Mosambi In Tamil-சாத்துக்குடி ஜூஸ் குடிங்க... சந்தோஷமா, ஆரோக்கியமா வாழுங்க!

Mosambi In Tamil-சாத்துக்குடி ஜூஸ் குடிங்க... சந்தோஷமா, ஆரோக்கியமா வாழுங்க!
X

mosambi in tamil  - சாத்துக்குடியில் கொட்டிக்கிடக்கிறது ஆரோக்கியம்.

mosambi in tamil- அடேங்கப்பா, சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா, என்று ஆச்சரியமூட்டுகிறது, அதன் மருத்துவ பலன்கள். சாத்துக்குடி ஜூஸ் மட்டும் குடித்தால் போதும். மனிதர்களுக்கு நோயற்ற வாழ்வு நிச்சயம்.

mosambi in tamil - தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

mosambi in tamil - கொளுத்தும் கோடையில், உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு பழச்சாறுகள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். கோடைக்காலத்தில் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து மட்டுமின்றி, இதர ஊட்டச்சத்துக்கள் மற்றும் தேவையான ஆற்றலையும் பழச்சாறுகள் வழங்கும். வெயில் காலத்தில் தினமும் குறைந்தது ஒரு டம்ளர் நற்பதமான பழச்சாற்றினை அருந்த வேண்டியது அவசியம்.


ஆனால் எந்த பழச்சாறு கோடைக்காலத்தில் குடிப்பதற்கு ஏற்றது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். சாத்துக்குடி ஜூஸ் மிகச்சிறந்ததாக இருக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது. இப்போது சாத்துக்குடி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

சாத்துக்குடியில் உள்ள சத்துக்கள்

சாத்துக்குடி ஜூஸ் அதன் ஊட்டச்சத்துக்களால் கோடைக்கு ஏற்ற சிறப்பான பானமாக சொல்லப்படுகிறது. அந்த அளவில் சாத்துக்குடியில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் ஏராளமாக நிறைந்துள்ளது.

அவை;

நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர்

இந்த பழத்தின் சிறப்பு, இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு பெரிய அளவு சாத்துக்குடியில் அதிகபட்சமாக 43 கலோரிகள் இருக்கும். இப்போது சாத்துக்குடி பழம் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகளை வழங்குகிறது.


ஆரோக்கியமான செரிமானம்

கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் சந்திப்பது செரிமான பிரச்னைகளைத் தான். ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு, பலரும் அது சரியாக செரிமானம் ஆகாமல் அவஸ்தைப்படுவர். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்பட்டால், சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாம். இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், வயிற்றில் பித்த நீர், செரிமான அமிலங்களை சீரான அளவில் பராமரிக்கும். சாத்துக்குடி குடலியக்கம் சிறப்பாக செயல்பட செய்வதோடு, அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.

எடை இழப்பு

கோடையில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், வேகமாக உடல் எடை குறையும். எனவே, எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர், டயட்டில் சாத்துக்குடி ஜூஸை தவறாமல் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை வேகமாகவும், ஆரோக்கியமான முறையிலும் குறைவதைக் காணலாம்.

உடல் வறட்சியை எதிர்க்கும்

கோடைக்காலத்தில் உடல் வறட்சி ஒரு பொதுவான பிரச்னையாகும். ஏனெனில் சூரியனால் உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் ஆற்றல் உறிஞ்சப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க வெறும் நீர் மட்டுமே உதவி புரியாது. அத்துடன் பழச்சாறுகளையும் பருகினால் தான் உடலுக்கு நீர்ச்சத்துடன், ஆற்றலும் கிடைக்கும். அதிலும் சாத்துக்குடி ஜூஸைப் பருகினால், உடலின் ஆற்றல் மற்றும் நீர்ச்சத்து சட்டென்று அதிகரிக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தற்போதைய சூழ்நிலையில் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமாகும். ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால் தான், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான லெமொனின் க்ளுக்கோசைடு என்னும் ப்ளேவோனாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. ஆகவே சாத்துக்குடி ஜூஸ் குடித்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

கண் தொற்றுகளைத் தடுக்கும்

சாத்துக்குடி கண்களின் ஆரோக்கியத்தில் பல மாயங்களைப் புரியும். இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், பல வகையான கண் தொற்றுக்கள் மற்றும் கண் பிரச்னைகளான க்ளுக்கோமா, கண் புரை போன்றவற்றைத் தடுக்கும்.


அழகான சருமம்

சாத்துக்குடி ஜூஸ் நல்ல அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சரும செல்களுக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, அழகை மேம்படுத்தி வெளிக்காட்டும். குறிப்பாக முகப்பரு, சீழ் நிறைந்த பருக்கள் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

தலைமுடி ஆரோக்கியம் மேம்படும்

சாத்துக்குடி சருமத்தில் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது. இதில் உள்ள பல்வேறு பண்புகள், கோடையில் சந்திக்கும் தலை முடி சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும்., குறிப்பாக பொடுகு மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்பவர்கள், சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால், விரைவில் இப்பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture