வாயில் நாற்றம் அடிக்கிறதா? தடுப்பது எப்படி?....முதல்ல இதைப் படியுங்க.....

mouth bad breathl,what are the remedies? மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நோய்கள் வித்தியாசப்படுகிறது. ஒரு சிலருக்கு பார்த்தீர்களானல் அருகில் நின்று பேசவே முடியாதபடி அவரது வாயிலிருந்து வித்தியாசமான நாற்றமெடுக்கும். என்ன செய்ய? பேசித்தானே ஆக வேண்டும் என பேசுவோம்...அவர்களுக்கு என்ன தீர்வு ? படிங்க...

HIGHLIGHTS

வாயில் நாற்றம் அடிக்கிறதா? தடுப்பது எப்படி?....முதல்ல இதைப் படியுங்க.....
X

ஒரு சிலரிடம் அருகிலிருந்து  பேசும்போது வாயில் நாற்றம் வரும் என்ன செய்ய?   மூக்கைப் பொத்திக்கொள்ளத்தான் முடியும்  (கோப்பு படம்)

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பல வகையான நோய்களில் வாய் துர்நாற்றமும ஒன்று.இதனால் ஒரு சிலரிடம் அருகில் நின்றுபேசமுடியாது. கப் என்று துர்நாற்றம் வீசும். இது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற துர்நாற்ற்மை எதனால் ஏற்படுகிறது. நம்மிடம் பேசுபவர்கள் திடீரென விலகினால் இரு காரணங்கள் இருக்கலாம். நாம் பேசும் விஷயங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நாம் வாயிலிருந்து வரும் நாற்றம் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

ஒருவருக்கு வாய்நாற்றம் உள்ளது என்பதை அடுத்தவர்கள் அறிந்து அருவருப்பு அடைவதற்கு முன்னராகவே பாதிக்கப்பட்டவர்கள் அவர்களாகவே முன்வந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொண்டால் நல்லது. ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் குவித்து வாய்க்கும் மூக்கிற்கும் மிக அருகில் வைத்துக்கொண்டு, கைகளுக்குள் மூச்சை வெளியிட்டு அதை முகர்ந்து பார்த்தால் துர்நாற்றம் உள்ளதா என்பது தெரிந்துவிடும்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

வாய்நாற்றத்திற்கு என்ன காரணம்?

வாய்நாற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும் பல் மற்றும் ஈறுகளில் உள்ள கோளாறுகளே அதற்கு பிரதானம். மூக்கு, தொண்டை, சுவாசக்குழல், சுவாசப்பை, உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள். நாம் உணவு உண்டதும் வாயை நன்றாக சுத்தம் செய்ய தவறினால், வாயில் இயற்கையாகவே குடிகொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், பற்கள், பல்லிடுக்குகள், பல் ஈறுகள், நாக்கு ஆகியவற்றின் மீது படிந்திருக்கும் உணவுப் பொருளில் வினைபுரிந்து கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய்நாற்றத்திற்கு முக்கிய காரணம். பற்களில் காரை படிவது, பல்ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம்இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெண்மாவு படிவது ஆகியவை வாய் நாற்றத்திற்கு வளையம் அமைக்கும். வாய்ப்புண், வாய்ப்புற்று, சிலிபிஸ் எனப்படும் பால்வினை நோய், வின்சென்ட் நோய், எய்ட்ஸ் நோய், போன்றவையும் வாய் நாற்றத்திற்கு அழைப்பிதழ் அனுப்பும்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

மேலும் மூக்கில் சதை வளர்வது அல்லது அந்நியப் பொருட்கள் மாட்டிக்கொள்வது, முகத்திலுள்ள காற்றறைகளில் சீழ், தொண்டைச்சதையின் சீழ், சுவாசப்பையில் சீழ், தொண்டைப்புண், நுரையீரல் காச நோய், நுரையீரல் புற்று நோய், போன்றவையும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம். இவை தவிர உணவுக்குழாய் அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப்புற்று நோய், உணவு அஜீரணம், சர்க்கரைநோய், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக கோளாறுகள், ஆகிய நோய்களின் போதும் வாய்நாற்றம் உண்டாகும். சிலருக்கு பட்டினி இருப்பதாலும் , உறக்கத்தின்போது வாய் வழியாக சுவாசிப்பதாலும் வாயநாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்குமாதவிலக்கு காலங்களில் சுரக்கின்ற இயக்குநீர்கள் காரணமாக வாய்நாற்றம் உண்டாகலாம்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

என்ன பரிசோதனை?

வாய்நாற்றமுள்ளவர்கள் முதலில் பல் டாக்டரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய்நாற்றம் சரியாகிவிடும். இது தவிர பற்களில் வேறு பிரச்னைகள் இருந்தால் அவற்றிற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து பொது டாக்டர் மற்றும் காது மூக்கு, தொண்டை சிறப்புடாக்டர் உதவியுடன் காற்றறை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே உணவுக்குழாய் அக நோக்கல் பரிசோதனை ஆகியவற்றால் பிற காணரங்களைக் கண்டறிந்து அவற்றையும் களைந்து விட்டால் வாய் நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

எவ்வாறு தடுப்பது?

