உளவியல் உண்மைகளை தெரிந்துகொள்ள ஆசையா?
psychology in tamil- மனித வாழ்க்கை, இன்று சிக்கல்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, மனச் சிக்கல்களால் உறவுகளில் பிணக்குகள் அதிகரித்து விட்டன. இதற்கு உளவியல் ரீதியாக தீர்வு காண முடியும்.
HIGHLIGHTS

psychology in tamil- மனிதர்களின் உளவியல் பற்றி அறிவோம். (கோப்பு படம்)
psychology in tamil - உளவியல் (psychology) என்பது மனிதர்கள் தங்கள் மனதில் நினைப்பதையோ அல்லது பக்கத்தில் இருப்பவர்களை புரிந்து கொள்ள (human psychology) உளவியல் என்பது தேவையான ஒன்றாகும். உளவியல் என்பதற்கு கிரேக்க மொழியில் ‘மனிதர்களின் மனதை பற்றி படிக்கும் சொல்’ எனக் குறிப்பிடப்படுகிறது. நாம் செய்யும் ஓவ்வொரு விஷயத்திற்கும் பின்பு உளவியல் உள்ளது.
ஒரு நபருடன், அவரின் நண்பரோ அல்லது அவருக்கு பிடித்தமானவரோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது ஒரு நிமிடத்திற்கு 6 அல்லது 10 முறை கண் சிமிட்டுவர் ஆனால், அதை விடுத்து அதிகமாக கண் சிமிட்டினால் அவருக்கு உங்கள் கூட இருப்பது பிடிக்குமாம். அதுமட்டுமில்லாமல் அவர் உங்களை விரும்பக்கூட வாய்ப்புள்ளது.
social psychology
உங்களுக்கு பிடித்தமான ஒருவரை, அவருக்கு உங்களை பிடிக்குமா என்று தெரிந்து கொள்ள அவருடன் பேசி கொண்டிருக்கும் போது தான் உட்கார்ந்திருக்கும் இருக்கையை விட்டு, சற்று அவருக்கு முன் வந்து தன் கழுத்தை சாய்க்காமல் பேசினால், உடலை மட்டும் சாய்த்து அவருக்கு தெரியாமல் பேசினால், அவருக்கு உங்களுடன் இருப்பது பிடிக்குமாம். உங்களுடன் பேச ஆர்வமுடன் இருப்பார். அதுவே தன் இருக்கையை விட்டு பின் தள்ளி உட்கார்ந்தால், அவருக்கு உங்களிடன் இருப்பதற்கு ஆர்வமில்லை என்று நினைப்பார்.
ஒருவர் பொய் சொல்லும் போது, அதை பிறர் அறிந்தாலும் அதை ஒத்துகொள்ளாமல் தான் பொய் சொல்லவில்லை என்று கூறினால் அவரின் கண்களை 5 நிமிடம் நாம் சிரித்துக் கொண்டே பார்த்தால், அவர் அப்படியே உண்மையை கூறிவிடுவாராம்.
நாம் ஒருவருடன் பேசிக்கொண்டி இருக்கும் போது, அவரது கண் இடது மேல் பக்கம் சென்றால் அவர் எதையோ ஞாபகப் படுத்துகிறார் என்று அர்த்தம். அதுவே வலது மேல் பக்கம் கண்கள் சென்றால், எதையோ கற்பனை செய்கிறார் என்று அர்த்தம் இது மட்டுமின்றி பொய் சொல்லும் போதும் கூட வலது மேல் பக்கமே செல்லும்.
mind reading psychology
ஒரு நபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இடது கண் கீழே சென்றால் அவர் சொல்லிக் கொண்டிருப்பதில் விருப்பமில்லை என்றும் கூறலாம். அதுவே வலது கண் கீழே சென்றால், அப்பொழுது உணர்வுபூர்வமான ஒன்றை நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, தன் கைகளை கட்டினாலோ அல்லது கால்களை மறைத்து மூடினாலோ அவர் உளவியல்(psychologiclally self defence) ரீதியாக தன்னை பாதுகாக்க நினைப்பவர் ஆவார்.
pasychology
நாம் ஒருவரை கவர வைக்க விரும்பினால், அவர் செய்யும் செயலை கண்ணாடி போல் செய்ய வேண்டும் அதாவது அவர் என்ன செய்கிறாறோ, அப்படியே செய்தால் அவரை எளிதில் கவர்ந்து விடலாம். நாம் எல்லா செயல்களையும் செய்தால் அவர் வெறுக்கக் கூட வாய்ப்புள்ளது. அதனால் ஒரு சில செயல்களை மட்டுமே கண்ணாடி போல் செய்ய வேண்டும்.
behavior psychology
நாம் மனதளவில் பதட்டமா இருக்கும் போது (shivering) நமது கால்கள் தாமாகவே ஆடுமாம். ஒருவர் நாம் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய கால் முட்டியை பேசுவருக்கு நேராக இருந்தால் அவர் உங்கள் மீது ஆர்வம் கொண்டவராக உள்ளார். ஒருவர் பேசும்போது பேசும் நபரின் கண்களை பார்காமல் வேறு எதையாவது பார்த்து பேசினால், அவர் எதையாவது பேசும் நபரிடம் இருந்து மறைக்க விரும்புகிறார் என்பதை அறியலாம்.
இன்றைய மனிதர்களின் வாழ்க்கையில், ‘சைக்காலஜி’ என்னும் உளவியல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகி வருகிறது. ஏனெனில், மனிதர்களிடம் இயற்கை குணம் மாறிப்போய் செயற்கை குணம் அதிகரித்து விட்டது. இன்று நடிப்பது சுலபமாகி விட்டது. உண்மையாக இருப்பது, சிரமமாகி விட்டது. அதுவும் உறவுகளுக்குள் நீடிக்கிற பாசாங்கும், போலித்தனமும் வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. எனவே, எல்லா விதங்களிலும் உளவியல் முக்கியத்துவம் பெற்றதாகி விட்டது.