homeo treatment for psoriasis disease-சொரியாசிஸ் எனப்படும் செதில்படை நோய்க்கு ஹோமியோ சிகிச்சையில் தீர்வு

homeo treatment for psoriasis disease-மனிதர்களுக்கு எத்தனையோ நோய்கள் வருகின்றன. ஆனால் தோலையே பாதிக்கும் நோய்தான் இந்த சொரியாசிஸ். இதனை தொடர் ஹோமியோ சிகிச்சையில் முற்றிலும் குணப்படுத்தலாம். படிச்சு பாருங்க...

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
homeo treatment for psoriasis disease-சொரியாசிஸ் எனப்படும் செதில்படை நோய்க்கு ஹோமியோ சிகிச்சையில் தீர்வு
X

முகத்தில் சொரியாஸிஸ் தாக்கத்தின் ஆரம்ப கட்டம்... (கோப்பு படம்)

homeo treatment for psoriasis disease


homeo treatment for psoriasis disease

மனிதர்களை தற்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் தாக்குகிறது. இப்புதுநோய்கள் டாக்டர்களால் கூட இனங்காணமுடியாததாக ஒருசில நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பின் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர்தான் நோயின் தன்மையினையே டாக்டர்கள் உணருகின்றனர். அந்த வகையில் சொரியாஸிஸ் நோயினை ஹோமியோ சிகிச்சையில் முழுவதும் குணப்படுத்த முடியுமா? என்பதைப் பற்றி பார்ப்போமா.


homeo treatment for psoriasis disease

நாகரிக உலகில் மனிதர்களின் வாழ்க்கை முறையே அடியோடு மாறிவிட்டது. உடல்உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, உடல்பருமன் போன்ற காரணிகளால் நோய்கள் வரிசை கட்டி நிற்கிறது.இதுமட்டுமல்லாமல் உடலின் தோலில் ஏற்படும் நோய்களே ஏராளம். அதில் ஒரு வகைதான் செதில்படை நோய் எனப்படும் சொரியாஸிஸ். இந்த நோயிற்கு ஹோமியோ சிகிச்சை மேற்கொண்டால் பூரண குணப்படுத்திவிடலாம் என சேலம் ஹோமியோபதி மருத்துவர் முகுந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,

தோலில் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இவை பிறப்பிலேயே உருவான சில நோய்கள்,பரம்பரையாக வரும் நோய்கள், சத்துக்கள் குறைவானதனால் உருவாகும் நோய்கள், வைரஸ், காளான், போன்ற தொற்றுக்களினால் வரும் நோய்கள், ஒவ்வாமையினால் ஏற்படும் நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் போன்ற பல வகையான தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றில் மிகவும் தொல்லை தரும் தோல் நோய்கள் பற்றி காண்போம்.

செதில்படை நோய் (சொரியாஸிஸ்)

சொரியாஸிஸ் என்ற நோயை தமிழில் காளாஞ்சகப்படை என்றும் கூறுகிறோம். இந்த செதில் படை எனும் செதில் உதிரும் நோயில் சிவப்பான படை போன்று தோன்றி அதற்கு மேல் வெள்ளையாகவோ, சாம்பல் நிறமாகவோ மீனி்ன் செதில்கள் போன்று உதிர்ந்து கொண்டே இருக்கும். இது பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான பயத்தையும் அருவெறுப்பையும் கண்டிப்பாக ஏற்படுத்தும். இது முழங்கை, முழங்கால், கழுத்தின் பின்பகுதி, முதுகு, தலைப்பகுதி போன்ற இடங்களில் தோன்றக்கூடும். இது தலைப்பகுதியில் அடை அடையாக உற்பத்தியாவதால் முடி உதிர்வதற்கும் மெலிவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது.


