/* */

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் மாதுளை உங்களுக்கு தெரியுமா?....சாப்பிடுகிறீர்களா?.....

pomengranate medicinal uses, increase memory power பழங்கள் அனைத்திலும் சத்துகள் மிகுந்துள்ளது.நாம் என்ன பழங்களைச் சாப்பிடுகிறோமோ அந்த பழத்திலுள்ள சத்துகள் நமக்கு கிடைக்கும் . மாதுளை பல மருத்துவ பயன்களை உள்ளடக்கிய பழமாக உள்ளது. இதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போமா.....படிங்க...

HIGHLIGHTS

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் மாதுளை  உங்களுக்கு தெரியுமா?....சாப்பிடுகிறீர்களா?.....
X

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த   மாதுளம்பழம்  (கோப்பு படம்)

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுவகைகளில் போதுமான சத்துகள் உள்ளதா? என்ற கேள்விக்கு பலருக்கு தெரியாது என்ற பதிலே ஓங்கி ஒலிக்கும். இந்த நிலையில் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் போதிய சத்துகள் இல்லாததால்தான் நாம் தினந்தோறும் பழவகைகளை கூடுதலாக தனியே எடுத்துக்கொள்கிறோம். பழவகைகளைப் பொறுத்தவரை சத்து என்பது பழத்துக்கு பழம் வேறுபடக்கூடியது. அப்ப சத்து அதிகமாக நாம் ஒரே நாளில் அந்த பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற விபரீத கேள்வியும் உங்கள் மனதில் எழும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷந்தான். எனவே கொஞ்சம் கொஞ்சமாக தினந்தோறும் அந்த பழங்களை நாம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரவேண்டும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

அந்த வகையில் மாதுளையில் உள்ள சத்துகளைப் பெற நாம் என்ன செய்யவேண்டும். மாதுளையில் உள்ள சத்துகள் என்னென்ன? எப்போது சாப்பிடவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போமா?-மாதுளை ஜூஸைத் தொடர்ந்த 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல. ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்யமாக இருக்கும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமைத் தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.மாதுளம்பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

கல்கண்டு, பனீர்,தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்துஇ ரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து சருமத்தை விட்டே விலகும். மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினைால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சையையும் தரும். மாதுளையுன் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத்துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்துவிடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்யமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும்,மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள் , இதய பலகீனம், நிவர்த்தியாகும். ரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடைகூடும். தொண்டை மார்பகங்கள் நுரையீரல் ,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்த ரோகமும் தீரும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால்நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம்பழச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும்,எலும்புகளும், உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கிவிடும். நீடித்த இருமல் குணமாகும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணிநேரம் வரை இருந்தால் முத்துக்களின் சாறு நீர்த்துப்பிரியும். இந்தச் சாறு அரை லிட்டர் சேர்ந்தால் ஒரு கிலோ சீனியைப் பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக்கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக்கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்யமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது இரத்த வாந்தி, ரத்த மூலம் வயிற்றுக்கடுப்பு, உடல் சூடு தணியும். ரத்தம் சுத்தியடையும். ரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேளைக் கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

*மூக்கில் ரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள் மாதுளம்பூச்சாறு அருகம்புல் சாறு சமமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்கு கொடுத்தால் ரத்தம் கொட்டுதல் நின்றுவிடும்.

*மாதுளம் பழத்தோலை உலர்த்தி துாள் செய்து காலை, மாலை 15 மி.லி. அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல் வயிற்றுப்பொருமல் தீரும்.

*மாதுளம் பூக்கள் 15கிராம் எடுத்து 25கிராம் வீதம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பி்ட்டு வந்தால் தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்படுதல் நிவர்த்தியாகும்.

pomengranate medicinal uses, increase memory power


pomengranate medicinal uses, increase memory power

*மாதுளம் பூக்களைத் தலையில் வைத்து கட்டிக்கொண்டால் தலைவலி தீரும்.வெப்ப நோய் தீரும்.

*துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின்மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளை மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளில் நோய் தீரும். பற்களில் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாக பலவிதத்திலும் பயன்படுகிறது.

Updated On: 19 March 2023 9:40 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...