மஞ்சளின் மருத்துவ மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா?,,,, படிச்சு பாருங்க....

Turmeric Benefits in Tamil - நாம் அன்றாடம் உணவு சமைக்கும்போது உப பொருளாக மஞ்சள் பயன்படுகிறது. அந்த வகையில் மஞ்சள் ஒருகிருமி நாசினியாகும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மஞ்சளின் மருத்துவ மகிமை பற்றி  உங்களுக்கு தெரியுமா?,,,, படிச்சு பாருங்க....
X

உலர்ந்த மஞ்சள் கிழங்கு (பைல் படம்)

Turmeric Benefits in Tamil -
பசுமையாக அடர்ந்து வளர்ந்துள்ள மஞ்சள் செடி (உள்படம்)மஞ்சள்பொடி, மஞ்சள் கிழங்கு (பைல்படம்)

medicinal characters of turmeric

நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களில் மஞ்சள் மிகவும் இன்றியமையாதது. இது ஒரு கிருமி நாசினி என்று கூட சொல்லலாம். அந்த வகையில் அனைத்து மருத்துவகுணங்களும் இதற்கு உண்டு.மங்களப்பொருளாக நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் மஞ்சள் அதுமட்டுமின்றி உணவு சமைக்கும்போது உப பொருளாகவும் பயன்படுகிறது.

மருத்துவகுணத்தில் மஞ்சளை அடிச்சிக்க முடியாது.அந்த அளவுக்கு மஞ்சளில் மருத்துவகுணமானது அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? .உணவில் சேர்ப்பதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும்அதிகரிக்கிறது. உணவிலுள்ள நச்சுகளை அழிக்க வல்லது மஞ்சள்.

எந்த வியாதியையும் முதலில் தடுத்து நிறு்துதும் ஆற்றல் மிக்க கிருமிநாசினியாக மஞ்சள் விளங்குகிறது. மஞ்சளானது கிழங்கு வகையைச் சார்ந்தது. பூமிக்கடியில்தான் மஞ்சள் கிழங்கு விளையும். இது வெப்பம் மிகுந்த பிரதேசங்களில் பயிராகிறது. தண்டில்லாத செடி வகையைச் சேர்ந்த கிழங்கின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைக்கொத்துகள் நீண்டும். பூக்கள் அடர்த்தியாகவும் இருக்கும்.

மஞ்சளில் பல வகைகள் உண்டு. கறி, மஞ்சள், கஸ்துாரி மஞ்சள், காட்டு மஞ்சள், மர மஞ்சள்,பலா மஞ்சள்,நாகமஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள் என பல வகைகள் உள்ளன. மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும் நடைமுறையில் கறி மஞ்சள், பூசுமஞ்சள், மட்டுமே உள்ளன.கஸ்துாரி மஞ்சள் குழந்தையின் உடலில் வரும் கரப்பான் ,நீர் தோஷங்கள், பெரியவர்களுக்கு வரும் மேக நோய்கள் ,புண்புரைகள், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணமாக்கும் வல்லமை பெற்றது.

குடல் நோய்களுக்கு

வயிற்றில் கிருமிகள்,குடலில் தங்கும் துர்நீர், குடல் வாயு மற்றும் குடல் சம்பந்தமான பல நோய்களுக்கு, மஞ்சள் உப்பைத் தயாரித்து உட்கொண்டால் நலமாகும். மஞ்சள் உப்பு என்பது மஞ்சளை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் விட்டு கலக்கி வைத்துவிடவும். பின்னர் தெளியும் நீரை மட்டும் மேலோட்டமாக எடுத்து வடித்துவிட்டு அடி பாகத்தில் தங்கியதை அடுப்பிலேற்றி தீயிட்டால் நீர் நன்றாக சுண்டி உப்பு போன்று ஏற்படும். அதனை எடுத்து நன்றாக உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த மஞ்சள் உப்பில் தினசரி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டுவந்தால் மேற்கண்ட எல்லாவிதமான குடல்நோய்கள் அகன்றுவிடும்.

medicinal characters of turmeric


medicinal characters of turmeric

பவுத்திரக் கட்டிக்கு

பவுத்திரக் கட்டியினால் கஷ்டப்படுகின்றவர்கள் உடனடியாக மஞ்சள் இலையுடன் வெங்காயம் வேளைக் கீரை,தும்பைவேர் இலைகளை சம அளவாக எடுத்து ஒன்றாக சேர்த்து மெழுக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.அரைத்தெடுத்த விழுதை பவுத்திரக் கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் விரைவில் பவுத்திரக்கட்டி உடைந்து குணமாகும்.

நரம்பு சிலந்திக்கு

நரம்பு சிலந்தி என்பது கடுமையான நோயாகும். இது உடல் சதையில் உற்பத்தியாகி சதையைக் குடைந்து கொண்டு வெளியே வரும். இது மெல்லிய நாக்குப் பூச்சியைப் போன்று ஆறு அங்குல நீளம் இருக்கும்.மஞ்சளையும் , சிறுபாலை இலையையும் சமஅளவு எடுத்து மெழுக அரைத்து அப்புண்ணின்மேல் வைத்துக்கட்டி வந்தால் உள்ளே இருக்கும் புழு மெதுவாக வெளியே வந்துவிடும். அந்த புழு வெளியே வரும்போது மிகவும் மெதுவாக அறுந்துவிடாமல் வெளியே இழுக்க வேண்டும். புழு முழுமையும் வெளியே வந்துவிட்டால் குணமாகும்.

