மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..
5 Medicinal Plants in Tamil
5 Medicinal Plants in Tamil-மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.
வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.
இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.
பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.
மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.
தாவரங்கள் பல்வேறு வழிகளில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில தாவரங்களின் அறிவியல் மற்றும் பொதுப் பெயருடன் பயன்பாடுகளையும் பாப்போம்
குப்பைமேனி
இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
குப்பைமேனியின் இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும். இந்த தாவர இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
வில்வம்
இது ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி, செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
தூதுவளை
இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது இருமல், சளி, காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
கீழா நெல்லி
இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. கல்லீரல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
சோற்றுக் கற்றாழை
இந்த தாவரமானது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் இலைகள் தீக்காயங்கள், ஒவ்வாமை எதிர்வினைகள், மூலநோய், முடக்கு வாதம், வாத காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்படும் அழற்சி போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
அருகம்புல்:
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். வயிற்றுப் புண்கள், நீரிழிவு நோய், மற்றும் செரிமான அழற்சி நிலைகளை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.
மேலும் பல மூலிகைகள் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
- அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.
- சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.
- ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
- வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
- வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
- ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
- செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
- ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
- வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
- கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
- கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.
- கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
- கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu