ரத்த சோகைக்கு லிவோஜன் இசட் மாத்திரை
லிவோஜன் இசட் மாத்திரைகள் உடலில் இயற்கையாகவே சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது அவசியமான ஒன்றாகிறது. சத்து குறைபாடு என்பது அவர்கள் எடுக்கும் உணவுகளில் போதிய அளவு இல்லாததை சொல்லலாம்.
நோய் வராமலிருக்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அவசியம் தேவை. இதுகுறையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் வர காரணமாகிறது.
லிவோஜன் இசட் மாத்திரையானது பெர்ரஸ்பியூமரேட், போலிக் அமிலம், மற்றும் துத்தநாக சல்பேட்ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பெர்ரஸ் பியுமரேட் ஆனது உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை அளிப்பதோடு ரத்த சிவப்பு அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்ய உதவுகிறது.
சத்தான ரத்த சிவப்பு அணுக்களின் உருவாக்கத்திற்கு போலிக் அமிலம் துணையாகிறது. உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சி மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு துத்தநாக சல்பேட் உறுதுணையாகிறது. இம்மூன்றும் நம் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உறுதுணையாவதால் இம்மூன்றும் கலந்த கலவையில் இம்மாத்திரையானது தயாராகிறது. மேலும் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே இந்த மாத்திரையினை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் நாம் சாப்பிடக்கூடாது. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஒருசில நோயாளிகள் ஏற்கனவே மலச்சிக்கல், வயிற்று தொந்தரவுகள், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளினால் பாதிக்கப்படுபவராக இருந்தால் இதனை முன்னதாகவே சிகிச்சைக்கு செல்லும்போது மருத்துவர்களிடம் சொல்ல வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முன்னதாகவே ஏற்கனவே நாம் சாப்பிடும் மருந்துகள், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தாமாகவே சாப்பிடும் மருந்துகள், இதுமட்டும் அல்லாமல் நாமாக வாங்கும் ஹெர்பல் மருந்துகள் ஏதாவது உட்கொண்டால் அதனை மருத்துவரிடம் முன்னதாக தெரிவித்துவிடவேண்டும்.
மேலும் இந்த மாத்திரையினை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைத்து இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் அதனையும் மருத்துவரிடம் அவசியம் தெரிவித்துவிட வேண்டும்.
கர்ப்பிணிப்பெண்கள், மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட அனைவருமே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இம்மருந்தினை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் சிறுவர்களுக்கும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதனை தரக்கூடாது.
பயன்படுத்தும் முறை
இம்மாத்திரையினை உணவுக்கு முன்னரோ, அல்லது உணவுக்கு பின்னரோ மருத்துவர் பரி்ந்துரைப்பது போன்று உட்கொள்ளவேண்டும்.
மாத்திரையினை உட்கொள்ளும்போது முழுமாத்திரையாக தண்ணீரோடு விழுங்கவேண்டியது அவசியம்.
மேலும் மாத்திரையினை சப்பியோ, கடித்து உண்பதோ கூடாது.
உங்களுடைய உடல் நிலையைப்பொறுத்து எவ்வளவு நாட்களுக்கு இம்மாத்திரையினை உட்கொள்ளவேண்டும் என்று உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தீர்மானித்து சொல்லுவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu