தினமும் 3 பேரீச்சை பழம் சாப்பிடுங்க – நம் உடலில் நிகழும் அதிசயத்தை கண்டுகளிங்க!
Dry Dates Benefits - இந்த நவீன உலகில், நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களைக் காண்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. அந்த அளவிற்கு, நீக்கமற நிறைந்து இருக்கிறது நீரிழிவு பாதிப்பு.
HIGHLIGHTS

Medicinal benefits of dates - தினமும் 3 பேரீச்சை பழம் சாப்பிடுங்க – நம் உடலில் நிகழும் அதிசயத்தை கண்டுகளிங்க!
Dry Dates Benefits - தற்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழல், சிறுவயதிலேயே, நம்மை நீரிழிவு நோயாளி ஆக்கிவிடுகிறது. நாம் நமது உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்தாவிட்டால், இளம்வயதிலேயே, எண்ணிலடங்களா நோயின் புகலிடமாக நமது உடல் விளங்குவதை நாம் தடுக்க முடியாது.
இந்த நவீன உலகில், நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களைக் காண்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. அந்த அளவிற்கு, நீக்கமற நிறைந்து இருக்கிறது நீரிழிவு பாதிப்பு.
Medicinal benefits of dates - நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கிறது பேரீச்சை பழம். 100 கிராம் பேரீச்சை பழத்தில் 312 கலோரிகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 பேரீச்சை பழங்கள் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிச்சயம் அதிகரிக்காது.
நீரிழிவு பாதிப்பின் அறிகுறிகளான அடிக்கடி பசி எடுத்தல், உடல் பருமன் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு அளிக்கும் அருமருந்தாக, இந்த பேரீச்சை பழம் விளங்குகிறது.
Medicinal benefits of dates - பேரீச்சைப் பழத்தை பாதாம், முந்திரி உள்ளிட்ட நட்ஸ்களுடன் குழந்தைகளுக்கு சிற்றுணவாக அளித்து வரலாம். இதன்மூலம், அவர்களின் உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் தங்குதடையின்றி அவர்களுக்கு கிடைக்கும். பேரீச்சைப் பழத்தில், நமது உடலின் சிறந்த செயல்பாட்டுக்கு தேவையான இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி6, மெக்னீசியம், இயற்கை சர்க்கரைகளான பிரக்டோஸ் , சுக்ரோஸ் உள்ளிட்டவைகள் அதிகளவில் உள்ளன.
பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். கெட்ட கொழுப்பைக் (Fat) குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2