/* */

இயற்கை மருத்துவ முறையில் நோய்களை தீர்ப்பது எப்படி?

Natural Method -மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களை தீர்ப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. இயற்கை முறையில் நோய்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போமா?

HIGHLIGHTS

இயற்கை மருத்துவ முறையில்   நோய்களை  தீர்ப்பது எப்படி?
X

உடலுக்கு ஆரோக்யமான அருகம்புல் சாறு (மாதிரி படம்)

Natural Method - இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்டது. இயற்கையில் தாமாகவே வளரும் தாவரங்கள், அரிய வகை மூலிகைகளாக இனங்கண்டு, பல்வேறு பட்ட நோய்களைத் தீர்க்கும்அரிய மருந்துகளாக அக்காலம் முதல் இக்காலம் வரை இயற்கை மருந்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில மருத்துவமுறையான அலோபதியில் பக்கவிளைவுகள் வருவதற்கு நிறைய வழிகளில் வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் கிடைக்கும் தாவர மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளினால் பல்வேறுபட்ட நோய்கள் குணமாகி உள்ளது. இதுநாள் வரை எந்த விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என இயற்கை மருந்தினை உபயோகிப்பவர்கள் கூறியதே இதற்கு சான்று.

இயற்கைக்கு ஈடாகாது

நவீன மருத்துவ உலகில் எத்தனையோ நோய்களுக்கு அனுதினமும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கை மருந்துகளுக்கு ஈடாகாது. காரணம் நவீன மருத்துவத்தில் பணவிரயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. ஒரு நோயாளி நோய்க்கு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்றால் எவ்வளவு பணம் செலவாகும் என்பது அவருக்கே தெரியாது. சாதாரண நோய்களுக்கு கூட பல்வேறு சோதனைகள் செய்து பணவிரயம் ஆவதோடு, பாதிக்கப்பட்ட நோய்களில் இருந்தும் நிவாரணம் பெற முடிவதில்லை. மாத்திரைகளே உணவு போல வரிசையாக சாப்பிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் உணவுக்கு முன் பின் என பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் உட்படுகிறார்கள், இவையெல்லாம் இந்திய இயற்கை மருத்துவ முறைகளில் அறவே இல்லை. மனித உடல் ஒரு உயிருள்ள இயந்திரம். அதற்கு இயற்கை எரிபொருள் என்பது அவசியமாகும். இங்கு விலை மதிப்பற்ற உயிருக்கு உடலுக்கு தகுந்த உணவு எது? என்று யாராவது யோசித்து நடைமுறைப்படுத்துகிறார்களா? நம்மில் பலருக்கு உணவு முறை கட்டுப்பாடுகள் இல்லை. அதனாலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம் எ ன்பது பலருக்கும் தெரிவதில்லை.

இயற்கை மருத்துவத்தின் கண்களே பெண்கள்தான். அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளின் இன்றியமையாத பலன்களைப் பெண்கள் அறிந்து கொண்டால்தான் அவரவர் குடும்பங்களில் நடைமுறைப்படுத்த முடியும். இயற்கை உணவை தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான செயல். இதனை அனைவரும் மிக எளிதாக கற்றுக்கொண்டு அவரவர்களே தயாரித்துக்கொள்ளலாம்.

உயிர்காக்கும் உயிருள்ள சாறுகள்

நம்மில் பலருக்கு காலைஎழுந்தவுடனேயே காபியோ,டீயோ, கட்டாயம் சாப்பிட்டால்தான் அடுத்த வேலை அவர்களுக்கு ஓடும். இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும். இதுபோல அடிமைப்பழக்கத்திலிருந்து விடுபட தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகளை அருந்தி உடல் ஆரோக்யத்தை வளப்படுத்தலாம்.

அருகம்புல் சாறு

பசுமையான அருகம்புல்லைநன்கு கழுவியவுடன் துண்டுகளாக்கி அம்மியில் வைத்து நீர்விட்டு அரைத்து பிழிந்தால் வரும் சாற்றில் இருநுாறு மி.லி. அளவிற்கு தினமும் சாபிட்டால் போதும் . மிக்சியில் அறைக்க கூடாது. இந்த சாறு ஒரு சர்வசஞ்சீவினி என்பதால் நோயுள்ளவர்கள் இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டவிடன் 1 மணி நேரம் கழித்துதான் வேறு எதுவும் சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்

ரத்தசிவப்பணுக்கள் பெருகும். நரம்பு தளர்ச்சி நீங்கும். உடல் மெலியும்.. அல்சர் நீங்கும். அதிக ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சாறினை பருகினால் நோயிலிருந்து விடுபடலாம். .

