குறைவான சர்க்கரைக்கான அறிகுறிகள் என்ன? முதல்ல இதைப் படிச்சுபாருங்க...

Low Sugar Symptoms in Tamil-மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் சர்க்கரை நோயும் ஒன்று. குறைவான சர்க்கரை அளவுஇருந்தால் நமக்கு என்ன ி

HIGHLIGHTS

குறைவான சர்க்கரைக்கான அறிகுறிகள் என்ன? முதல்ல இதைப் படிச்சுபாருங்க...
X

குறைந்த சர்க்கரை உள்ளவர்களுக்கு உதடுகள் வறண்டு விடும். (மாதிரிபடம்)குறைவான சர்க்கரை உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னை ஏற்படும். (மாதிரி படம்)

Low Sugar Symptoms in Tamil-மனிதர்களுக்கு நாள்தோறும் புதுசு புதுசாக நோய்கள் உருவாகி வருவதால் ஒரு சில நோய்களை டாக்டர்களாலேயே இனங்காண முடியாத வகையில் பல கட்ட பரிசோதனைகள் செய்தபின் ஒரு முடிவுக்கு வரும் நிலை தொடர்கிறது.

சர்க்கரை நோய் என்பது அக்காலத்தில் குடும்பத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்தது. பின்னர் இது பாரம்பரிய நோய் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இக்காலத்தில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் ஒரு நோயாக இதுஉருவெடுத்துள்ளது மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மனித ரத்தத்தில் கலந்துள்ள இந்த சர்க்கரையின் அளவு மிகும்போது சர்க்கரை நோயாளியாக மாறிவிடுகிறார். அதேபோல் இந்த அளவு குறையும்போது குறைந்த சர்க்கரை கொண்ட நோயாளி என சொல்லப்படுகிறது. எனவே குறைந்த பட்சம் நம் உடலில் போதுமான சர்க்கரையின் அளவு இருக்கத்தான் வேண்டும். இதில் கூடினாலும் பிரச்னை, குறைந்தாலும் பிரச்னைங்க..

அதாவது மனிதர்களுக்கு 140 எம்எம்/எச்.ஜி வரை சர்க்கரையின் அளவு நார்மல் என சொல்லப்படுகிறது. 70 எம்எம்/எச்ஜி க்கு கீழ் இருந்தால் அதனை லோசுகர் என சொல்கிறோம்.

இதில் இரண்டு விதமான பரிசோதனைகள் உண்டு. அதாவது சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என உள்ளது. அதாவது உணவு சாப்பிட்ட பின் ஒன்றரை மணிநேரத்தில் எடுக்கப்படும் அளவு வைத்தே டாக்டர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

சாப்பாடும் முன் 80-100 மி.கி./டெலி வரையும் உணவு உண்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்பாக 111 முதல் 140 மி.கி./டெலி வரையும் இருக்கலாம். கூடுதலாக இருந்தால்சர்க்கரை நோயாளி எனவும் குறைவாக இருந்தால் குறைவான சுகர் பேஷன்ட் என அழைக்கின்றனர். சரிங்க...சர்க்கரையின் அளவு குறையும் பட்சத்தில் நமக்கு என்னென்ன அறிகுறிகள் தோன்றுமுங்க... அதைப் பார்ப்போம்.

அறிகுறிகள்

*முதலில் சர்க்கரையின் அளவு குறையும் பட்சத்தில் தலை கிறு கிறுவென சுற்றும். ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படலாம்.

*மயக்கம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

*உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறும் நிலை உருவாகும்.

*உடம்பில் நீர் வறட்சி ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள்உ ண்டு.

*குறைவான சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.

* நாக்கானது வறண்டு காணப்படுவதோடு உதடும் உலர்ந்துவிடும். மேலும் இதில் உணர்ச்சி இருக்காத நிலை ஏற்படும்.

*சர்க்கரை நோய் வந்தாலே முதலில் உடல் சோர்வுதான் ஏற்படும். அதுவும் சர்க்கரையின் அளவு குறைந்தால் சொல்லவே தேவையில்லை அதிக சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

*எந்த ஒரு வேலையையும் அதிக நேரம் இவர்களால் செய்யவே முடியாது.

*நார்மலான துாக்கம் போய் துாக்கமின்மை ஏற்படும்.

*சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும்.

*எந்த நேரத்தில் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும்.

*சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தோன்ற வாய்ப்புண்டு. வயிறு புரட்டி எடுப்பது போன்ற நிலை உருவாகலாம்.

*ஒரு சிலர் வாந்தி எடுத்துவிடுவார்கள்.

*தன்னுடைய உடல் சோர்வினால் இவர்கள் செய்யும் வேலையின் மீது கவனம் செலுத்த முடியாது.

*ஒரு சிலருக்கு பேச்சானது குழறும். மறதி ஏற்பட்டது போல் தோன்றும்.

அரித்மியா பிரச்னை

நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தால் குறையும் நபருக்கு இதய அரித்மியா பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் அவருக்கு மனசம்பந்தமான பிரச்னைகளும், அதிக இதயதுடிப்பு இருப்பதையும் உணரலாம்.

நம் உடம்பிலுள்ள ரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறையும்போது அதிக ஆல்கஹால் அல்லது காபியால் ஒரு சிலருக்கு அசதி , சோர்வு போன்றவை ஏற்படவாய்ப்புகள் உண்டு. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதும் குறைந்த சர்க்கரையின் அறிகுறியாக உள்ளது.

குறைவான சர்க்கரை உள்ளவர்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் சோர்வு, எரிச்சல் போன்றவையும் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

low sugar symptoms in tamil

ரத்தத்தில் குறைந்த சர்க்கரையின் அளவை நிர்வகிப்பதில்

கார்டிசோல் எனப்படும் ஸ்டெராய்டு ஹார்மோன் முக்கிய மாகிறது. வெளிறிய சருமம் இரத்தச் சர்க்கரைக் குறைவின் காரணமாக ஏற்படும் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அடிசனின் நோய்கள் தாக்கம் ஏற்படும்போது உடலுக்குத் தேவையான கார்டிசோல் உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. இது அட்ரீனல் பற்றாக்குறைக்கு வழிவகுத்து வெளிரிய சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இன்சுலின் சிகிச்சையின் பக்க விளைவு காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் நடுக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக ஆல்கஹால் அருந்துவதன் காரணமாகவும் இந்த நடுக்கம் ஏற்படலாம். ஆனால் ரத்தத்தில் சர்க்கரை குறைவு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, இரத்த சர்க்கரை குறை உள்ளவர்களில் இந்த நிலைமை 3.5 மடங்கு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது..

குழந்தைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் ரத்தத்தில் தொடர்ந்து இருக்கும் சக்கரையின் குறைபாடு உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். ரத்த சர்க்கரையின் அளவை நிர்வகிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளில் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jan 2024 6:14 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...