/* */

ஒற்றைத்தலைவலியை ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்தமுடியுமா?

migraine cured by homeo treatment மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில்ஒன்று தலைவலி. அதுவும் ஒற்றைத்தலைவலி என்று வந்துவிட்டால் போதும் அவ்வளவுதான்? இதற்கு ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்தலாமா? என்பதைப் பற்றிப்பார்ப்போம்.

HIGHLIGHTS

ஒற்றைத்தலைவலியை ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்தமுடியுமா?
X

ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படும்போது மண்டையை கழற்றிவைத்தால் என்ன? என சொல்லும் அளவிற்கு வலியின் பாதிப்பு  இருக்கும்.

migraine cured by homeo treatment


migraine cured by homeo treatment

மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களில் ஒன்றுதான் தலைவலி. தலைவலியிலும் ஒற்றைத்தலைவலி என்று ஒரு நோய்இருக்கிறது. இது சாதாரண தலைவலியை விட சற்று கொடுமையானது. தொடர்ந்து வலித்துக்கொண்டேயிருப்பது போல் தோன்றும். இந்த ஒற்றைத்தலைவலியை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா? என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

சாதாரணமாக நீங்கள் நினைப்பது போல மூளையோ மூளையின் மேல்மூடியோ வலியை உண்டு பண்ணுவதில்லை . மூளை என்பது வலி உண்டாகும் இடத்திற்கு வலி உணர்வினை எடுத்துச்செல்லும் வேலையினை செய்கிறதே ஒழிய மூளை வலியை உணராது. ஆகவே தலைவலிஎன்பது மண்டை ஓட்டின்வெளிப்புறமுள்ள தசைகள், ரத்தநாளங்கள், மற்றும் நரம்பு மண்டலங்கள் இவற்றினாலேயே உண்டாகிறது.

தலைவலி எல்லோருக்கும் வருமா?

ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் சாதாரண தலைவலியானது ஏற்பட்டு தொல்லைக்குள்ளாகிறான். இதில் பெரும்பாலானோர் வீட்டு உபயோக மருந்துகள், பழக்க வழக்கங்களில் சற்று மாறுதல் ஏற்படுத்திக்கொள்வதாலும், கடைகளில்வாங்கிச் சாப்பிடும் வலி நிவாரணிகளாலும் இதனுடைய பாதிப்புகள் குறைவாகவே தெரிகிறது.இதில் சுமார் 7 சதவீத மக்கள் தொடர்ந்து இந்த தொல்லையை அனுபவிக்கின்றனர்.

ஒற்றைத்தலைவலி என்றால் என்ன?

பொதுவாக தலையின் ஒரு பக்கமாக ஏற்படும் வலிக்கு ஒற்றைத்தலைவலி என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் மைக்ரைன் என்று சொல்கிறோம். பொதுவாக ஒரு பக்கமாக இந்த தலைவலி ஏற்பட்டாலும் பலருக்கு இது இரண்டு பக்கமும் ஏற்படுவது உண்டு. இது பரம்பரையாக ஏற்படக்கூடிய ஒரு தொல்லையாகும். இது அவ்வப்போது உரிய கால இடைவெளிகளில் திரும்பத் திரும்ப வரக்கூடியது. ஒவ்வொருவருக்கும் இதனுடைய தீவிரம், அடிக்கடி ஏற்படும் தன்மை, தாக்கத்தின் நேரம் இவையெல்லாம் மாறுபடக்கூடியது. ஒற்றைத்தலைவலியுடன் பசியின்மை, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், மனநிலையில் மாறுதல் அதாவது கோபம், எரிச்சல், பற்றின்மை, பொறுப்பின்மை முதலியன ஏற்படும்.

ஒற்றைத்தலைவலி தன்மை

ஒற்றைத்தலைவலியை கிளாசிக் மைக்ரைன், சிம்பிள் மைக்ரைன், கிளஸ்டர் மைக்ரைன், என்று 3 வகைகளாக பிரிக்கலாம். கிளாசிகல் மைக்ரைன் என்பது வருவதற்கு முன்பே ஒரு அறிகுறி தெரியும் அதற்கு ஆரா என்று கூறுகிறோம். ஒருவிதமான உடல் சோர்வு, மனச்சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஏற்பட்டு தலைவலி உண்டாகும். தொடு உணர்வில் மாறுதல் அதாவது கையிலோ, முகத்தில் ஒரு பக்கத்திலோ மரத்துப்போவது போன்ற உணர்வு ஏற்படும். தலைச்சுற்றல் ஒரு முக்கியமான அறிகுறியாகும். இருக்கும் அறையே தன்னைச்சுற்றி சுற்றுவது போன்றோ, சற்று நகர்ந்தால் கூட தலைச்சுற்றல் அதிகமாவது போன்றோ கூடவே வாந்தி எடுக்கும் தன்மையும் ஏற்படும்.

