கர்ப்பிணி பெண்களின் நண்பன் ஃபோலிக் அமில மாத்திரைகள் 5 மில்லி கிராம்

கர்ப்பிணி பெண்களின் நண்பன் ஃபோலிக் அமில மாத்திரைகள் 5 மில்லி கிராம்
X
5 மில்லி கிராம் ஃபோலிக் அமில மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களின் நண்பன் என அழைக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களின் நண்பர் என அழைக்கப்படும் ஃபோலிக் அமில மாத்திரைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஃபோலிக் அமிலம் என்பது நமது உடலுக்கு அவசியமான ஒரு வகை வைட்டமின் பி ஆகும். இது செல் பிரிவது மற்றும் டி.என்.ஏ உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஃபோலிக்ஆசிட் மாத்திரைகள் பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், இது கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம்.

பயன்கள் (Uses):

ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் கரு குறைபாடு (Neural Tube Defects) ஏற்படுவதைத் தடுக்கிறது. கரு குறைபாடு என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பிறவி குறைபாடு ஆகும்.Megaloblastic anemia எனும் இரத்த சோகை வகையைத் தடுக்கிறது.

ஹோமோசிஸ்டீன் (Homocysteine) என்ற அமினோ ஆசிட் அளவைக் குறைக்கிறது. இதன் அதிகரிப்பு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

கருவின் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக வளர இந்த மாத்திரைகள் உதவுகிறது.

பிறவி குறைபாடுகளைத் தடுக்கிறது.

இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது.

இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

பொதுவாக, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் பாதுகாப்பானவை என்றாலும், சிலருக்கு வயிற்றுப்போக்கு, மந்தம், தூக்கமின்மை போன்ற மிதமான பக்க விளைவுகள் ஏற்படலாம்.


அதிக அளவு ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்வது வைட்டமின் பி12 குறைபாட்டை மறைக்கலாம். இது நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி சரியான அளவையே எடுத்துக் கொள்ள வேண்டும். 5 மி கிராம் எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் மிகவும் அவசியம். இது கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி செய்து பிறவி குறைபாடுகளைத் தடுக்கிறது. இருப்பினும், மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Tags

Next Story
photoshop ai tool