பல்நோய்களுக்கு

பல் ஆட்டம், பல் சொத்தை, ஈறுவீக்கம், ஆகியவற்றினால் சிரமப்படுகின்றவர்களுக்கு மஞ்சள் மருத்துவ முறை. கஸ்துாரி மஞ்சள், கருந்துளசி, புதினா தழை , உப்பு-ஆகிய ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்து இடித்து துாளாக்கி கொண்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

தினசரி காலையில் சிறிது துாள் எடுத்து பல் விளக்கி வந்தால் பல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். பல் வலி இருக்கின்ற போது அந்த பல்லில் இந்த துாளை சிறிது எடுத்து நன்றாக தேய்த்து வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.

நமைச்சல்-படை

இதற்கு மஞ்சளுடன் ஆடாதொடை இலையைச் சேர்த்து பகவின் சிறுநீர் விட்டு அரைத்து படையுள்ள இடங்களில் பூசி வந்தால் நமைச்சல் படை குணமாகும். இதனைச் சொறி, சிரங்கு இருந்தாலும் பூசிவந்தால் குணமாகும்.

பொன்னுக்கு வீங்கி

பொன்னுக்கு வீங்கி வந்து இருந்தால் இதற்கு பலர் மஞ்சளை அரைத்துப்பூசினால் சரியாகிவிடும். பலா மஞ்சளை வறுத்து பொடியாக்கி உபயோகித்தால் அம்மை நோயினால் உண்டான வடுக்கல் இருந்தால் மறைந்துவிடும்.

தொடர் இருமலா-?

சில சமயம் புகைத்து இருமல் வந்துகொண்டே இருக்கும். மஞ்சள் துாள் சேர்ந்து கலக்கி, பால் சிறிது ஆறியதும் குடிக்கவும். தொல்லைக்கொடுத்த தொடர் இருமல் அகன்றுவிடும்.

மூக்கில் சதை

மூக்கில் சதை வளர்ந்து மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் நிவாரணம் பெற ஒரு வழி. மருந்துக்கடையில் நகம் என்னும் சரக்கை 20 கிராம் வாங்கிவந்து வில்வ இலைக் கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்ந்து நன்றாக நைந்து 50 மி்ல்லி நல்லெண்ணெயில் போட்டுக்காய்ச்சவும்.

நன்றாக காய்ந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு தினசரி இரண்டு துளிஇந்த எண்ணெயை மூக்கில் விட்டு வந்தால் விரைவில் சதை கரைந்து மூக்கடைப்பு நீங்கிவிடும்.

பெண்கள் முகத்தில் முடி

பெண்களில் சிலருக்கு முகத்தில் மீசை போன்றுமுடிகளும், கை கால்களிலும் முடி வளர்ந்து பெண்மையில் அழகு கெட்டுவிடும்.இதுபோன்றவர்கள் தொடர்ந்து மஞ்சள் தேய்த்துக்குளித்து வந்தால் சீக்கிரம் முடி உதிர்ந்து பட்டுப்போன்று மேனியை அளிக்கும்.

medicinal characters of turmeric


medicinal characters of turmeric

வியர்வை நாற்றம் போக

வெயில் காலத்தில் சிலருக்கு வியர்வை நாற்றம் கற்றாழை நாற்றம் என்று நின்று பேச முடியாத படி நாற்றம் அடிக்கும். இதுபோன்றோர் வேர்வையின் நாற்றத்தைப் போக்கிக்கொள்ள ஒரு வழி. கஸ்துாரி மஞ்சள் 100 கிராம், கடலைப்பருப்பு 100கிராம், எடுத்து அத்துடன் 200 கிராம் அரிசியைக் கலந்து அதனுடன் அகில் கட்டை, சந்தனக்கட்டை, வகைக்கு 30 கிராம் சேர்த்து நன்றாக அரைத்துபொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.

தினசரி காலையில் குளிக்கும்போது இந்தப் பொடியை எடுத்து தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம், கற்றாழை நாற்றம் அகன்றுவிடுவதுடன் சருமம் மென்மையுடன் இருக்கும்.

பிரசவ பெண் வயிறு சுத்தமாக

பிரசவித்த பெண்களி்ன் வயிற்றில் கட்டுப்பட்ட விஷ நீரினை வெளிப்படுத்த கீழ்க்காணும் முறையைக் கையாளுங்கள். 50 கிராம் மஞ்சள் பொடியைப் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி கால்பாகமாக சுண்டக்காய்ச்சி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுத்து பிரசவமான பெண்கள் உள்ளுக்குச் சாப்பிட்டால் வயிற்றை நன்றாக சுத்தப்படுத்தி உடல் ஆரோக்யத்தினைக் கொடுக்கும்.

மாலைக்கண் நோய்

மாலைக்கண் நோய் உள்ளவர்கள், பச்சை மஞ்சள் சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதே அளவு விளக்கெண்ணெயைக் கலந்து குழைத்து தினசரி அதிகாலையில் கண்களில் விட்டுவந்தால் மாலைக் கண் வியாதி அகலும்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:08 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
 2. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. காஞ்சிபுரம்
  செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
 4. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
 6. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...
 8. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்
 9. தமிழ்நாடு
  TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க...
 10. நாமக்கல்
  திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...