பொருட்கள் இரண்டிரண்டாக தெரிவது போன்றோ மங்கலான பார்வையோ, விசித்திரமான ஒளிப்புள்ளிகளின் தோற்றமோ, கறுப்புப்புள்ளிகளின் தோற்றமோ ஏற்படக்கூடும். தலையைச் சம்மட்டியால் அடிப்பது, விண்விண்ணென்று தெறிப்பது அல்லது பளிச்சிடுவது போல வலிஏற்படக்கூடும். இது மிகவும் இரைச்சலான இடங்கள், அதிக ஒளி உள்ள இடங்களில் அதிகமாககூடும்.இவர்களுக்கு சற்று காற்றோட்டமான இருட்டறையில் படுத்தால் சுகமாக இருக்கும் வாந்தி எடுத்தால் தலைவலிகுறைவதுண்டு-நாடித்துடிப்பானது காதின் முன்புறமோ, பொட்டிலோ மிகவும் துடிப்புடன் காணப்படும்.

migraine cured by homeo treatment


migraine cured by homeo treatment

சிம்பிள் மைக்ரைன் என்பது கிளாசிக் மைக்ரைன் போன்றே வரும். ஆனால் எச்சரிக்கை அறிகுறி ஏதுமின்றி அடிக்கடி திடீரென்று தோன்றும் உடல் சோர்வு, வாந்தி எடுப்பது போன்ற உணர்வு, மயக்கம், குளிர், வயிற்றுப்போக்கு, வெளிச்சம், இரைச்சல், முதலியவற்றால் தொந்தரவு ஆகியவை தோன்றி தலைவலி உண்டாகும். இதில்கண்ணின் மேற்புறமோ, பின்புறமோ, தலையின் பின்பாகத்திலோ ஒரு பக்கமாக தோன்றிவலி உண்டாகும்.

கிளஸ்டர் மைக்ரைன் என்பது 20 வயதில் இருந்து 40 வயதிற்குள்ளாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு தீவிரமான தலைவலியாகும். இந்த தலைவலி ஒரு கண்ணில் ஏற்பட்டு கண் சிவந்து போய் மூக்கில் நீர்வடிவதோ, மூக்கடைப்போ ஏற்படக்கூடும். இந்த வலி 4 முதல் 6 வாரங்களுக்கு இருக்கும்.நாளொன்றுக்கு ஓரிருமுறை ஏற்பட்டு கால்மணி முதல் முக்கால்மணி வரை தீவிரமா வலி ஏற்படக்கூடும்.

ஒற்றைத்தலைவலி- காரணம் என்ன?

என்விரான்மென்டல் ஸ்ட்ரெஸ் எனப்படும் சுற்றுப்புறச்சூழ்நிலையின் இறுக்கம், மனத்தளர்ச்சி, கோபம் இவை முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது நம் வீட்டிலோ, வேலை செய்யும் இடங்களிலோ அல்லது வேறு எந்த சூழ்நிலையிலும் ஏற்படுவதற்கு வாய்ப்பாகிறது. மனவேதனை மற்றும் உணர்வுகளை அமுக்கி வைப்பதினால் கூட இது ஏற்படக்கூடும். உணவுப்பழக்கம் என்று பார்க்கும்போது அதிக அளவு கொழுப்பு, மாமிசம், மதுப்பழக்கம் டைரமின் அடங்கிய உணவுப்பொருட்கள் குறிப்பாக பாலாடைக்கட்டி, சாக்லேட், பன்னீர், மற்றும் ஈரல், மீன், பாதாம், முந்திரி முதலியன ஒற்றைத்தலைவலியை உண்டாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ கூடும்.

அலர்ஜிக் பேக்டர்ஸ் என்று பார்க்கும்போது சில உணவுப் புரோட்டீன், சாக்லேட், புகையிலை முதலியன ஒற்றைத்தலைவலியை உண்டாக்ககூடும். அதிக வெளிச்சமான இடங்கள், சூரிய ஒளி ,இரைச்சலான இடங்கள் தலைவலி உண்டாகக் காரணங்களாகின்றன. காற்றோட்டமில்லாத,புகைநிறைந்த இடங்கள் நீண்ட துாரப்பயணம், நேரத்திற்கு சாப்பிடாமை முதலியவையும் முக்கிய காரணங்களாகின்றன.

ஒற்றைத்தலைவலி எப்படி உண்டாகிறது?

முன்பு மருத்துவ உலகம், ஒற்றைத்தலைவலி என்பது ரத்த ஓட்ட மாறுதல்களினாலோ, தசைகளின் இறுக்கத்தினாலோ விரியும்போது விண்ணென்று தெறிப்பது போல வலிஉ ண்டாகிறது மற்றும் டென்சன் தலைவலியில் மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தசைகளின் இறுக்கத்தினால் வலி உண்டாவதாக கருதியது. ஆனால் இவையெல்லாம்மூளையில் ஏற்படுகிற ரசாயன மாறுதல்களினால் ஏற்படுகின்றன பின் விளைவுகளே ஆகும். ஹார்மோன் சுரப்புகளும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அதாவது 90 சதவீத பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வலி அறவே நின்று விடுகிறது. மீண்டும் குழந்தை பெற்ற பிறகு தலைவலி உண்டாகிறது.பெண்களுக்குதுாரம் ஏற்படுவதற்கு முன்பும் பின்பும் தலைவலி அதிகமாகிறது. அது போன்ற கர்ப்பப்பை எடுத்த பிறகு ஒற்றைத்தலைவலி அதிகமாகிறது. மேலும் வயது 50 அல்லது 60 ஐ தாண்டும்போது ஒற்றைத்தலைவலி இயல்பாகவே குறைந்து நின்று விடுகிறது.

migraine cured by homeo treatment


migraine cured by homeo treatment

வேறு காரணம் ஏதாவது உண்டா?

இன்ட்ராகிரானிகல் பிளீடிங் இதில்ஏற்படும் ரத்த கசிவினால் மூளைப்பகுதியில் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தினாலோ அல்லது பிளாக்கேஜ் என்ற அடைப்பினாலோ தலைவலி உண்டாகலாம். மூளையில் ஏற்படுகின்ற கட்டி மெனிங்டிஸ், கண்பார்வைக்கோளாறுகள்-கிளாக்கோமா, போன்ற நிலைகளாலும் தலைவலி உண்டாகும். சைனஸ்டிஸ் என்ற பீனிசம், பற்சொத்தை, பற்களின்வேர் பாதிக்கப்படுதல், அறிவுப்பற்கள் பக்கவாட்டில் வெளிவருதல், செர்விகல்ஸ்பான்டிலைடிஸ் மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற பல நிலைகளில் தலைவலி உண்டாகும். ஆகவே என்ன காரணங்களினால் தலைவலி உண்டாயிற்று என்று ஆராய்ந்து ஹோமியோபதி மருந்தினைத் தேர்வு செய்து கொடுக்கும் போது இது எளிதில் குணமாகிறது.

ஒற்றைத்தலைவலிமுழுமையாக குணப்படுத்தமுடியுமா?

ஒற்றைத்தலைவலியை ஹோமியோபதி மருந்துகளால் எளிதில் குணப்படுத்த முடியும். ஹோமியோபதி உடல் மற்றும் மனது சம்பந்தப்பட்ட அனைத்து அறிகுறிகளும் ஆராயப்பட்டு மருந்துகள் அந்த நோயாளிக்கு ஏற்ப கொடுப்பதால் அவர் எளிதில் குணமடைகிறார். இதனை கான்ஸ்டிடியூஷனல் ட்ரீட்மென்ட் என்றுகூறுகிறோம்.

அதாவது இரண்டு மனிதர்கள் இந்த உலகத்தில் ஒரே மாதிரியான உடல் அமைப்பும், மனநிலையும் பெற்றிருக்க முடியாது.அதுபோன்றும் ஒரே விதமான நோய்க்குறிகளும், மனநிலையும்இருக்க முடியாது. அதாவது ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரே வியாதியால் துன்புறும் நோயாளிகள் பலருக்கு வெவ்வேறு விதமான மருந்துகளை தேர்வு செய்து கொடுக்க வேண்டியிருக்கும்.

சாதாரணமாக ஒற்றைத்தவலி உள்ள நோயாளிகள் பலர் வந்தால் அவர்களுக்கு ஏற்படும் தலைவலியின் தன்மை, எந்த இடத்தில், எந்த பக்கம், எதனால் அதிகமாகிறது, அல்லது குறைகிறது, எந்த நிலையில் மாறுபடுகிறது. அவர்களின் மனநிலை மாறுதல்கள் என்னென்ன? (அதாவது கோபம், துக்கம், சந்தேகப்படும் மனப்பான்மை, பொறுமையின்மை) என பல்வேறு பட்ட மனநிலைகளுக்கு ஏற்றவாறு அந்த குறிப்பிட்ட மனிதனுக்கு மற்ற ஒரு மருந்தினை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரும் இதனைத்தான் கான்ஸ்டிடியூஷனல் ட்ரீட்மென்ட் என்கிறோம். இவ்வாறு ஹோமியோபதியில் ஒவ்வொரு நோயாளிக்கும் அவருடைய முழு அறிகுறிகளும் பெறப்பட்டு ஒரு குறிப்பிட்ட மருந்தினை தேர்ந்தெடுத்து கொடுக்கப்படும்போது அவர்களை எளிதாகவும், முழுமையாகவும், குணமடைய செய்வதுடன் இந்த மாறுபட்ட மனநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு ஒரு நல்ல ஆரோக்யமான முழுமனிதனாக ஹோமியோபதி மருந்துகள் மாற்றுகின்றன.

நன்றி :டாக்டர். முகுந்தன், சேலம்.

Updated On: 17 Oct 2022 4:32 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...