protein foods in tamil உடல் ஆரோக்யத்துக்கு தேவையான புரதச்சத்துகள் பற்றி தெரியுமா... உங்களுக்கு?

protein foods in tamil நாம் அன்றாடம் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதச்சத்துகள் நம்உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. எனவே புரதச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
protein foods in tamil உடல் ஆரோக்யத்துக்கு தேவையான புரதச்சத்துகள் பற்றி தெரியுமா... உங்களுக்கு?
X

மாவுப்பொருளான உருளைக்கிழங்கில் புரதம் அதிகம் உள்ளது

protein foods in tamilநாம்அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளில் வகைகளைப் பொறுத்து ஒவ்வொன்றிலும் புரதம் உள்ளது

protein foods in tamil

நல்ல ஆரோக்யமாக வாழ வேண்டுமெனில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவேண்டும். அந்த சத்தான உணவுகளும் அளவோடுஇருக்க வேண்டும். அப்போதுதான் கட்டமைப்பான உடல்வாகினைப் பெற முடியும். இல்லாவிட்டால் உடல் பருமன் ஏற்பட்டு பல்வேறுசிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். நாம் உயிர் வாழ புரதச்சத்துகளும் அவசியம் தேவை. புரதம் என்றால் என்ன ? என்னென்ன உணவுப்பொருளில் எவ்வளவு சதவீத புரதசத்து உள்ளது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

புரதம் என்பது அமினோஅமில எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட அதிக மூலக்கூறு எடை கொண்ட கரிமச் சேர்மங்களாகும். அனைத்து வகையான உயிரினங்களின் கட்டமைப்பு ,ஒழுங்கமைப்பு மற்றும்செயல்பாட்டுக்கு புரதம் இன்றியமையாததாகிறது. நம் உடலில் நடக்கும் வளர்சிதை மாற்ற செயல்களுக்கு புரதங்கள் துணைபுரிகின்றன. டிஎன்ஏயிலிருந்து மரபுக்குறியீடுகளை மொழிபெயர்ப்பு செய்ய தேவையான நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ இவை விளங்குகின்றன.

உயிரினங்களின் வடிவத்திற்கு காரணமான சைக்ளோஸ்கெலிட்டன் அமைப்பை உருவாக்குவது புரதங்கள்ஆகும். தசைகளில் காணப்படும் அக்டின், மயோசின் ஆகியவை தசைஅசைவில் பங்கு கொள்கின்றன.

நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்குகொள்ளும் புரதங்களான பிறபொருளெதிரிகள் உடலுக்கு வெளியிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் ,பாக்டீரியாக்களுடன் பிணைந்து அழிவுக்குள்ளாவதால் நம் உடலை பாதுகாக்கிறது. இரும்பு சத்தை சேமிக்கும் பெரிடின் போன்ற மூலக்கூறுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகள் மூலம் அவற்றைத் தேவையான இடங்களுக்குகடத்தி வெளியிடுவதற்கு உதவும் ஈந்தவிணைகளும் புரதங்களாகும்.

உடலுறுப்புகளுக்கு, உயிரணுக்களுக்குஇழையங்களுக்கு இடையே சைகைகளை கடத்துவதன்மூலம் அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் இயக்குநீர்களும் புரதங்களாகும். உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கு புரதச்சத்துகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால், மற்றும்தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது.

புரதச்சத்துகள் உடலில் புதிய திசுக்களை கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்கு மாற்றாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயனளிக்கிறது.மேலும் உயிரினங்களில் காணப்படும் என்சைம்கள், ஹார்மோன்கள் , ஹீமோகுளோபின் ரத்தபுரதம் போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு அவசியமான கரிமச்சேர்மங்கள் யாவும் புரதங்களால் ஆனவையாகும். நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்தானது அவசியம் தேவை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும் உலக சுகாதார அமைப்பின்நிலைப்படியும் ஒரு இந்திய தனிநபருக்கு, ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் ஒரு கிராம் ஆகும்.

கர்ப்பம் தரித்த பெண்களாயின், 10 கி.கி. எடை அதிகரித்த ஒருவருக்கு, மேலதிகமாக 23 கிராமும், பால் கொடுக்கும் காலங்களில், குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு 19 கிராம் மேலதிகமாகவும், 6-12 மாதத்திற்கு மேலதிகமாக 13 கிராமும் தேவைப்படும். உணவுப் பழக்க முறைகளில் உள்ள வேறுபாடு காரணமாக, வெவ்வேறு நாடுகளில் இருக்கும் தனிமனிதருக்கு இந்த அளவில் சிறிய வேறுபாடு காணப்படும்.

நாம் சாப்பிடும் உணவில் புரதச்சத்துகுறையும் பட்சத்தில் நமக்கு மராசுமஸ், மற்றும் குவாஷியார்கர் போன்ற புரத குறைபாட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மராஸ்மஸ் நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும். மேலும்வயிற்றுப்போக்கு கடுமையாக ஏற்படும். உடலிலுள்ள தசைகள் அனைத்தும் மெலிய துவங்கும். எலும்பின்மீது தோல் மூடியது போன்ற தோற்றத்தினை தரும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்பியிருக்கும்.

ரத்தத்திலுள்ள புரதம்

நாரீனி என்னும் புரதமானது ரத்தத்தில் உள்ள ரத்த நீர்மத்தில் உள்ளது ஆகும். நமக்கு ஏதேனும் விபத்துகளினால் அடிபடும் பட்சத்தில் ரத்தக்குழாய்களில் புண் ஏற்பட்டால் ரத்தம் வெளியேறாமல் தடுப்பதற்கு பயன்படும் ரத்த நார்களால் ஆன வலை போன்ற அமைப்பை உண்டாக்கும்பொருள்தான் நாரீனி.

ரத்தநாரால் ஆன வலையில் வெளியேறும் ரத்தத்திலுள்ள நுண்திப்பிகள் வந்து அடைப்பு ஏற்பட்டு ரத்தம் வெளியேறுவதைத்தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது.எனவே நமக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தினை தடுக்க பயன்படும் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பதும் முதன்மையானதுமாக நாரீனி விளங்குகிறது.

உணவுக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட புரதம்அடங்கிய உணவுப்பட்டியல்

protein foods in tamil


protein foods in tamil சோயாபீன்ஸிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது

ஒவ்வொன்றிலும் 100கிராம் அளவிலான உணவில் புரதம் எத்தனை பங்கு உள்ளது என்பது தரப்பட்டுள்ளது. இயற்கை உணவில் நீர் அதிகமாக உள்ளதால் இப்பொருட்களில் நீரின்அளவைக்குறைப்பதன் மூலம் புரதத்தினை அதிகப்படுத்தலாம்.

எல்லா வகை புரதத்திற்கும் ஒரே மாதிரியான செரிமான தன்மை கிடையாது. புரத செரிமானமானது அதில் அடங்கியுள்ள அமினோ அமிலத்தின் அளவைப் பொறுத்தது. புரதத்தின் தரத்தை, அதில் அடங்கியுள்ள அமினோ அமிலத்தை மதிப்பிடுதல் முறை மூலம் மனிதனுக்கு தேவையான புரதத்தை அறிந்து கொள்ளலாம்.

முட்டை மற்றும் பால் பொருள்கள்

பாலாடைக்கட்டி

புரோட்டின் உள்ளடக்க வரம்பு: 7.0 - 40.

உச்ச அளவு: பர்மேசன் 34.99 - 40.79; குருயோி 29.8; இடாம் 25; பழைய சிடார் 24.9 - 27.2

நடுத்தர அளவு: கேமம்பர்ட் 19.8; பதப்படுத்தப்பட்ட சிடார் 16.42 - 24.6

குறைந்த அளவு: பீட்டா 14.7; ரைகோட்டா 11.26 - 11.39

முழுமையான கோழி முட்டை (இயற்கையானது)

protein foods in tamil

வேகவைத்தது: 10.62 - 13.63

பால் மற்றும் பால் மாற்றுப் பொருட்கள்

மாட்டுப் பால் (திரவம், பதப்படுத்தாதது மற்றும் பதப்படுத்திய பால்) - 3.2 - 3.3சோயா பால்: 5.1 - 7.5ஆட்டுப் பால்: 4.9 - 9.9

protein foods in tamilprotein foods in tamil இறைச்சியிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது

இறைச்சி மற்றும் சைவ இறைச்சிபொதுவான இறைச்சி (red meat)மாட்டு இறைச்சி சமைத்தது16.9 - 40.6

உச்ச அளவு: சுட்ட மாமிச துண்டம்; 40. பொரித்த தொடைக்கறித் துண்டம் 32.11

நடுத்தர அளவு: சுடப்பட்ட மென்மையான மாமிசம் 24.47

குறைந்த அளவு: கொம்புப் பகுதி மாமிசம் 16.91

ஆட்டிறைச்சி சமைத்தது20.91 - 50.9

வேறுபட்ட மாமிசம்

சீல் மீன் இறைச்சி உலர்ந்தது: 82.6

கடமான் இறைச்சி உலர்ந்தது: 79.5

நீர்நாயின் இறைச்சி பொரித்தது: 23.0

கங்காரு இறைச்சி: 21.4

வெள்ளை மாமிசம்

மீன்: 18

சைவ இறைச்சி (சமைக்கப்பட்ட சைவ தயாரிப்பு) 18.53 - 23.64

காய்கறிகள்

நோாி கடல்பாசி காய்ந்தது: 5.81

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள்: 0.33 - 3.11

மாவுசத்து உள்ள கிழங்குகள் 0.87 - 6.17

வேக வைத்த கருப்பு பீன்ஸ்: 9

உச்ச அளவு: வீட்டில் சமைத்த உருளைக்கிழங்கு கேக்: 6.17, விரல் வடிவ உருளைக்கிழங்கு பொாித்தது: 3.18 - 4.03

நடுத்தர அளவு: சமைத்து பொதிந்த உருளைக்கிழங்கு 2.5; வேக வைத்த சேனைக்கிழங்கு 1.49

குறைந்த அளவு: வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு: 0.87.

protein foods in tamil


நிலக்கடலையில் புரதச்சத்தானது அதிகம் உள்ளது

protein foods in tamil

பருப்பு வகைகள்

காய்ந்த சோய பீன்ஸ்: 13

வேக வைத்த அவரைவிதை: 9

வேக வைத்த பச்சை பட்டாணி: 5

வேக வைத்த காராமணி: 8

வேக வைத்த கோழிஅவரை விதை: 9

நிலக்கடலை (பச்சை, வறுத்தது, வெண்ணெய் போட்டது): 23.68 - 28.04

பேக்கரி அயிட்டங்கள்

முழுகோதுமை இனிப்புவகைகள்

கோதுமை ரொட்டி: 6.7 - 11.4

பிஸ்கட்: 7.43

வேறு உணவு பொருட்கள்

இயற்கையான புரத அடர்த்தி உள்ளவை (பெரும்பாலும் உடல்கட்டுக்கோப்பு பயிற்சி செய்பவர்களுக்கு அல்லது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுகிறது)

சோயாவிலிருந்து பிாித்தெடுக்கப்பட்ட புரதம்: 80.66

மோரிலிருந்து பிாித்தெடுக்கப்பட்ட புரதம்: 79.5

முட்டை வெள்ளைக்கரு உலர்ந்தது: 7.0

ஸ்பைருலினா பாசி உலர்ந்தது: 57.45

ஈஸ்ட்: 38.33

Updated On: 10 Oct 2022 7:59 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...