போபியா: பயத்தின் பல முகங்கள், எல்லாம் பய மயம்

போபியா: பயத்தின் பல முகங்கள், எல்லாம் பய மயம்
X

கோப்புப்படம் 

போபியா என்பது வெறும் பயமல்ல. அது ஒரு குறிப்பிட்ட பொருள், சூழ்நிலை, அல்லது செயல் மீதான அகநிலையான, அதீதமான, கட்டுப்படுத்த இயலாத பயம்

கரங்கள் வியர்க்கின்றன, இதயம் படபடக்கிறது, உடல் நடுங்குகிறது. சுய கட்டுப்பாடு மெல்ல இற்றுப் போகிறது. இவை வெறும் திரைப்படக் காட்சிகள் அல்ல. பலருக்கு நிஜம். பெயர் – பயம். அதன் வடிவம், 'போபியா'.

நாம் சிரித்து தள்ளக்கூடிய விசித்திரமான பயங்கள் கூட ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். உயரத்தில் பறப்பது ஒருவருக்கு சாகசமாக இருக்கும்போது, இன்னொருவருக்கு அது ஆயுள் முழுவதும் வேண்டாத சுமை.

போபியா என்பது வெறும் பயமல்ல. அது ஒரு குறிப்பிட்ட பொருள், சூழ்நிலை, அல்லது செயல் மீதான அகநிலையான, அதீதமான, கட்டுப்படுத்த இயலாத பயம்

இந்த பயம் எல்லோருக்கும் உள்ளார்ந்து இருக்கவே இருக்கும், சிலருக்கு மட்டும் இந்த பயம் குறிப்பிட்ட விஷ யங்கள் மீதான பயமாய் மாறிவிடும். சிலருக்கு இருளைக் கண்டால் பயம், சிலருக்கு நாயைக் கண்டால் பயம், சிலருக்கு கரப்பான்பூச்சியைக் கண்டால் பயம், சிலருக்கு உயரம் பயம், சிலருக்கு இடி மின்னல் பயம் இப்படி பலவகையான பயங்கள் உள்ளன. நவீன மருத்துவம் நானூறு வகையான போபியாக்களைப் பட்டியலிடுகிறது. இதில் முக்கியமான சில போபியாக்கள் பற்றி இங்கு காண்போம்.


இயற்கை சார்ந்தவை:

உயர பயம் (Acrophobia), இடி மின்னல் பயம் (Astraphobia), இருட்டு பயம் (Nyctophobia) - Describe them vividly.

விலங்கு சார்ந்தவை:

சிலந்தி பயம் (Arachnophobia), நாய் பயம் (Cynophobia), பாம்பு பயம் (Ophidiophobia) - Bring them to life for your readers.

சமூக சார்ந்தவை:

பொது இடங்களில் பேசுவது குறித்த பயம் (Glossophobia), கூட்டம் சார்ந்த பயம் (Agoraphobia) – Link them to relatable social scenarios.

உடல், மருத்துவம் சார்ந்தவை:

ஊசி பயம் (Trypanophobia), இரத்த பயம் (Hemophobia) - Highlight the physical reactions these trigger.

விசித்திரமான பயங்கள்:

பொம்மை பயம் (Pediophobia), நீளமான வார்த்தைகள் பயம்

சைனோபோபியா

நாயைக் கண்டால் உருவாகும் பயம் இது. சின்ன நாயோ பெரிய நாயோ அதைக் கண்டாலே அலறுவார்கள். தெருவில் செல்லும்போது நாய் அருகில் வந்தாலே ஓடிவிடுவார்கள். சிறு வயதில் ஏற்பட்ட சில அதிர்ச்சியான விஷயங்கள் மனதை பாதிப்பதால் இப்பயம் உருவாகிறது.


அக்ரோபோபியா

உயரத்தைக் கண்டால் வரக்கூடிய பயம் இது. விமானத்தில் பறப்பதற்கு பயப்படுவதும் இதே வகைதான். இவர்களுக்கு சிறிய நாற்காலியில் ஏறி நிற்பதற்கும் கூட பயம் இருக்கும். உயரத்தில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றி மயக்கமாகிவிடுவார்கள். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக் இயக்கிய 'வெர்டிகோ' படத்தில் நாயகனுக்கு இருப்பது இந்தவகை பயமே. நம்ம கருணாஸ், வசூல் ராஜா படத்தில் இப்படித்தான் வருவார்

கிளாஸ்ட்ரோபோபியா

குறுகலான இடைவெளி, சந்து, மேலே உயரம் குறைவாக உள்ள இடங்களில் சிலருக்கு பயம் ஏற்படும். காருக்குள் இருக்கும் போது வாந்தி வருவது, லிப்ட்டில் செல்ல பயம் , சுரங்கப்பாதை அல்லது குறுகலான வழித்தடங்களில் நடக்க பயம் எல்லாம் இந்த வகை பயம்தான்.

ஹீமோபோபியா

இரத்தத்தைப் பார்த்தால் பயம் ஏற்படுவதை ஹீமோபோபியா என்பார்கள். சாதாரணமாக கையில் ஊசி குத்தி ஒரு சொட்டு ரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் இவர்கள் மயங்கிவிடுவார்கள். ஒரு துளி ரத்தம் கூட இவர்கள் பார்க்கக் கூடாது. பெரும் விபத்துகள் நடக்கும் இடங்களில் இவர்கள் இருந்தால் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நெக்டோபோபியா

இருட்டில் இருக்கும்போது பயம் ஏற்படுவது நெக்டோபோபியா. இந்த பயம் எல்லோருக்குமே உள்ளார்ந்து இருக்கும். பெரும்பாலும் தனிமையில் இருக்கும்போதே இந்த பய உணர்வு கடுமையாக ஆட்கொள்ளும், இருட்டில் பேய், பிசாசுகள் இருப்பது போலவும், ஏதேதோ உருவங்கள் அசைவது போலவும் தோன்றும். சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களே இப்பயம் உருவாகக் காரணம். பெரும்பாலும் தனிமையில் இருந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் இந்த பயம் உருவாகும். இவர்கள் தனியாக இல்லாமல் இருப்பது நல்லது,

ஒபிடியோபோபியா

பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, சிலந்தி போன்றவற்றைக் கண்டால் உருவாகும் இனம் புரியாத பயம் இது. சிலருக்கு இது பயமாக இருக்காது. ஒருவகை ஒவ்வாமையாக அருவருப்பாக இருக்கும். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த வகை போபியா அதிகம் இருக்கும். வீடுகளுக்குள் இருக்கும் கரப்பான்கள், பல்லிகளைப் பார்த்தால் அலறி நடுங்குவார்கள்.

நெக்ரோபோபியா

மரண பயம் என்போம் இல்லையா அதுதான் நெக்ரோபோபியா. சாவை நினைத்துப் பயப்படுவார்கள். தாம் இறந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும். அடிக்கடி உடல் நலம் குறித்த கவலை இருக்கும். திடீரென இறந்துவிட்டால் என்ன ஆகும் என்று பகல் கனவு காண்பார்கள். அதை நினைத்து பயப்படுவார்கள். இழவு வீடுகளுக்குச் செல்வது, சவப்பெட்டிகளைப் பார்ப்பது, சுடுகாட்டுக்குச் சென்று கல்லறைகளைப் பார்ப்பது எல்லாமே இவர்களுக்கு பயமாய் இருக்கும்.

ஈனோக்ளோபோபியா

கூட்டத்தைப் பார்த்தாலே சிலருக்கு பயமாக இருக்கும். கும்பலான இடங்கள், நெரிசலான மக்கள் கூடும் வெளிகள், திருவிழாக்கள், ரயில் நிலையங்கள், மாநாடுகள், மைதானங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள். தன்னுள்ளேயே சுருங்கி இருக்கும் தனியர்களுக்கு இந்த வகை பயம் இருக்கும். இவர்களுக்கு கும்பல் என்றில்லை நான்கைந்து பேர் சேர்ந்து இருந்தாலே சங்கோஜமாக இருக்கும். எப்படா அந்த இடத்தை விட்டு நகர்வோம் என்று இருக்கும். சட்டென தனிமைக்குள் நுழைந்து தன்னை ஒளித்துக்கொள்வார்கள்.

அடிச்சிபோபியா

சிலருக்கு தோல்வி கண்டு பயம் இருக்கும். தோற்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது அவர்கள் ஈகோவுக்கு இழுக்கு என நினைப்பார்கள். எனவே, போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள். சாதாரணமாக வீட்டில் விளையாடும் கேரம், செஸ், சீட்டுக் கட்டு போன்ற விளையாட்டுகளில்கூட கலந்துகொள்ள மாட்டார்கள்.


ஹைட்ரோபோபியா

சிலருக்கு தண்ணீர் என்றாலே பயம் இருக்கும். சிறிய அளவிலான தண்ணீர் அவர்களை பயமுறுத்தாது, குளம், ஏரி, ஆறு, கடல் போன்ற பெரிய நீர் பரப்புகளைக் கண்டால் பதட்டமாகிவிடு வார்கள். கடல் அருகே செல்லும்போதே நடுங்குவார்கள். ஆற்றில் சுழல் இருக்கும் என்று நடுங்குவார்கள். நீர்நிலைகள் பக்கமே செல்ல மாட்டார்கள்.

கேமோபோபியா

திருமணம், இல்வாழ்க்கை, இணையோடு வாழ்வது என்ற உறவுநிலைகளே சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். திருமண பந்தம் தொடர்பாய் நிறைய குழப்பமான சிந்தனைகள் இருக்கும். அதனால் மணம் செய்யவே அஞ்சுவார்கள். சிறுவயதில் ஏற்பட்ட சிக்கலான மன உணர்வுகள், பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் போன்றவற்றைப் பார்த்து இந்த போபியாவை வளர்த்துக் கொள்வார்கள்.

லிக்கியோபோபியா

மகப்பேறுக்கு பயப்படுவதுதான் இந்த போபியா. பெரும்பாலும் இளம் பெண் களுக்கு இந்த பயம் இருக்கும். குறிப்பிட்ட வயதில் இந்த பயம் உருவாகி பின்னர் இயல்பான தாய்மைக்கான வேட்கை யால் இந்த போபியா வெல்லப்படும் என் றாலும் சிலருக்கு அழுத்தமாக இந்த பயம் இருக்கும். அதற்குக் காரணம் சிறுவய தில் அவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள்தான். யாராவது பெரியவர் கள் மகப்பேற்றின் போது இறப்பதையோ சிரமப்படுவதையோ பார்த்திருப்பார்கள். அதனால் உருவான போபியா இது.

சிகிச்சை என்ன?

பொதுவாக போபியாக்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் இல்லை. மேலை நாடுகளில்கூட நான்கில் ஒரு பகுதிய னர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்க றார்கள். சிலருக்கு இந்த போபியா கட மையாக இருக்கும். அவர்கள் நிச்சயம் உளவியல் நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அ சியம். உதாரணமாக, திருமண பயம், மகப்பேறு பயம் போன்ற போபியா உள்ளவர்கள் நிச்சயம் ஒரு மனநல மருத்து வரை நாடுவது நல்லது.

சிலவகை போபியாக்கள் அந்த சூழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் இருக்கும்போது சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, விமானத்தில் பறப்பது, நாய் பயம் போன்ற போபியா உள்ளவர்கள் அடிக்கடி பயணிக்க வேண்டிய சூழலில் இருந்தாலோ வளர்ப்புப் பிராணிகளோடு வாழ வேண்டிய சூழலில் இருந்தாலோ இந்த போபியாவுக்கு சிகிச்சை எடுப்பதுநல்லது.

பயம் சக்தி வாய்ந்தது. ஆக்குவதும் அழிப்பதுமான சக்தி அதற்கு உண்டு. போபியா உங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைக்க அனுமதிக்காதீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள், நிர்வகிக்கப் பழகுங்கள், அதற்குமேல் உயருங்கள்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!