வாழ்க்கைக்கு பயனளிக்கும் டாக்டர்-கேள்விபதில் - பகுதி -1

question and answers regarding health நம்முடைய ஆரோக்யம் குறித்துநமக்கு பல கேள்விகள் எழுகின்றன. அனைத்தையும் நாம் டாக்டர்களிடம் நேரிடையாக கேட்பது என்பது இயலாத ஒன்று. எனவே டாக்டர்- கேள்வி பதில் பகுதி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

HIGHLIGHTS

வாழ்க்கைக்கு பயனளிக்கும்  டாக்டர்-கேள்விபதில் - பகுதி -1
X

question and answers regarding health


மாறிவரும் பரபரப்பான உலகில் மனிதர்களை நோய்கள் தாக்குவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்கள் தாக்குவதற்கான காரணிகள் என்னென்ன தெரியுமா?

முதல்ல நாம உழைக்கறதை குறைச்சிட்டோம்... இதனால் நோய்கள் அணிவகுத்து நிற்கின்றன. அக்காலத்தில் அதாவது ஒரு 10 வருடங்களுக்கு முன்பு வரை கூட மக்கள் உழைத்துக்கொண்டுதான் இருந்தனர். காலப்போக்கில் எல்லாமே ரெடிமேட் மயம் ஆகிவிட்டது. முதன் முதலா மாவு அரைக்க கிரைண்டர் வந்தது, பின்னர் மிக்சி, வாஷிங் மெஷின் என மெஷின்களின் ஆதிக்கம் வந்ததால் மனித உழைப்பானது குறைந்தே போனது. உழைப்பு குறைந்ததால் உடல் பருத்து போய் நோய்களின் கூடாரமாகிவிட்டது.

யாராவது நடக்கிறார்களா? எங்கு சென்றாலும் வண்டிதான்... நடந்தால் நாம் அழகு...ஒரு பாட்டே இருக்கிறது.நீ நடந்தால் நடையழகு என... பக்கத்து தெருவுக்கு போகவேண்டும் என்றால் கூட வண்டிதான். அதேபோல் எல்லாமே பிரிட்ஜ்ல் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதால் அதன்இயற்கைத்தன்மை முற்றிலும் அழிந்துவிடுகிறது. வெறும் சக்கையைத்தான் நாம் சமைத்து சாப்பிடுகிறோம்... கடைசியி்ல் நம் உயிர்போகும்போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்துதான் வழியனுப்புகிறார்கள் ...இதுபோல் நாம் வாழ்வதால்தான் நோய்கள் அணி வகுக்கின்றன. தினமும் 45 நிமிடம் நடந்தால் நமக்கு எந்த பிரச்னைகளும் வர வாய்ப்பே இல்லை. காரணம் நடை, சைக்கிளிங், நீச்சல் இந்த மூன்று வித செயல்பாடுகளில் மட்டுமே நம் உடலின் அனைத்து உறுப்புகளும்இயங்குகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இப்ப சைக்கிள் பெரிய ஆள் ஓட்டுவது என்பது 10 சதவீதமாகவே குறைந்துவிட்டதும் நோய்கள் பெருக ஒரு காரணியாகும்.

கேள்வி-பதில்

*கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் கண்ணுக்கு நல்லதா?

இல்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் கண்களுக்குக் கெடுதல் எதுவும் ஏற்படாது. ஒரு சிலருக்கு இந்த லென்ஸ் ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட வர்களுக்கு டாக்டர்கள் கான்டாக்ட் லென்ஸைப் பொருத்த மாட்டார்கள்.

question and answers regarding healthquestion and answers regarding health

*விஷப்பாம்பு கடித்த ஒருவர் சிகிச்சைக்கு பின் துாங்கக்கூடாது என சொல்வது ஏன்?

பாம்புக்கடி விஷம் நரம்பையோ, தசையையோ, ரத்த நாளங்களையோ, பாதிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிஎது என நோயாளிகளின் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். ஆகவே நோயாளிகள் துாங்கிவிட்டால் இந்த அறிகுறிகள் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் பாம்பின் நச்சின் சில அறிகுறிகளாவன. இமை தொங்கல், இருமல், அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு ஆகியவை நோயாளி துாங்கிவிட்டால் கண்டுபிடிக்க முடியாது. இதனால்தான் மருத்துவக் கண்காணிப்பின்போது சிலமணிநேரங்கள் துாங்காமல் இருப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

*டிவி அருகில் அமர்ந்து பார்க்கக்கூடாது ஏன்?

