வந்தாச்சு...மீண்டும் வந்தாச்சு.....உஷார்...மக்களே ...உஷார்.... ஒமைக்ரான் பிஎப் 7 - அறிகுறிகளும், தடுப்புநடவடிக்கையும்

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions, ஆஹா...மீண்டும் வந்துடுச்சு கொரோனா. இனி எல்லோருமே மிக மிக உஷாராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வந்தாச்சு...மீண்டும் வந்தாச்சு.....உஷார்...மக்களே ...உஷார்.... ஒமைக்ரான் பிஎப் 7 - அறிகுறிகளும், தடுப்புநடவடிக்கையும்
X

கொரோனா மீண்டும் வந்திடுச்சு.....எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்  (கோப்பு படம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

கடந்த 2020 ம் ஆண்டு உலகிற்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்...சீனாவின் யூகான்மாகாணத்தில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் தான்...உலகம் முழுக்க பரவியதால் பலர் உயிரிழக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் அதாவது மார்ச் 2020 ல் திடீரென இது பரவியதால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலகமே திணறியது.

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions


கொரோனா வைரசின் உருமாற்றமடைந்த பிஎப் 7 வைரஸ் தொற்றின் மாதிரிப்படம் (கோப்பு படம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

பின்னர் பலவித ஊரடங்கு அறிவிப்பினை அறிவித்து ஒரு சில மாதங்கள் கழித்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருவகை தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அதனைக் கட்டாயம் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய , மாநில சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகு கொரோனாவின் உருமாற்றம் என டெல்டா வைரஸ்,ஒமைக்ரான் என வைரஸ் தோன்றினாலும் அதனையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மீண்டும் அச்சுறுத்தல்

சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மீண்டும் மறு அவதாரம் எடுத்துள்ள கொரோனா வைரசின் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் பிஎப்7 தாக்கியதால் சீனாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே இடம் இல்லாமல் பலர் காரில் அமர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions


பிஎப்7- பரவலைக் கருத்திற்கொண்டு அனைத்து இடங்களிலும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. (கோப்பு படம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த பிஎப்7 வைரஸ் ஆனது மீண்டும் தொற்றுநோயாக உருவெடுத்து வருவதால் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கூட தாக்கும் வல்லமை பெற்றதாக விளங்குகிறது இது.

தற்போது சீனாவில் பெரும்பான்மையான மக்களை இந்த வைரஸ் தொற்று தாக்கியதால் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் 4 பேருக்கு இத்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 4 பேருக்கு இத்தொற்று உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பரவும்

ஆய்வறிக்கைகளின் கூற்றுப்படி இந்த ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் தொற்று விரைவில் பரவக்கூடிய வல்லமை படைத்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான பரவும் காலம் குறுகியது.எனவே துவக்கநிலையில் கண்டறிந்தவுடன் மிகவும் உஷாரான நிலையில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம் ஆகும்.

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions


மீண்டும்....டெஸ்ட் ஆரம்பம்.... மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது (கோப்புபடம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

யார் ? யார்? கவனமாக இருக்க வேண்டும்?

இந்த வைரஸ் தொற்றின் பரவும் காலம் குறுகியது என்பதால் நாம் அனைவருமே உஷாராக இருக்க வேண்டும். இருந்த போதிலும் ஏற்கனவே நோய்களுக்கு ஆட்பட்டிருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டியது மிக மிகஅவசியம் ஆகும். அதாவது உடம்பில் நோய் எதிர்ப்புத்திறனை குறைவாக பெற்றுள்ளவர்கள், தடுப்பூசி இரண்டும் போடாதவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், புற்றுநோயாளிகள், சர்க்கரை வியாதியினை கட்டுக்குள் வைத்திருக்காதவர்கள், இருதய நோயாளிகள், கிட்னி பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டோர் மிகவும் கவனமுடன்இருக்கவேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

நோய்க்கான அறிகுறிகள் என்ன?

ஏற்கனவே நமக்கு கொரோனா அறிவுறுத்திய அறிகுறிகளே இதற்கும். அதாவது தொடர்ந்து மூக்கிலிருந்து சளி ஒழுகுதல், காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இந்நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வேறு பல நோய்களுக்கு ஆட்பட்டவர்களை இது எளிதில் தாக்கும் வல்லமை படைத்தது என்பதால் இந்நோய் எளிதில் தொற்றிவிடும் ஆபத்து உள்ளது.

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions


உருமாற்றமடைந்த பிஎப் 7 வைரஸ் தொற்றின் படம் தான் இது. (கோப்பு படம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

முன்னெச்செரிக்கை தடுப்பு என்ன?

தற்போது ஆண்டின் இறுதியில் உள்ளோம். இம்மாதம் 25ந்தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுக்க கொண்டாட உள்ளனர். அதேபோல் 5 நாட்கள் கழித்து 2022 க்கு விடைகொடுத்து 2023 ஐ வரவேற்க தயாராக உள்ளனர். இந்நிலையில் இக்கொரோனா பரவல் அறிவிப்பானது அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற பண்டிகைகள் நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவர். அப்படி கூடினாலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை உரிய முறையில் அனுசரிக்க வேண்டும் என மத்திய, மாநில சுகாதாரத்துறையானது எச்சரித்துள்ளது.

வழிகாட்டு விதிமுறைகள் மீண்டும் அமல்

கொரோனா ஒமைக்ரானின் மறுஉருமாற்றமான பிஎப் 7 வைரஸ் தொற்று மீண்டும் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலும், சென்னையில் முதல்வர் தலைமையிலும்நேற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுமக்கள் அனைவரும் தொற்று தடுப்பு நடைமுறைகளைக் கவனத்துடன் பின்பற்றிட வேண்டும். பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

முன்னெச்செரிக்கை தடுப்பூசி டோஸ் போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும். முதியவர்கள் , உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் மரபணு மாற்றத்தைக் கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உருமாற்றம் அடைந்த வைரஸ் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருந்தால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்செரிக்கையுடன் செயலாற்ற முடியும்.

கொரோனா பரவலானது இன்னும் முடிவுக்கு வரவில்லை.எனவே அலட்சிய போக்கைக் கைவிட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவேண்டும். விமானநிலையங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனை கட்டமைப்பு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், செயற்கை சுவாச கருவிகள்,பணியாளர்கள், தயார்நிலையில் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions


அடிக்கடி மூக்கில் சளி ஒழுகல், தொண்டை வறட்சி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் அறிகுறிகளாகும்,(கோப்பு படம்)

new symptoms of covid 2022, omicron bf 7 symptoms and precautions

இந்திய மருத்துவ சங்கம்

ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 5.37 லட்சம் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நம் நாட்டில் 24 மணி நேரத்தில் 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கு சீனாவில் பரவி வரும் புதிய உருமாறிய வைரஸ் பிஎப்7 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை விழிப்புணர்வு அறிக்கையில்,

திருமணங்கள், அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்கள், சர்வதேச பயணங்கள் போன்றவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நலம். காய்ச்சல், தொண்டைவலி, இருமல், வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக டாக்டரை கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறவேண்டியது மிக மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த முன்னெச்செரிக்கை கூட்டத்திலும் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Dec 2022 9:52 AM GMT

Related News