நமது தோலில் வெளிப்புறம், உள்ள திசுக்கள் நமது கண்ணுக்கு தெரியாமலேயே அவ்வப்போது உதிர்ந்து தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் குணம் உடையது. இந்த மாற்றமானது இயல்பாக மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். ஆனால் இந்த செதில் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் வேகப்படுத்தப்பட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மாற்றம் நடைபெறுவதால் மீன் செதில் போன்று தோல் உதிர்ந்து கொண்டே இருக்கும். இந்நோயை குணப்படுத்த முடியாது. கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. ஆனால் இதை ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது நாள்பட்ட நோய் என்ற காரணத்தினால் உங்கள் டாக்டரோடு நீங்கள் முழுமையாக ஒத்துழைத்தால் இந்த நோயை அடியோடு ஒழிக்க முடியும். ஹோமியோபதி உள் மருந்துகளால் மட்டுமே இந்த நோயினை முழுமையாக குணப்படுத்த முடியும்.

homeo treatment for psoriasis disease


வண்டுக்கடி (எக்ஸிமா)

எக்ஸிமா என்பது தமிழில் வண்டுக்கடி என்று சொன்னாலும் வண்டு கடிப்பதற்கும், மற்ற கிருமிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இது இயல்பாக உடலில் தோன்றக்கூடிய ஒருவியாதி. ஹோமியோபதி தத்துவத்தின் அடிப்படையில் இது சோரிக் மாயாஸம்மால் வருகிறது. மாயாஸம் என்பது தோலில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான வியாதிகளுக்கும் அடிப்படை காரணமான பக்குவமாகும்.

இது சில சமயம் டிரை எக்ஸிமா அதாவது தோல்வறண்டு தடிமனாக உள்ளதாகவோ, வீப்பிங்டைப் அதாவது கொப்புளங்கள், புண் ஆகியனவை ஏற்பட்டு எக்ஸிமாவில் தீவிரமாக அரிப்பு ஏற்பட்டு புண்ணாககூடிய நிலைக்கு தள்ளப்படும். இதற்குமேல் தொற்றுக்கிருமிகள் தாக்கி, கொதித்து, சீழ் பிடித்து நீர் வர ஆரம்பிக்கும். இதனை களிம்பு போன்ற வெளிப்பூச்சு மருந்துகளால் கட்டாயம் அமுக்ககூடாது. அப்படி அமுக்கப்படும்போது, அது வேறு வித நோயாக குறிப்பாக நுரையீரல் தொந்தரவாகவோ அல்லது ஆஸ்துமா தொந்தரவாகவோ மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே முறையான ஹோமியோபதி உள் மருந்துகளால் இந்த தோல்நோய்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டால் தான் இந்த நோயாளி முற்றிலும் குணமடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ந்து ஒரு ஆரோக்யமான மனிதனாக மாற முடியும். இதற்கு சல்பர், கிராபைடிஸ், பெட்ரோலியம் போன்ற மருந்துகளை பயன்படுத்தலாம்.

homeo treatment for psoriasis disease


வயதான ஒருவர் சுமார் 12 வருடங்களாக ஆஸ்துமா நோாயல் மிகுந்த அவஸ்தைப்பட்டு பல வைத்தியங்கள் செய்து பலனளிக்காமல் இருந்தார். அவரதுமுழு விவரத்தையும் ஆராய்ந்த பிறகு கிராபைடிஸ் என்ற மருந்தினை கொடுத்த பத்து நாட்களுக்கு பிறகு இரண்டு காலிலும் எக்ஸிமா என்ற நோய் வெளிப்பட்டு ஒரு மாத காலமாக தோலில், சீழ் போன்ற வடிந்த பின்னர், தோல் படிப்படியாக குணமடைந்து அதே சமயத்தில் அவருக்கு ஆஸ்துமா தொல்லையும் நின்று விட்டது. இன்று வரை அவருக்கு இரண்டு தொல்லைகளும் தலைகாட்டவே இல்லை.


homeo treatment for psoriasis disease

அவருக்கு சிறுவயது முதலே இருந்து வந்த எக்ஸிமாவை வெளிப்பூச்சுமருந்துகளால் தீவிரமாக அமுக்கியதன் காரணமாக ஆஸ்துமா நோய் ஏற்பட்டது. ஆகவே இந்த நோயாளிக்கு சரியான மருந்தை கொடுத்தபோது எதன் விளைவாக ஆஸ்துமா ஏற்பட்டதோ, அந்த தோல் நோயினை முழுமையாக வெளிக்கொணர்ந்ததால் இரண்டு நோய்களும், முற்றிலுமாக குணமடைந்தது.

நன்றி : டாக்டர். முகுந்தன்,சேலம்.

Updated On: 5 May 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...