வாய்நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச்சுத்தமாக வைத்துக்கொள்வதில் அ திக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒரு முறை, இரவு படுக்க போகும் முன் ஒரு முறை என்று இரண்டு முறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல்ஈறுகளுக்கு கெடுதல் உண்டாகிவிடும். பதிலாக மிருதுவான பல் துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது. இவை ஈறுகளைச் சுத்தப்படுத்துவது மட்டுமின்றி அவற்றுக்கு வலுவையும் பொலிவையும் தருகின்றன. பற்கறை நன்றாக சுத்தப்படுத்துவதற்கு பல்துலக்கும் முறைகளை மிகச் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டியதுமுக்கியம்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

குறிப்பாக பல்துலக்கியை வட்டமாக கழற்றித் தேயுங்கள். மேல்வரிசைப் பற்களைக் கீழ்நோக்கியும், கீழ்வரிசைப் பற்களை மேல்நோக்கியும், துலக்க வேண்டும். கீழ்ப்பற்களின் மேற்பரப்புகளையும் மேற்பரப்புகளின் கீழ்பரப்புகளையும், பல்துலக்கியால் முன்னும் பின்னும் வட்டமாக சுழற்றித் தேய்க்கலாம். அப்போதுதான் பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத்துகள்கள் முழுமையாக வெளியேறும். பற்காரை தவிர்க்கப்படும் . சாப்பிடும்முன்பும் சாப்பிட்டபின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிப்பதற்கென்று திரவ மருந்துகள் கிடைக்கின்றன. டாக்டரின் ஆ லோசனைப்படி அவற்றையும் பயன்படுத்தலாம்.

நாக்கை சுத்தப்படுத்துவதும் முக்கியம்

வாயைச்சுத்தப்படுத்துவதும் ஒவ்வொருமுறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக நாக்கின் பின்புறத்தை நன்றாகச்சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய்நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும். இறைச்சி மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்ட பின்பு பற்களின்இடையில் சிக்கியுள்ளவற்றை அகற்ற பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அடிக்கடி பற்களைக்குத்தும்போது ஈறுகளில் குச்சி பட்டு புண் உண்டாகிவிடும். இது வாய்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். எனவே பல்குச்சிகளை கவனமாக பயன்படுத்தவேண்டும். அல்லது இதற்கென உள்ள பல்துலக்கியவர்களைப் பயன்படுத்த வேண்டும். செயற்கை பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்தவேண்டியது அவசியம் ஆகும்.

mouth bad breathl,what are the remedies?


mouth bad breathl,what are the remedies?

உணவுகளில் கவனம்

அதிக மசாலா, எண்ணெய், கொழுப்பு கலந்த உணவுகளும், வெங்காயம் வெள்ளைப்பூண்டு, போன்றவையும் ஐஸ்கிரீம், ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டால் , நாக்கில் உள்ள பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். எனவே இவற்றையும் தவிர்ப்பது நல்லது. பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லேட்,இனிப்பு மாவு, போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள். புகைபிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள், மூக்குப்பொடி போடாதீர்கள், வெற்றிலை, பாக்கு, பான்மசாலா, போடுவதை நிறுத்துங்கள். வாயில் புகையிலையை ஒதுக்கும் பழக்கத்திற்கு விடை கொடுங்கள். சூயிங்கம், மிண்ட் கலந்த மிட்டாய்கள், மற்றும் இனிப்பு மிட்டாய்களை எந்நேரமும் சப்பிக்கொண்டேயிருக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

செயற்கை மணமூட்டிகள் தேவையா?

இன்டர்வியூவிற்கு செல்லும்போதும், சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம்.அதேவேளையில் அ டிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால் அவற்றிலுள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது. ஆகையால் இவற்றிற்கு பதிலாக இலவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் ஒதுக்கிக் கொண்டால் வாய் மணக்கும்.

இது இறுதிதான் என்றாலும் இன்றியமையாதது வயதுஆக ஆக பலருக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வது அதிகரிக்கும். இது வாய்நாற்றத்திற்கு வழிவிடும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். காரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, கொய்யா, போன்ற தண்ணீர்ச்சத்து நிறைந்த காய்கனிகளைச் சாப்பிட்டு வாய் உலராமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் வாயை உலர வைக்கும் மாத்திரைகச் சாப்பிடாதீர்கள். மன அழுத்தத்திற்கு சிறிதும் இடம் தராதீர்கள். கடுமையான மனஅழுத்தம் உமிழ்நீர் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி வாயை உலர வைத்துவிடும் என்பதால்தான் இந்த எச்சரிக்கை என டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி :டாக்டர்.கணேசன். .

Updated On: 25 Jan 2023 12:26 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...