Maxirich Tablet Uses In Tamil- கால்சியம் சத்தினை அதிகரிக்க செய்யும் மேக்சிரிச் மாத்திரை : உங்களுக்கு தெரியுமா?

Maxirich Tablet  Uses In Tamil-  கால்சியம் சத்தினை அதிகரிக்க செய்யும்  மேக்சிரிச் மாத்திரை : உங்களுக்கு தெரியுமா?
X
Maxirich Tablet Uses In Tamil- மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளே தீர்வு. அந்த வகையில் மேக்சிரிச் மாத்திரை எந்தெந்த நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.

Maxirich Tablet Uses In Tamil-

நோய்கள் எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி நம் அனைவருக்கும் தெரியுமா? என்று கேட்டால் பலருக்கும் தெரியாது என்ற பதிலே ஓங்கி ஒலிக்கும். ஏனெனில் நோய் வந்தால் மட்டுந்தான் இவர்களுக்கு ஆரோக்யத்தின் மீது அக்கறை வரும்.அந்த நோய்க்கான சிகிச்சை முடிவடைந்துவிட்டால் பின்னர் பழைய நிலைமையிலேயே தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

காரணம் பரபரப்பான உலகம், பல வேலைகள். உடம்பை கவனிக்க எங்கங்க நேரம்இருக்குது என்பதுதான் பலருடைய குரலாக ஓங்கி ஒலிக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் பல பிரச்னைகள் பார்க்காமல் விட்டதால் தேக்கமடைந்து திடீரென உடல் சுகவீனத்தை தந்துவிடுகிறது. அப்போதுதான் நாம உடம்பை கவனிக்காம விட்டுட்டோம் என உணர்கிறார்கள். உங்கள் உடம்பில் நார்மல் நிலையிலிருந்து எந்தசூழ்நிலையில் அப்நார்மல் நிலை வந்தாலும் உடனே டாக்டரைப்பார்த்துடுங்க... ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்தீர்களானால் செலவு, பிரச்னைகள் அனைத்துமே குறைவுங்க... என்ன சொல்றது...

மாக்சிரிச் மாத்திரைகள் ரத்தசோகை, வழுக்கை,குறைவான கால்சியம் கொண்டவர்கள். முகப்பரு, நீரழிவு நியூரோபதி, சப்ளிமென்ட்ஸ், சாம்பல்முடி, கர்ப்ப சிக்கல்கள், உயர் ரத்த அழுத்தம் , கண் பிரச்னைகள் ,தோல்நோய்கள் உள்ளிட்ட நோய்களை சிகிச்சை, கட்டுப்படுத்துதல், முற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது.

இம்மாத்திரையானது கால்சியம் பான்டுதனேட், எலிமென்டல் கால்சியம், எலிமென்டல் காப்பர், எலிமென்டல் மெக்னீசியம், எலிமென்டல் மாங்கனீசு,எலிமென்டல் ஜிங்க், போலிக் ஆசிட், அயோடின், மாலிப்டனம், நியாசினமைட், பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் பி1, விட்டமின் பி12, விட்டமின் பி2,விட்டமின் பி6,விட்டமின் சி, விட்டமின் டி3 மற்றும் விட்டமின் இ உள்ளிட்டவைகளை கொண்டது. இது கேப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கிறது.

மேக்சிரிச் மாத்திரையானது நம் உடலில் ஏற்படும் சோர்வுகளை போக்கி புத்துணர்ச்சி அதாவது சத்துகளை அளிக்க வல்லது. மற்றும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இது அருமருந்து. அதாவது ஆஸ்டியோபோரசிஸ், ஆஸ்டியோ மலேசியா, ரிக்கெட்ஸ், ஹைபோபாராதைராய்டிசம், உள்ளிட்ட நோய்களுக்கும் இது மருந்து. மேலும் கர்ப்பிணிப்பெண்கள், மாதவிடாய் பிரச்னைகளால் பாதிப்படைந்த பெண்களுக்கு தேவையான கால்சியத்தை தர இம்மருந்து பயன்படுகிறது.

பக்கவிளைவுகள்

இம்மருந்தை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அது எல்லா நேரத்திலும் ஏற்படுவதில்லை. ஒருசில பக்க விளைவுகள் அரிதானவை. ஆனால் தீவிரமாக இருக்கலாம். ஒரு சில பக்கவிளைவுகள் தற்காலிகமானவை என்றாலும் ஒரு சில நேரத்தில் அது நீங்காமல் இருந்தால் இது குறித்து உடனடியாக டாக்டரை சந்தித்து சொல்லிவிடவேண்டும்.

அதிகப்படியான தாகம், உலர்ந்தவாய், மலச்சிக்கல், உணர்வு உடம்பு, பலவீனம், வயிற்றுப்போக்கு, அலர்ஜியால் வழக்கத்துக்கு மாறான சோர்வு, நெஞ்சு வலி, டிஸ்பினியாவிற்கு அதிகரித்த தாகம், உமிழ்நீர், மூச்சுக்குழல் அழற்சி, விழி வெண்படல அழற்சி, வாஸ்குலட்டிஸ், தலைவலி, மூட்டுவலி, தோல்தடித்தல்,உமிழ் நீர் சுரப்பி விரிவாக்கம், அயோடின் நச்சுத்தன்மை, தும்மல், சிறுநீரில் கிரியேட்டினைன் ,பழுதடைந்த காயங்களை ஆற்றுதல், அடிவயிற்று பிடிப்புகள், லுாஸ் இயக்கங்கள், ஆற்றல் இல்லாமை, வயிற்றுவலி, பசியிழப்பு, நோய்உணர்வு,தசைப்பலவீனம், அயர்வு அல்லது குழப்பம், ரத்தம் அல்லது சிறுநீர் ஆகியவற்றில் அளவுக்கு அதிமாக கால்சியம், தோல்சிவத்தல், வயிறு கோளாறு, சைட் அல்லது முதுகுவலி, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றில் பிடிப்புகள், மயக்கநிலை, குமட்டல், தாகம், பசியற்ற வாந்தி, ஹைபோபாஸ்படமீயா, தாழழுத்தத்திற்கு மாரடைப்பு, சைனஸ் குறை இதயத்துடிப்பு, அஜீரணம்,வாயு, மற்ற குடல் பிரச்னைகள்,வயிற்றுப்போக்கு, பீவர், குறைந்த ரத்தஅழுத்தம், ரத்தசோகை, ஹார்ட்பிரச்னை, பார்கின்சன் நோய், நடுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம்இதுகுறித்து சொல்லிவிட வேண்டும்.

மேலும் உங்களுக்கு அலர்ஜி சம்பந்தமான பிரச்னைகள் இருப்பின் அதனை டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடவேண்டும். மேலும் உங்களுக்கு ஹைபர்கால்சிமியா ( அதிக கால்சியம்),ஹைபர் விட்டமினோசிஸ் டி(அதிக விட்டமின் டி அளவு).உணவுகளி்லிருந்து சத்துகளை உறிஞ்சுவதில் ஏற்படும் மாற்றம், உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பின் டாக்டரிடம் சொல்லிவிடவும். மேலும் உங்களுக்கு இருதயம், கிட்னி, கல்லீரல், ரத்த நாள சம்பந்த நோய்கள், சிறுநீரக கல் உள்ளிட்டவைகளில் ஏதேனும் பாதிப்பு பிரச்னைகள் இருந்தாலும் டாக்டர்களிடம் சொல்லிவிடுவது நல்லது.

கர்ப்பிணிப்பெண்கள், மற்றும் பாலுாட்டும் தாய்மார்களாக இருந்தாலும் முன்னதாகவே டாக்டரிடம் சொல்லிவிட்டால் அதற்கு தகுந்தாற்போல் அவர் உங்களுக்குமருந்துகளை பரிந்துரைப்பார். டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே அதிக விட்டமின் டி கொண்ட மாத்திரைகளை கர்ப்பிணிப்பெண்கள் உட்கொள்ள வேண்டும். பாலுாட்டும் தாய்மார்களும் டாக்டர் பரிந்துரைத்த பின்னர்தான்இந்த மாத்திரையினை உட்கொள்ளவேண்டும்.

மருந்தை உட்கொள்வது எப்படி?

மாத்திரையினை தண்ணீர் கொண்டு விழுங்க வேண்டும். உங்களுக்கு டாக்டர் பரிந்துரைத்தபடி உணவுக்கு முன்னதாகவோ அல்லது உணவுக்கு பின்னரோ இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையினை பொடியாக்குவதோ, சப்பி சாப்பிடுவதோ, உடைப்பதோகூடாது. இம்மருந்து திரவமாக இருப்பின் உபயோகிக்கும் முன்னர் பாட்டிலை நன்கு குலுக்கவும்.

இந்த மாத்திரையினை பொறுத்தவரை டாக்டர்களை கலந்து ஆலோசிக்காமல் நீங்களாகவே மருந்து கடையில் சென்று வாங்கி சாப்பிடுதல் கூடாது. டாக்டர் பரிந்துரைக்கும் அளவு, கால இடைவெளியில் இதனை உட்கொள்ளுதல் அவசியம் ஆகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story