பாலில் கலப்படம்: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிர்ச்சி ரிப்போர்ட்

பாலில் கலப்படம் செய்யப்படும் பொருள்கள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பாலில் கலப்படம்: உணவு பாதுகாப்புத் துறையினர் அதிர்ச்சி ரிப்போர்ட்
X

பால். (மாதிரி படம்).

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதை நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், பாலில் கலக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை சற்று அதிகம். மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை பால் அவசியம் என்பதால், பாலில் நடக்கும் கலப்படங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் இதோ:

பாலில் அதிகமாக கலக்கப்படும் பொருள் தண்ணீராகும். இது பாலின் கொள்ளளவினை உயர்த்தி காண்பிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. சுகாதாரமற்ற தண்ணீரைப் பாலில் கலக்கும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற தொற்று வியாதிகள் ஏற்படலாம். பாலில் தண்ணீர் கலந்துள்ளதா என்பதை வீட்டில் எளிதாக ஆய்வு செய்து கொள்ளலாம்.

ஒரு டைல்ஸ் அல்லது ஸ்டெயிண்லெஸ் ஸ்டீல் தட்டினை எடுத்துக்கொண்டு, அதனை 45 டிகிரி கோணத்தில் சாய்வாக வைத்துக்கொண்டு, ஒரு சொட்டு பால் விட்டால், தடம் பதித்து, மெதுவாகக் கீழே இறங்கினால், அது தூய்மையான பால் ஆகும். அவ்வாறு தடம் எதையும் பதிவு செய்யாமல், மிகவும் விரைவாக கீழே இறங்கினால், அது தண்ணீர் கலந்த பால் ஆகும்.

பாலில் கலக்கப்படக் கூடிய மற்றொரு பொருள் டிடர்ஜெண்ட். இது எதற்காக கலக்கின்றார்கள் எனில், நுரைக்கும் தன்மையே அதிகரித்து காண்பிப்பதற்காக கலக்கின்றார்கள். இதனால் நமக்கு வயிற்று உபாதைகள் ஏற்படலாம் மற்றும் செரிமான உறுப்புகள் பாதிக்கப்படலாம். பாலில் டிடர்ஜெண்ட் கலந்துள்ளதா என்பதை பரிசோதிக்க, ஒரு கண்ணாடி டம்பளரில் 5 மிலி பால் மற்றும் 5 மிலி தண்ணீர் சேர்த்து எடுத்துக்கொண்டு, நன்றாக குலுக்கவும். குலுக்கிய பின்னர் பாலை நிலையாக சற்று நேரம் வைத்திருக்கவும். சிறிது நேரம் கழித்து, மேல்பரப்பில் அடர்த்தியான நுரை இருந்தால் அது டிடர்ஜெண்ட் கலக்கப்பட்ட பால் ஆகும். மிகவும் மெலிதான நுரையிருந்தால், அது தூய்மையான பால் ஆகும்.

பாலில் சற்று அதிகம் கலக்கப்படுவது ஸ்டார்ச் ஆகும். இது பாலின் கொள்ளளவு மற்றும் கொழுப்பற்ற இதர திடச் சத்துக்களை கூடுதலாக காண்பிப்பதற்காகக் கலக்கப்படுகிறது. செரிமாணம் ஆகாத ஸ்டார்ச்சினால், நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகலாம்.

பாலில் ஸ்டார்ச் கலந்துள்ளதா என்பதை அறிய, 2-3 மிலி பாலை 5 மில்லி தண்ணீருடன் கலந்து (1:2 என்ற விகிதம்) அதனைக் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். அதன் பின்னர் அதனைக் கண்ணாடி டம்பளருக்கு மாற்றி அதில் மூன்று சொட்டுக்கள் டிங்சர் அயோடினை விட வேண்டும். நீல நிறமாக பால் மாறினால், அதில் ஸ்டார்ச் உள்ளது என்று பொருள். பாலின் நிறம் மாறவில்லை என்றால், அது தூய்மையான பால் என்று பொருள்.

அந்நிய கொழுப்பு (Foreign Fat): இது பாலில் உள்ள கொழுப்புச்சத்தைக் கூடுதலாக காண்பிக்கக் கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், கொழுப்புச்சத்து அதிகமாகும் மற்றும் ஏற்கனவே அப்பிரச்சினை உள்ளோர்க்கு அதன் பாதிப்பு அதிகமாகலாம். சோடியம் ஹைட்ராக்சைடு (காஸ்ட்டிக் சோடா): இப்பொருள் பால் உற்பத்தி நிலையங்களில், பாலைக் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்களை கிருமிநீக்கம் செய்து, தூய்மைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது. தற்செயலாகவோ அல்லது அறிந்தோ இப்பொருளானது பாலில் கலக்கப்படுகின்றது. அதிகமான அமிலத்தன்மையை குறைக்கவும் மற்றும் பாலை கொதிக்க வைக்கும் பொழுது திரிந்து போகாமல் இருக்கவும் கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், நமது திசுக்கள் பாதிப்படையும் மற்றும் உணவு குழாயில் புண்கள் ஏற்படும்.

சர்க்கரை: கொழுப்பற்ற இதர திடச்சத்துப் பொருட்களைக் கூடுதலாக காண்பிக்க இது கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. உப்பு: பாலின் அடர்த்தியை கூடுதலாக காண்பிக்க இது கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், நமது ரத்த அழுத்தம் அதிகமாகலாம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம்.

மால்டோடெக்ஸ்ட்ரின்: பாலில் நடைபெறும் தண்ணீர் கலப்படத்தை மறைப்பதற்காகவும் மற்றும் கொழுப்பற்ற இதரத் திடச்சத்துப் பொருட்களை கூடுதலாகக் காண்பிக்கவும் கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சக்கரையின் தாக்கத்தை அதிகப்படுத்தும். சோடியம் பை கார்பனேட்: தரமற்ற வகையில் பாதுகாக்கப்பட்ட பாலின் அமிலத்தன்மையை சீர்செய்ய இது கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், இனப்பெருக்கத்திற்கு தேவையான ஹார்மோன் செயல்பாடு பாதிப்படைவதால், மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

அம்மோனியம் சல்ஃபேட்: பாலின் அடர்த்தியை லாக்டோமீட்டரில் கூடுதலாக காண்பிக்க கலக்கப்படுகிறது. இதனைக் கலந்த பாலை அருந்துவதால், வயிறு உள்ளிட்ட செரிமான உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். அதிக அளவிலான கலப்படம் மனக்குழப்பத்தையும், நடத்தை மாற்றங்களையும் உண்டாக்கும் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 April 2023 6:33 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...