வயிற்று பிரச்னைகளை குணமாக்கும் நோடோசிஸ் மாத்திரை பற்றி தெரியுமா?
நாம்அன்றாடம் பல நோய்களுக்கு டாக்டர்களின் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். இதில் நோடோசிஸ் என்ற மாத்திரையின் பயன்களைப் பற்றி பார்ப்போமா.
HIGHLIGHTS

nodosis tablet uses in tamil மனிதர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அதற்குரிய டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்கிறோம். அவர் நம்மை செக் செய்த பின் நோய்க்காரணிக்குரிய மாத்திரை, மருந்துகளை எழுதி தருகிறார். ஆனால் நாம் சாப்பிடும் மாத்திரையின் பயன் என்ன என்பதை ஒரு சில நோயாளிகள் அறியாமலேயே சாப்பிடுகின்றனர். இதனை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில் நாம் நோடோசிஸ் எனப்படும் மாத்திரையின் அவசியம் குறித்து தெரிந்துகொள்வோம்.
நோடோசிஸ் மாத்திரையானது நம் உடலில் ஏற்படும் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், வாயு பிரச்னை உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டவையாக திகழ்கிறது. ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்றில் இருந்து ஏப்பம் ஏப்பமாக வரும். அதேபோல் வயிறு கல் போன்று இருப்பதாக உணர்வார்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு இது ஒரு அரிய மருந்து.
nodosis tablet uses in tamil நம் வயிற்றில் உருவாக கூடிய ஆசிட்களை நடுநிலையாக்க இம்மாத்திரையை உட்கொண்டவுடன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்து ஆசிட் பிரச்னையை சமனாக்கும்ஆற்றல் பெற்றது. மேலும் இது நம் உடலில் உள்ள ரத்தம் மற்றும் சிறுநீரிலுள்ள பிஎச் அளவைக்கூடுதலாக்கி நெஞ்செரிச்சல், அஜீரணக்கோளாறு பிரச்னையை தீர்க்கிறது. மேலும் நம் வயிற்றில் தேவையில்லாத நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது.
இந்த மாத்திரையினை உணவுக்கு முன்னரோ அல்லது உணவுக்கு பின்னரோ டாக்டர்கள் அறிவுறுத்தலின் படி சாப்பிட்டுக்கொள்ளலாம். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையினை நாம் உட்கொள்ள கூடாது. அதோடு அவர் எவ்வளவு சாப்பிட சொல்கிறாரோ அதனை அந்த நேரத்தில் நாம் உட்கொள்வது அவசியம். இல்லாவிட்டால் இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதி. நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்து உட்கொள்பவராக இருந்தால்அதனை டாக்டரிடம் தெரிவிப்பது மிக மிக அவசியம். அப்போதுதான் அவர் அதனை கருத்தில்கொண்டு இந்த மாத்திரையினை டாக்டர்கள் உங்களுக்கு பரிந்துரைப்பார்கள். எனவே இம்மாத்திரை சாப்பிடுவதை முன்னரே நிறுத்திவிட கூடாது.
முக்கிய எச்சரிக்கை
nodosis tablet uses intamil இந்த மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கி சாப்பிடக்கூடாது. மேலும் வயிறு, கிட்னி சம்பந்தமான பிரச்னைகளால் நாம் பாதிக்கப்பட்டால் டாக்டர்களின் அறிவுரைப்படியே இம்மருந்தை உட்கொள்வது அவசியம். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலுாட்டும் பெண்கள் ஆகியோர் தகுந்த டாக்டர்களிடம்கலந்தாலோசித்த பின்னரே இந்த மாத்திரைகளை அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்வது மிக மிக அவசியம் ஆகும். நம் உடலில் ஏற்படும் அஜீரணக்கோளாறுகளை குணமாக்குகிறது.
மாத்திரையின் பயன்கள்
நம் உடலில் ஏற்படும் அஜீரணக்கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் நம் வயிற்றில் ஏற்படும் அதிக ஆசிட் அளவை குறைக்கிறது. வயிற்றின்மேற்புறத்தில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு தோன்றுவதோடுநெஞ்செரிச்சலும்ஏற்படும். வயிற்றில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வாயுவை கட்டுப்படுத்திவெளியேற்றுகிறது. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த சூழலிலும் இம்மருந்தினை உட்கொள்ள கூடாது. எனவே அஜீரணக்கோளாறுக்கு வழி வகுக்கும் வகையில் அதிகப்படியான உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவிலான உணவினை எடுத்துக்கொள்வது நல்லது.உங்களையே அறியாமல் உடல் எடை கூடினால் அதனை குறைப்பதற்கான வழி வகுக்க வேண்டும்.
மாத்திரையை எவ்வாறு சாப்பிடுவது?
உங்கள் டாக்டர் என்ன பரிந்துரைத்தாரோ அதன் படி உட்கொள்ளவேண்டும். உணவுக்கு முன்போ, பின்போ டாக்டர் அறிவுரைப்படி உட்கொள்ளவேண்டும். முழு மாத்திரையினை விழுங்கிவிட வேண்டும்.மாத்திரையினை உடைக்க கூடாது. மருந்து சீட்டில் டாக்டர் பரிந்துரைத்தபடி கால அளவுகளில் இம்மாத்திரையினை உட்கொள்வது அவசியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்ப காலத்தில் நோடோசிஸ் மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால் அந்த மருந்தை எடுத்துக்கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் டாக்டரின் அறிவுரை இல்லாமல் நீங்கள் இந்த மாத்திரையினை மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
nodosis tablet uses in tamil குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவரும் பெண்கள் டாக்டரின் அறிவுரை இல்லாமல் நோடோசிஸ் மாத்திரையினை எடுத்துக்கொள்ளகூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
கிட்னி, ஈரல், இதயம்
இம்மருந்தானது கிட்னி மீது மிக அரிதாக சிறுநீரகத்துக்கு தீமையை ஏற்படுத்தும். கல்லீரலுக்கும்இதேபோல்தான். இதயத்துக்கு இம் மருந்து எந்த வித ஆபத்தினையும் விளைவிக்காது.
இம்மருந்தை உட்கொண்டு விட்டு வாகனங்களை இயக்கலாம். மனநல கோளாறுகளுக்கு இம் மருந்து தீர்வாகாது. பெரும்பாலும் டாக்டர்கள் 200 மற்றும் 500 எம்ஜி மாத்திரைகளையே நோய்களுக்கு பரிந்துரைப்பது வழக்கம்.