நிமோனியா நோய் எப்படி வருகிறது? அதைத் தடுப்பது எப்படி?....படிச்சு பாருங்க....

pneumonia meaning in tamil மனிதர்களை ஆட்டிப்படைக்கும் மற்றொரு நோய் நிமோனியா. இது நுரையீரல் பாதிப்பால் வரும் நோய்...சிகரெட்டை விட்டுடுங்க...அப்புறம் பாருங்க.....

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நிமோனியா நோய் எப்படி வருகிறது? அதைத் தடுப்பது எப்படி?....படிச்சு பாருங்க....
X

பாக்டீரியாக்களினால் ஏற்படக்கூடிய  நிமோனியா நோயின் படம் வட்டமிட்டு காட்டப்பட்டள்ளது(கோப்பு படம்)

pneumonia meaning in tamil

நிமோனியா என்ற ஆங்கிலச் சொல்லானது நுரையீரலின் அனேகப் பாதிப்புகளை (நோய் எதிர்ப்புக் குறை நோய் பாதிப்புகள், நிணநீர்க்குழாய் நோய்கள், ரசாயனப் பாதிப்புகள் அல்லது மருந்துகளால் ஏற்படும் எதிர்விளைவுகள் போன்றவை) விவரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் முக்கியமாக நுரையீரல் அழற்சியைக் குறிக்கவே நிமோனிட்டிஸ் என்ற ஆங்கிலச் சொல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது

நிமோனியா நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் (அது உலக மக்கள்தொகையில் 7%) மற்றும் வருடத்திற்கு இந்நோய் தாக்கத்தால் சுமார் 4 மில்லியன் இறப்புக்கள் ஏற்படுகின்றன.நிமோனியாவானது"மனித இறப்புகளின் தலைவன்" என வில்லியம் ஓஸ்லர் என்பவரால் குறிப்பிடப்படுகிறது.

pneumonia meaning in tamil


pneumonia meaning in tamil

20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் இறப்புகள் குறைந்துள்ளன.ஆயினும்கூட வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த்தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கிறது.நுரையீரல் அழற்சியானது நோய்தொற்றுக்குள்ளானவரை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்கிறது. இதற்கு "முதியவர்களின் நண்பன்" என்ற அடைமொழியும் உண்டு.

நுரையீரல் அழற்சி (அல்லது )நிமோனியா என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் .நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது.

நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பாக்டீரியா, வைரஸ்,பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும்.

நோய்க்கான அறிகுறிகள்

இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும் நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும்.இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பாக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமல் இருத்தல் போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும்.இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் அந்நோய் தொற்றலுக்கான அடிப்படைக் காரணத்தைச் சார்ந்துள்ளது.பாக்டீரியங்களால் ஏற்படக்கூடிய நுரையீரல் அழற்சியை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.நோய்த்தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பின் செயற்கைசுவாச சிகிச்சை அளிக்கப்படலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமலானது 79-91 சதவீதம் இருக்கும், அசதியானது 90 சதவீதம், காய்ச்சல் 71-75 சதவீதம், மூச்சிரைப்பு 67-75 சதவீதம், சளி 60-65 சதவீதம், நெஞ்சுவலி 39-49 சதவீதம் இருக்கும் அறிகுறிகளாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

pneumonia meaning in tamil


ஆரோக்யமான நுரையீரல் காற்றுப்பை....நிமோனியா பாதிப்பால் ஏற்பட்டுள்ள காற்றுப்பை (கோப்பு படம்)

pneumonia meaning in tamil

நிமோனியா அறிகுறிகள்

நிமோனியா நோயால் தாக்கப்பட்டவர்கள் இடைவிடாமல் இருமிக்கொண்டே இருப்பார். மேலும் குளிர்க்காய்ச்சலால் அவர் உடல் நடுங்கிக்கொண்டுதான்இருக்கும். மூச்சு விடுதலிலும் மிகவும் சிரமப்படுவார்கள். அதேபோல் நெஞ்சு பகுதியில் ஏதோகுத்துவது போன்ற பிரமை உண்டாகும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவருமே நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களா? டாக்டரிடம் சென்று பரிசோதித்த பின்தான் உண்மையே தெரியவரும். ஏனெனில் வயதானவர்களுக்கு ஒருசிலருக்கு வயோதிகத்தினாலும் இதுபோல்ஏற்படுவதுண்டு.