டிவிக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டு பார்ப்பதால் கண்கள் எளிதில் களைப்படைந்து தலைவலியை ஏற்படுத்தும் . தொடர்ந்து பலமணிநேரம் ஒருவர் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பாரென்றால் அவருக்கு வெகுவிரைவில் பார்வைக்கோளாறு வந்துவிடும். எனவே தான் டிவி குறைந்தது ஆறு அடி துாரமாவது தள்ளி வைக்கவேண்டும் என சொல்வது. இதற்கு மேலும் சில அடிகள் தள்ளி அமர்ந்து பார்ப்பது கூடுதல் நலம்.

*மனிதகுடல் மற்றும் அடிவயிற்றுப்பகுதிகளில் அதிகமான எக்ஸ்கதிர்கள் பாய்ச்சினால் ஆபத்தா?

மனித குடல் மற்றும் அடிவயிற்றுப்பகுதி ஆகியவற்றில் மட்டுமின்றி, உடலின் எந்தப்பகுதியிலும் அதிகமாக எக்ஸ் கதிர் வீச்சுகள் செலுத்தப்பட்டால் மிகுந்த தீங்கு விளையும். ரத்தப்புற்றுநோயும்,தீராத சோகையும் உண்டாவதாக தெரிகிறது. இதற்கு சிகிச்சை போதி பலனளிக்காது. மிகையான கதிர்வீச்சைத் தடுத்துக்கொள்வதே முறையாகும்.

question and answers regarding healthquestion and answers regarding health

*பெண்களுக்கு மீசை வளராததன் காரணம் என்ன?

ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன் இயங்குவதால் மீசை முளைக்கிறது. பெண்களுக்கு இந்த ஹார்மோன் இயங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு மீசை முளைப்பதில்லை.

*பொன்னுக்கு வீங்கி தொற்றுநோயா?

பொன்னுக்கு வீங்கி தொற்று நோய்தான். இதற்கு தங்க நகைகளை அணிவிப்பது அர்த்தமில்லாத ஒரு செயல். பழங்காலத்தில் காசநோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு ராஜஸ்பரிசம் குணப்படுத்தும் என நம்பினர். அதேபோல்தான் இதுவும் ஒரு மூடநம்பிக்கை.

*பொடுகு எதனால் வருவது? இது வராமலிருக்க வழி?

தலைச்சருமத்தில் எண்ணெய்ச்சுரப்பு அதிகமாகும்போது பொடுகு ஏற்படுகிறது. காளான் கிருமிகள் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. பொடுகு மருந்து கலந்த ஷாம்பூவை உபயோகித்து தலைமுடியைச் சுத்தமாக பராமரித்தால் பொடுகு மறைந்துவிடும். காளான் கொல்லிக் களிம்புகளையும் பொடுகின் மீது தடவலாம்.

*கெராட்டின் என்பது என்ன?

கெராட்டின் என்கிற புரதம் விலங்குகளின் மயிர்,நகம், குளம்பு, கொம்பு ஆகியவற்றில் உள்ளது. அது அவற்றை உறுதியாக , வளையக்கூடியதாக மீள்தன்மையுள்ளதாக செய்கிறது. மனித உடலில் அந்த கெராட்டின் குறையும்போது தோல் சுருங்கி கிழடு தட்டிவிடுகிறது. கெராட்டின் என்பது ஒரு ஹைட்ரோ கார்பன். அது தாவரங்களிலிருந்து கல்லீரலில் ''ஏ'' வைட்டமினாக மாற்றப்படுகிறது. உடல் நலத்திற்கும் கண்களின் நலத்திற்கும் அது அவசியம்.

*ஞாபகசக்திக்கு மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

இந்த மாத்திரைகளை சாப்பிடும் மாணவர்களுக்கு மனதளவில் ஒரு நம்பிக்கை கிட்டுகிறது. ஞாபக சக்தி மாத்திரை சாப்பிட்டிருக்கிறோம். நாம் படித்தவை எல்லாம் மனதில் நிற்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் படிப்பதால் பாடங்கள் ஓரளவு நினைவில் நிற்கின்றன. மற்றபடி மாத்திரையில் உள்ள மருந்து மூலமாக ஞாபக சக்தி பெருகுவது சந்தேகமே.

*ஜீரண என்சைம்கள் அதிக சூட்டினால் அழியுமா?

ஆம். அழிந்துவிடுகின்றன.

*சாம்பலால் பல் தேய்ப்பது கெடுதலா?

இதிலென்ன சந்தேகம் . சாம்பல பல் ஈறுகளுக்கு ஆகாது. இதைக் கொண்டு பல்தேய்த்தால் வெகு விரைவிலேயே பல் ஈறுகள் தேய்ந்து '' பயோரியா'' நோய் வந்துவிடும். இளம் வயதிலேயே பற்கள் ஆடும். பின்பு ஒவ்வொன்றாக விழத்தொடங்கும்.பல் இல்லையேல் சொல் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லவே தேவையில்லை.

*கால் ஆணி உருவாக காரணம் என்ன?

கால் ஆணி என்பது காலோசிட்டி எனப்படுகிறது. உள்ளங்கையிலும், பாதங்களிலும் இவை காணப்படுகின்றன. ஒரே இடத்தில் அதிமாக அழுத்தம் நீண்ட நேரம் இருந்தால் ஆணி உண்டாகிறது. டென்னி்ஸ் ஆடுபவர்களின் உள்ளங்கைகளில் ஆணிஇருக்கும்.தவறான அளவுள்ள காலணிஅணிந்தால் ஆணி உண்டாகலாம். அறுவை சிகிச்சை பலன் தரும் என்றபோதிலும் இத்தகைய நீண்ட நேர அழுத்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

*தலைமுடிக்கு எது சிறந்தது?

தேங்காய் எண்ணெய், சீயக்காய், ஷாம்பூ. மூன்றுமே சிறந்ததுதான் தரமானதாக இருந்தால்.

question and answers regarding health


question and answers regarding health

*இரட்டைக்குழந்தை பிறப்பது எப்படி?

சூலகத்திலிருந்து பொதுவாக ஒரு முட்டைதான் வெளிப்படும். சிலபோது இரண்டு முட்டைகள் வெளிப்படும். இவை இரண்டும் இரண்டு விந்தணுக்களால் பொலிவடைந்தால் இரண்டு திசுக்கள் உருவாகும். இதை ஜைகோடிக் டிவின்ஸ் என்கிறோம். அவற்றில் ஒன்று பெண்ணாகவும், மற்றொன்று ஆணாகவும் இருக்கலாம். சில போது வெளிப்பட்ட ஒரே ஒரு முட்டை பொலிவடைந்து இரண்டாக பிரிந்து இரட்டைச்சிசுக்களாக மாறலாம்.இதை மோனோ ஜைகோடிக் டிவின்ஸ் என்கிறோம். அவை இரண்டு பெண்களாகவோஅல்லது இரண்டு ஆண்களாகவோ இருக்கலாம்.

*தினமும் சராசரியாக எவ்வளவு நேரம் துாங்க வேண்டும்?

பிறந்த குழந்தைகள் தினமும் 16மணிநேரம் துாங்குவார்கள். 3 மாதத்திலிருந்து ஒரு வயது வரை 12 மணிநேரம் துாங்குவார்கள். அதற்கு பிறகு அனைவருக்கும் எட்டுமணிநேரம் துாக்கம் அவசியம். அதிக நேரம் துாங்கினால் குழந்தைகள் படுக்கையை நனைப்பார்கள். பெரியவர்களுக்கு தொப்பை விழும். இதய ரத்த நாள நோய்கள் வரும். குறைவாகத் துாங்கினால் களைப்பு, தளர்வு, உடல் பலவீனம், ஆற்றல்குறைவு, தசைவலி, போன்ற தொல்லைகள் வரும். சிறுவர், சிறுமியர் பாடங்களில் சரவர கவனம் செலுத்த இயலாது.படித்தது மறந்து போகும். மனப்பாட சக்தி குறையும். படிப்பிலும், மற் றவேலைகளிலும் ஆர்வம் குறையும் . பகலில் துாக்கம் வரும்.(இன்னும் வளரும்...)

நன்றி:டாக்டர்.மாணிக்கவேல்..

Updated On: 6 Nov 2022 3:17 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...