தொப்பையைக் குறைக்க என்ன வழி? முதல்ல இதை படியுங்களேன்.....
தொப்பை இது பலருக்கு இல்லை என வருந்துவர். ஆனால் ஒருசிலரோ இதனை குறைப்பதற்கு என்ன வழி என தேடிக்கொண்டிருக்கின்றனர். எனவே முடிந்த வரை தொடர் உடற்பயிற்சி, நடைபயிற்சியின் மூலம் உணவு கட்டுப்பாட்டின் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
HIGHLIGHTS

தொப்பை வராமல் தடுக்க என்ன வழி?
முதல்ல இதைப் படியுங்களேன்.....
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்த வகையில் நம் உடல் ஆரோக்யமாக இருந்தால்தான் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடியும். ஆனால் மாறி வரும் உணவுப்பழக்கம்,உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளால் தற்காலத்தில் உடல் பருமன் மற்றும்தொப்பையினால் அவதிப்படுபவர் ஏராளம். ஒருசிலர் உடல் அதிகப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலும், பெரும்பான்மையானவரோ உடல்ப ருமன், தொப்பையை குறைக்க என்ன வழிகள் என கூகுளிலும், உடற்பயிற்சிக்கூடங்களிலும் தவம் கிடக்கின்றனர். தொப்பையினை என்னனென்ன வழிமுறைளை கையாண்டால் குறைக்கலாம் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போமா?.
தொப்பையை வளர்ப்பதில் ஆண், பெண் பேதம் இல்லை. தற்காலத்தில் இருவருக்கும் சிறுவயது முதலே தொப்பை விழுவதால் பர்சானிலிட்டியில்இது மைனஸ் ஆகி விடுவதால் இதனைக்குறைக்க பலர் பிரம்ம பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இன்று திருமணமாகாத ஒரு சில இளம்பெண்களுக்கு கூட அதிக தொப்பையில் அவதிப்படுவதை காணமுடிகிறது. இத்தகைய பெண்களுக்கு தொப்பையைக் குறைக்க என்ன வழி தெரியுமா? வாயை அடக்கி வைத்தாலே போதும். அதாவது உணவுக்கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே உடல் இளைக்க ஆரம்பித்துவிடும்.
''உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு'' என்று ஒளவைப்பிராட்டியார் சொன்னது போல் உணவைசுருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் அழகாக மிளிர்வார்கள் என்ற கருத்தில் அவர் சொல்லியுள்ளார்.
மாறிவரும் நாகரிக உலகில் தற்காலத்தில் பெண்களும், ஆண்களைப்போல அனைத்து துறைகளிலும் வேலை செய்வதால் பெரும்பாலான பெண்களுக்கு நொறுக்குத்தீனி உண்ணவே நேரம் இருக்காது. உணவு சாப்பிட நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே நேரத்தினை வகுத்தனர். 3 வேளை மட்டுந்தான் உணவு. இடையிடையே காபி, டீ மட்டும் அருந்தலாம். ஆனால் இ க்காலத்தில் நேரம் காலம் பார்ப்பதில்லை. பெரும்பாலானோர் சாப்பிடுவதே டிவி , ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டுதான் இதனால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் அக்காலத்தில் பெரியவர்கள் சாப்பிடும்போது பேசக்கூடாது என சொல்வர். காலம் மாற மாற பாரம்பரிய பண்புகளும் மாறியதால்தான்இப்பிரச்னைகளே. கடையினை பார்த்தால் போதும், பீட்சா,பர்கர், கூல்டிரிங்ஸ், கேக் வகைகள், பப்ஸ் என சாப்பிடுகின்றனர். அப்புறம் ஏன் தொப்பை விழாது?
குறைப்பதற்கான வழிமுறைகள்
* முதன் முதலாக இடையிடையே சாப்பிடும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடாமல் நிறுத்தி விட வேண்டும்.
*சாப்பிடும் சாப்பாட்டிலும் கட்டுப்பாடுகள் அதாவது அளவில் இருக்க வேண்டும்.
*காலை, மாலை வேளைகளில் குறைந்த பட்சம் அரை மணிநேரமாவது உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
*இரண்டு நேரத்தில் ஒரு நேரம் வாக்கிங் தொடர்ச்சியாக செல்லவேண்டும்.
*சைக்கிள் ஓட்ட தெரிந்தவர்கள் சைக்கிள் ஓட்டினாலே உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதால் கலோரிகள் குறைய அதிக வாய்ப்புண்டு.
*உடலில் ஏற்படும் வறட்சியைப் போக்க தினந்தோறும் குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் 8 முதல் 9 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
*தினந்தோறும் சாப்பிடும் உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும், சர்க்கரையின் அளவையும் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.
*உப்பு அதிகம் சேர்க்கும் பட்சத்தில் உடலில் உள்ள நீரானது வெளியே செல்லாமல் தங்கிவிடும். இதனால் உப்பை குறைவாக சேர்ப்பது நல்லது.
*வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பினை குறைக்கும்.
*பாதாம்பருப்பு, வேர்க்கடலை, வால்நட் போன்றவற்றை உண்பது உடலுக்கு நல்லது.
*குறைவான கலோரிகள், மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த தயிரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் எடை குறையும்.
*உடலின் முக்கிய கொழுப்பான ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய சால்மன் மீனை உண்பதால் தொப்பை விழாது.
எனவே முடிந்தவரை நொறுக்கு தீனிகளில் இருந்து விலகி இருங்கள். உங்கள் அன்றாட வேலைகளை பார்ப்பது போல் உங்களுடைய ஆரோக்யத்திலும் தயவு செய்து அக்கறை காட்டுங்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி , போன்றவற்றினை நாள் தவறாமல் செய்ய பழகுங்கள். உங்களுக்கு உங்கள் எடை, தொப்பை குறைவதைக்கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். மீண்டும் நினைவூட்டுகிறேன்... ''சுவர் இல்லாமல் சித்திரம் வரையவே முடியாது'' எனவே ஆரோக்யமே ஆயுளுக்கும் பாதுகாப்பு.முயற்சி செய்யுங்க... முன்னேறி வரும் தொப்பையை குறைக்க....