குழந்தைகளுக்கு

குழந்தைகளையும் இந்த நிமோனியா நோய் தாக்கும். அதுபோல் இந்நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். மூச்சு விடுவதில் சிரமமாகவே இருக்கும். அல்லது தொடர்ந்து இளைப்பு போன்று மூச்சு வாங்கிக்கொண்டேயிருப்பார்கள். காய்ச்சல் ஒன்றை வைத்து முடிவு செய்யமுடியாது. ஏனெனில் பொதுவான நோய்கள் ஏற்பட்டாலும் காய்ச்சல் வர வாய்ப்புண்டு. 2 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளிடம் இருமலானது அடிக்கடி காணப்படுவதில்லை. குழந்தைகளுக்கு நீலத்தோல், அருந்துவதில் சிரமம், தொடர்ச்சியான வாந்தி, மயக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான அறிகுறிகள் வைத்து இந்நோய் தாக்கம் எனக் கண்டுகொள்ளலாம்.

pneumonia meaning in tamil


ஏங்க...காசு செலவு செய்து சிகரெட்குடிச்சா நோய் வரும்... ஆனா பழங்களைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்துகள் வரும்...ஆரோக்யம் வளரும்... அதைச் செய்யுங்க... (கோப்பு படம்)

pneumonia meaning in tamil

பாக்டீரியா,மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் நிமோனியாவானது பொதுவான ஒரு சில அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. படைநிமோவாக்கியால் ஏற்படும் நுரையீரல் அற்சியானது அடிவயிற்றில் வலி , பேதி அறிகுறிகள் தென்படும்.ஸ்டெப்ட்ரோகாக்ஸ் பாக்டீரியங்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியானது துரு நிறத்திலான சளியும் கிளெப்செல்லாவால் ஏற்படும் நுரையிரல் அழற்சியினால் உலர்ந்த சிவப்பு நிற சளியும் வெளிப்படக்கூடும்.

இரத்தக் கசிவுடன் (ரத்தச்சளி அல்லது ஹீமோப்ட்டிசிஸ் என்று அறியப்படுகிறது )கூடிய இந்தச் சளி கிராம்-எதிர் நிமோனியா, நுரையீரல் சீழ்கட்டிகள் மற்றும் பொதுவாக கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்நிலைகளில் கானப்படுகிறது. மைக்கோப்ளாஸ்மா நுரையீரல் அழற்சியால் கழுத்துப் பகுதியில் நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் மற்றும் மூட்டு வலி அல்லது நடுச்செவியில் தொற்று ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

pneumonia meaning in tamil


pneumonia meaning in tamil

வைரஸ்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியால் மூச்சிரைப்பு ஏற்படும். இந்த அறிகுறி பாக்டீரிய நுரையீரல் அழற்சியில் ஏற்படுவதில்லை.நுரையீரல் அழற்சியானது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவையும் இதற்கடுத்தாற்போல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. 100 க்கும் அதிகமான தொற்று நோய்க்காரணிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவற்றுள் சில மட்டுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்காரணியாக இருக்கின்றன. குழந்தைகளில் 45% நோய்த்தாக்கங்களும், பெரியவர்களில் 15% நோய்த்தாக்கமும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றின் கலப்பு பாதிப்புகளால் ஏற்படக்கூடியவையாகும்.இந்நோய்க்கான பாதியளவு சோதனைகளில் கவனமுடன் நடத்தப்படும் சோதனைகளில் கூட நோய்க்கான முதன்மைக்காரணியைத் தனிமைப்படுத்தி அறியமுடிவதில்லை.

pneumonia meaning in tamil


pneumonia meaning in tamil

புகைப்பழக்கம், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு, மதுபானப் பழக்கம், நாள்பட்ட நுரையீரல் சுவாச நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை நோய் நிலையையும் தீவிரத் தன்மையையும் நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன

Updated On: 24 Dec 2022 2:13 PM GMT

Related News