வெண்பூசணிச்சாறு

இயற்கைச் சாறுகளில் தலை சிறந்த ஒன்று வெண் பூசணிச்சாறு வயிற்றுப்புண்ணுக்கு இது நல்லதொரு அருமருந்து., அறுவை சிகிச்சைசெய்தாக வேண்டியவர்களுக்கு கூட இந்த மருந்தினால் குணம் அடைய வழி உண்டு.இது சிறிளவு காரமாக இருந்தாலும், இதில் நம் உடலுக்கு தேவையான தாது உப்புகளைக் கொண்டுள்ளதால் இது ஓர் அரு மருந்தாகும். வெள்ளைப் பூசணி கீற்றிலுள்ள தோளைஅகற்றி சாறு நிறைந்த சதைப்பகுதியை மட்டும் சாதாரணமாக பிழிந்தாலோ ஒரு அவுன்ஸ் கிடைக்கும்அதுவே போதும்.

வாழைத்தண்டு சாறு

இந்த சாறானது அதிக ரத்த அழுத்த நோயைக்குணப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. உடல்பருமனாக உள்ளவர்கள் மெலிய விரும்பினால் இந்த சாற்றைப் பருகினால் மாற்றம் தெரியவரும். மேலும் சிறுநீரகம் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும்இது ஒரு அருமருந்து. சிறுநீர்கற்கள் தோன்றாது தடுக்கும் வல்லமை படைத்த மருந்து வாழைத்துண்டுசாறு ஆகும்.

மணத்தக்காளிச்சாறு

மணத்தக்காளி இலைகளை மட்டும் கசக்கி பிழிந்து சாறெடுத்து ஒரு குவளை நீர் விட்டு பருகிட உடல் சூடு தணியும். வயிற்று புண்ணால் அவதிப்படுவோர் இதைஅருந்தினால் நிவாரணம் பெறலாம். அருகம்புல்லுக்கு உள்ள எல்லா மருந்து ஆற்றலும் மணத்தக்காளி சாற்றுக்கு உண்டு.

புதினாகீர்

இது தேங்காய்பாலுடன் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை நீர் உணவு.புதினா சாறு தனியாக எடுத்துக்கொண்டு தேங்காய் பால் சிறிதுடன் கலந்து தேவையான அளவு தண்ணீருடன் கலந்து பருக வேண்டும். இரவு நெடுநேரம் விழித்து பணி செய்பவர்களுக்குஇது அருமருந்து. காபி, டீ, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் பித்தம் தீரசிறந்த மருந்து ஆகும்.



பலம் தரும் கேரட் பால்

காரட்டைசீவி மிக்சியுடன் இட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு தயாரிக்கவேண்டும். அதோடு சிறிது பேரிச்சம்பழத்தையும் சேர்த்து அரைத்து கூழ் பதத்திற்கு அரைக்கவும். ஐஸ்சேர்க்க கூடாது. காரட்டை தனியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.

மெலிந்த உடலைக்கொண்ட குழந்தைகள் ஊட்டம் பெறச்செய்யும்அற்புதமான டானிக் இது. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. உணவே அருமருந்து நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களே பல வகையான நோய்களுக்கு ஆதாரம். எனவே சாப்பிடுவதற்கு சுவையாக உள்ளது என கட்டுப்பாடடில்லாமல் சாப்பிட்டு அவதிப்படாதீர்கள். உணவு கட்டுப்பாடு இருந்தால் உடல் ஆரோக்யம் பெறும். எனவே, எந்தவித பத்தியங்களும் இல்லாத இயற்கை உணவினை சாப்பிட நம்மை பழக்கப்படுத்திக்கொண்டால், நோயின் இன்னல்களில் இருந்து எளிதில்விடுபட்டு சுகமான வாழ்வைப் பெறலாம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Aug 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...