம். டயாலிஸிஸ் மூலம் ரத்தத்தில் உள்ள விஷப்பொருள்களைக் கழுவி எடுத்து, வாரத்திற்கு ஒருமுறை உபயோகிப்பது, நித்யகண்டம் என்ற நிலையில் இருக்கும். நீரகப் பொருத்தல் மூலம் இந்நிலையைத் தவிர்க்கலாம் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை உடலுக்கு உதவும். இரட்டையராகப் பிறந்து அவர்களுள் ஒருவர் சிறுநீரகத் தானம் செய்தால் மற்றவர்களுக்கு நீண்ட ஆயுள் வாழ முடியும்.

question and answers regarding health


கண்களில் பார்வைக் கோளாறு உள்ளதா ? என கம்ப்யூட்டர் மூலம் பரிசோதிக்கும் கண்டாக்டர்.(கோப்பு படம்)

question and answers regarding health

கே:கம்ப்யூட்டர் கண் பரிசோதனை என்று போர்டு வைத்துள்ளனரே? அப்படியென்றால் என்ன டாக்டர்?

கண்ணில் ஏற்படுகின்ற பார்வைக் கோளாறைக் கம்ப்யூட்டர் மூலம் கணிப்பது கம்ப்யூட்டர் கண் பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. இதில் பார்வைக் கோளாறைக் கண்டுபிடிக்க ஆட்டோ ரிப்ரேக்டர் என்ற சிறு கருவி உபயோகிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் கண் டாக்டரின் பரிசோதனைப்படி பார்வைக் கோளாறைக் கணித்து சிகிச்சை செய்வதே சிறந்த முடிவு.

கே:கால் விரல்களின் நகங்களைவிட கை விரல்களின் நகங்கள் வேகமாக வளர்வது ஏன்?

இயற்கையில் பல நிகழ்ச்சிகள், ஏன் நிகழ்கின்றன. எனக் கூறுவது கடினம். அவற்றுள் இதுவும் ஒன்று. மிருகங்களில் முன்னங்கால்களில் உள்ள கூர் நகங்கள் தேய்வது கூடுதலாக இருப்பது ஓர் உண்மை. இது காரணமாக வளர்வதிலும் முன்னங்காலில் நகங்கள் வேகமாகச் செயல்படுகின்றன. இந்த மரபு,மனிதர்கள் நகத்திலும் இருப்பது எதிர்பார்க் கவேண்டியதுதான். முன்னங்கால் நகங்கள் தேய்வதுபோல், கைகளிலும் நகம் அதிகம் தேய்வது, அதிக நக வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கக்கூடும்.

கே:வயிற்றுப்புண்ணுக்கும், வாய்ப்புண்ணுக்கும் தொடர்பு உண்டா? இவற்றுக்கு என்ன சிகிச்சை செய்தால் குணமாகும்?

தொடர்பு உண்டு. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும்போது வயிற்றில் புண் ஏற்படுகிறது. இந்த அமிலமானது ஏப்பம், எதுக்களிப்பு மூலம் அடிக்கடி வாய்க்குப பயணம் செய்யும் போது வாய்ப்புண் ஏற்படுகிறது. இவற்றைச் சரிசெய்ய வயிற்றுப் புண் மருந்துகளைச் சுமார் ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அத்தோடு வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். தவிர கார உணவுகளைத் தவிர்த்து பால், மோர், தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளையும் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண்ணும் வராது. வாய்ப்புண்ணும் வராது.

கே:இனிப்புப் பொருள்கள் சாப்பிட்டால் ஒருவிதப் புளிப்புச்சுவை ஏன் ஏற்படுகிறது?

சர்க்கரை வெல்லம் போன்றவை வாயிலுள்ள உமிழ் நீரில் கரையும்போது அமிலமாக மாறுகின்றன. அதன் காரணமாகப் புளிப்புச் சுவை தெரியும் . சாக்கரீன் கலந்த இனிப்புகளை உண்டால் லேசாகக் கசப்புக்கூடத் தெரியும். வெல்லம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்கள் காரணமாகக் கரிப்பும், புளிப்பும் தோன்றுவதுண்டு.

கே:சாப்பிட்டஉடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது எதனால்? அதனைத் தீர்க்க வழி என்ன?

அமீபியாசிஸ் அல்லது ஜியார்டியாசிஸ் நோய் குடலில் இருந்தால், சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத்தோன்றும். மலப் பரிசோதனை மூலம் இதனை உறுதி செய்து, டாக்டர் ஆலோசனைப்படி தகுந்த அமீபாக் கொல்லி மருந்துகளையோ ,ஜியார்டியாக் கொல்லிமருந்துகளையோ ஒரு வாரத்திற்கு உட்கொண்டால் உங்கள் பிரச்னை தீரும். மேலும், சாப்பிடும் முன்பும் மலம் கழித்தவுடனும் கைகளைச் சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் இந்த பிரச்னை திரும்பவும் ஏற்படாது. காரம் நிறைந்த உணவுகளையும் அசைவ உணவுகளையும் குறைத்துக் கொள்வது நல்லது கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளும் குறைக்கப்பட வேண்டும்.

question and answers regarding health


ஆபீசிலோ அல்லது வீட்டிலோ வேலை செய்யும் போது தன்னையறியாமல் துாக்கம் நல்லதா? (கோப்பு படம்)

question and answers regarding health

கே:பகல் துாக்கம் உடம்புக்கு நல்லதா?

பகல் துாக்கம் நல்லதுதான் மனிதருள் மாத்திரம் அல்லாமல் மிருகங்களிடையேயும் இந்தப்பழக்கம் இருப்பது இதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. ஐரோப்பாவில் சில நாடுகளில் ஸ்லெஸ்டா எனப்படும் இந்த மதிய நேரத்தில் ஊரே உறங்குவது ஓர் உண்மை.

Updated On: 4 Dec 2022 4:42 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...