குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி?
பைல் படம்.
குழந்தைகளுக்கு சளி பிரச்சனை இருந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்கக்கூடாது. குழந்தையை கவனிக்கும்போது நாம் செய்கின்ற சிறுசிறு தவறுகள் குழந்தைக்கும் சளி பிரச்சனை வருவதற்கு நாமே காரணமாகிறோம்.
குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்கக்கூடாது. மழை மற்றும் குளிர் காலத்தில் ஈரக்காற்று படாதவாறு குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளியால் சுற்றி மூடவேண்டும்.
குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை கொடுக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தலை குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கி விடும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu