/* */

உங்களுக்கு தலைமுடிஅடிக்கடி கொட்டுகிறதா?....தடுக்க இயற்கை வழிமுறைகள் ....படியுங்களேன்....

natural restriction method of hair fall மனிதர்களில் ஆண்,பெண் ஆகிய யாராயினும் அவர்களுடைய முடியே அவரவர்களுக்கு அழகு. ஆனால் இன்றைய நாகரிக உலகில் முடி உதிர்வது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

HIGHLIGHTS

உங்களுக்கு தலைமுடிஅடிக்கடி கொட்டுகிறதா?....தடுக்க இயற்கை வழிமுறைகள் ....படியுங்களேன்....
X

natural restriction method of hair fall


natural restriction method of hair fall

மனிதர்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலை முடிதான். ஒரு 15 வருடத்திற்கு முன்பெல்லாம் வழுக்கை என்பது வயதான பின்னர்தான் அனைவருக்கும் வரக்கூடியதாக இருந்தது. ஆனால்காலப்போக்கில் இயற்கை முடி பராமரிப்பு முறைகளை கைவிட்டு நாகரிகம் என்ற மோகத்தில் ஷாம்பூ போட ஆரம்பித்ததில் இருந்து இளவயதினருக்கே வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது.

மாறிவரும் நாகரிக உலகில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவருக்குமே ஒருவிதமான டென்ஷன்.. பரபரப்பு என்பது தொற்றிக்கொண்டது. வேறு எதுவும் வேணாங்க... எப்போ நாம கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்தே மனஅழுத்தம், மனஇறுக்கம் நம்மை தொற்றிக்கொண்டது.. அதாவது நாம் அவசரமாக ஒரு வேலையை அதில்செய்து கொண்டிருக்கும்போதுதான் அது ஹேங்க் ஆகிவிடும்...சர்வர் சரிவர கிடைக்காது என்ற நிலை... இதுபோல் ஆயிரமாயிரம் பிரச்னைகளை கம்ப்யூட்டரில் வேலை பார்ப்போர் அனுதினமும் சந்திப்பதால் மனஅழுத்தம் அதிகமாவதாலும்இதுபோன்ற முடி பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

natural restriction method of hair fall

natural restriction method of hair fall

பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரை இழப்பை சந்திப்பது பொதுவானது. சில நேரங்களில் இந்த முடி உதிர்வானது அதிகமாக இருக்க காரணங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தற்காலிகமானதே. அதிகமான மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது, தைராய்டுபிரச்னை இருக்கும்போது (தைராய்டு பரிசோதனைக்கு பிறகு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் இது கட்டுப்படும்)உச்சந்தலையில் தொற்று, அழுக்கு, அதிகமாக இருக்கும்போது கர்ப்ப காலத்திலும் பிரசவத்துக்கு பின்பும் என இந்த காலகட்டங்களில் முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அது நாளடைவில் சரியாகிவிடக்கூடும்.

ஆனால்இது தொடர்ந்தால் அது வேறு ஏதோ பிரச்னைக்குரிய காரணமாக இருக்கலாம். அதை தவிர்த்தால் முடி உதிர்வு நிச்சயம் தடுக்கலாம். இவற்றோடு இயற்கையாக முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேறு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

இயற்கை மசாஜ்

கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், என எதை வேண்டுமானாலும் உங்களிடம் இருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப இதை சூடு செய்யுங்கள். லேசாக சூடு இருக்கும் போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கூந்தல் முழுக்க மசாஜ் செய்யுங்கள். கூந்தலின் மயிர்க்கால்கள் முதல் நுனிவரை முழுவதுமாக பொறுமையாக தடவி கூந்தல் முழுக்க படர வேண்டும். விரல்களைக்கொண்டு நன்றாக கூந்தல் இடுக்குகளில் சொரிந்தபடி மென்மையாக அழுத்தத்துடன் தேய்க்கவும்.

கூந்தலுக்கு மசாஜ் செய்த பிறகு கூந்தலை சீப்பு கொண்டு நன்றாக படிய வாரவும். பிறகு தலைக்கு ஹேர் கவர் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். மாதம் ஒரு முறை முழுமையான இந்த மசாஜ் செய்து வந்தால் கூந்தலுக்கு நிறைவான ஊட்டம் கிடைக்கும். முடி உதிர்வு இருக்காது.

natural restriction method of hair fall

natural restriction method of hair fall

தியானம் பழகுங்க

மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் தியானம் செய்வதன் மூலம் உங்கள் மன அழுத்தம் குறைகிறது. ஏனெனில் முடி உதிர்வுக்கு மூல காரணம் மன அழுத்தமும், மற்றும் பதற்றமும்தான். இதைக்குறைத்தால் முடி உதிர்வு நிச்சயம் படிப்படியாக குறையும். தினசரி தியானம் பழகினால் ஹார்மோன் சமநிலைப்படும். மனம் அமைதியாகும். மன அழுத்தமும் குறையும். தியானம் உடலுக்கும் கூந்தலுக்கும் அதிக நன்மை கொடுக்கும்.

natural restriction method of hair fall


natural restriction method of hair fall

முடிக்கு போஷாக்கு

தினசரி முடி பராமரிப்பில் நீங்கள் முடிக்கு போஷாக்கு கொடுக்க வேண்டும். அதிக மெனக்கெடலுடன் கூடிய பராமரிப்பு செய்ய தேவையில்லை. தனியாக நேரம் ஒதுக்கவும் தேவையில்லை.

எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு முன்னதாக க்ரீன் டீ பேக்சூடான நீரில் தோய்த்து இறக்கி குளிர வைத்து கூந்தல் முழுக்க தடவிக்கொள்ளவும். குறிப்பாக உச்சந்தலை பகுதியில் தடவவும். பிறகு ஒரு மணிநேரம் வரை வைத்திருந்துகூந்தலை வழக்கமாக அலசி எடுக்கவும். இது முடி உதிர்தலை தடுக்கும். க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் அது முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை துாண்டும்.

மிதமான மசாஜ்-இரவும் காலையும்

முடி வளர்ச்சியை துாண்டினாலே முடி உதிர்வை பெரும்பாலும் தடுத்துவிடலாம். முடி வளர்ச்சியை துாண்ட மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக்க மிதமான மசாஜ்தேவை. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் ஒதுக்கி மயிர்க்கால்களில் லேசாக அழுத்தம் கொடுத்தால் போதும்.

பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இல்லையெனில் சுத்தமான தேங்காய்எண்ணெய் ஏதாவது ஒன்றை எடுத்துவிரல்களால் தடவி லேசாக மசாஜ் செய்து அழுத்தமும் கொடுக்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகும். மயிர்க்கால்களில் தொற்று நேராது. பொடுகு தீவிரமாகி செதில் உதிர்தல் பிரச்னை வராது. முடி பலமாவதால் முடி உதிர்வு உண்டாகாது.

natural restriction method of hair fall

natural restriction method of hair fall

உதிர்தல் தீவிரமாக இருந்தால்

முடி உதிர்தலைத்தடுக்க மேற்கண்ட நான்கு குறிப்புகளையும் பராமரிப்பது போன்று முடி உதிர்வு இருப்பதாக உணர்ந்தால் சில பராமரிப்புகளையும் தாமதமில்லாமல் மேற்கொள்வது அவசியம்.பூண்டு சாறு , சாம்பார் வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறு, என ஏதாவது ஒன்றை இரவு நேரத்தில் கூந்தலின் மயிர்க்கால்களில் ஸ்கால்ப் பகுதியில் தடவி வரவும். இது மறுநாள் வரைகூந்தலில் ஊறட்டும். பிறகு காலையில் தலைக்கு குளித்துவிட வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இந்த பராமரிப்பை மேற்கொள்ளலாம்.

Updated On: 9 Nov 2022 3:19 PM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
 4. ஈரோடு
  பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
 5. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
 6. ஈரோடு
  ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
 7. ஈரோடு
  பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
 9. நாமக்கல்
  வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
 10. கரூர்
  கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...