ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z மாத்திரை பயன்களை அறிவோமா?

Livogen Z Tablet Uses in Tamil-நம் உடலில் ஏற்படும் ரத்த சோகை நோய்க்கு நாம் உரிய டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அந்த வகையில் ரத்த சோகை நோயை குணப்படுத்தும் லிவோஜன் மாத்திரை பற்றி பார்ப்போமா?

Livogen Z Tablet Uses in Tamil-நம் உடம்பில் எந்த சத்து குறைவாக இருந்தாலும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். முக்கியமாக நம் உடம்பிற்கு தேவையான இரும்பு சத்தின் அளவு குறையும் பட்சத்தில் நமக்கு ரத்த சோகை நோய் தானாகவே உருவாகி விடுகிறது.

ரத்தசோகை நோயால் பாதிப்படைந்தவர்கள் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களுடைய உடல் இயக்க ஆற்றல் தானாகவே குறைந்து இந்த அசதியினை தரும். இரும்பு சத்து அதிகரி்ப்பிற்காக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைதான் லிவோஜன் .இரும்பு சத்து குறைவால் ஏற்படும் மூளை நோய் இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றை குணப்படுத்தஇது உதவுகிறது.

லிவோஜன் இசட் மாத்திரைகள் உடலில் இயற்கையாகவே சத்துகுறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது அவசியமான ஒன்றாகிறது. சத்து குறைபாடு என்பது அவர்கள் எடுக்கும் உணவுகளில் போதிய அளவு இல்லாததை சொல்லலாம். நோய் வராமலிருக்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அவசியம் தேவை. இதுகுறையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் வர காரணமாகிறது.

மாத்திரை இயைபு

லிவோஜன் இசட் மாத்திரையானது பெர்ரஸ்பியூமரேட், போலிக் அமிலம், மற்றும் துத்தநாக சல்பேட்ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பெர்ரஸ் பியுமரேட் ஆனது உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை அளிப்பதோடு ரத்த சிவப்பு அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்ய உதவுகிறது. சத்தான சிவப்புரத்த அணுக்களின் உருவாக்கத்திற்கு போலிக் அமிலம் துணையாகிறது. உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சி மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு துத்தநாக சல்பேட் உறுதுணையாகிறது. இம்மூன்றும் நம் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உறுதுணையாவதால் இம்மூன்றும் கலந்த கலவையில் இம்மாத்திரையானது தயாராகிறது. மேலும் சத்துகுறைபாடு உள்ளவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே இந்த மாத்திரையினை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்காமல் நாம் சாப்பிடக்கூடாது. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து டாக்டர் பரிந்துரைப்பார். ஒருசில நோயாளிகள் ஏற்கனவே மலச்சிக்கல், வயிற்று தொந்தரவுகள்,வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளினால் பாதிக்கப்படுபவராக இருந்தால் இதனை முன்னதாகவே சிகிச்சைக்குசெல்லும்போது டாக்டர்களிடம் சொல்லிவிட வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும் முன்னதாகவே ஏற்கனவே நாம் சாப்பிடும் மருந்துகள், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் தாமாகவே சாப்பிடும்மருந்துகள், இதுமட்டும் அல்லாமல் நாமாக வாங்கும் ஹெர்பல் மருந்துகள் ஏதாவது உட்கொண்டால் அதனை டாக்டரிடம்முன்னதாக தெரிவித்துவிடவேண்டும். மேலும் இந்த மாத்திரையினை டாக்டர் உங்களுக்கு பரிந்துரைத்து இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் அதனையும்டாக்டரிடம் அவசியம் தெரிவித்துவிட வேண்டும்.

கர்ப்பிணிப்பெண்கள், மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் உள்ளிட்டஅனைவருமே டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இம்மருந்தினை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் சிறுவர்களுக்கும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இதனை தரக்கூடாது.

இம்மாத்திரையினை உணவுக்கு முன்னரோ, அல்லது உணவுக்கு பின்னரோடாக்டர் பரி்ந்துரைப்பது போன்று உட்கொள்ளவேண்டும். மாத்திரையினை உட்கொள்ளும்போது முழுமாத்திரையாக தண்ணீரோடு விழுங்கவேண்டியது அவசியம்.மேலும் மாத்திரையினை சப்பியோ, கடித்து உண்பதோகூடாது. உங்களுடைய உடல் நிலையைப்பொறுத்து எவ்வளவு நாட்களுக்கு இம்மாத்திரையினை உட்கொள்ளவேண்டும் என்று உங்களுக்குசிகிச்சை அளிக்கும் டாக்டர் தீர்மானித்து சொல்லுவார்.

உங்கள் உடல் நிலையானது அவ்வப்போது அலர்ஜி ஏற்படுவதாக இருந்தாலும் நீங்கள் இந்த மாத்திரையினை டாக்டர் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ள கூடாது. மேலும் நீங்கள் அல்சர், கட்டிகள், ரத்தகுறைபாடு நோய் ,கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்னை அல்லது ரத்தம் மாற்றம் செய்பவராக இருந்தால் டாக்டரிடம் இந்த பிரச்னைகள் குறித்து முன்னதாகவே சொல்லிவிடுதல் அவசியம்.

இம்மாத்திரையானது ஆன்டிபாக்டீரியல் காரணிகள், ஆன்டிகேன்சர் மருந்துகள், ஆன்டிபாராசைட் , ஆன்டி கன்வல்சன்ட்ஸ் ஆகியவைகளோடு தொடர்புடையவைகளாக கருதப்படுகிறது. இம் மருந்து உட்கொள்பவர்கள் பால், பால் பொருட்கள், டீ, காபி, இறைச்சி வகைகள், முழுதானிய வகைகளை தவிர்க்க வேண்டியது அவசியம் .மேலும் கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் பெண்கள், குடிப்பழக்கம் இருப்பவர்கள், கிட்னி பிரச்னை , கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் அனைவருமே சிகிச்சைக்கு செல்லும் முன் டாக்டர்களிடம் இதுகுறித்து முன்னதாகவே தெரிவித்துவிடவேண்டும்.

சத்து குறைபாடு

நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளாத நிலையில் இருப்பவர்கள் அனைவருமே சத்து குறைபாடு உள்ளவர்களாக கருதப்படுவர். வைட்டமின், மற்றும் தாதுசத்துகள் உடலின் வளர்ச்சிக்கு தேவையான காரணிகளாக கருதப்படுகிறது.

ஒரு சில நேரங்களில் உங்களுடைய உடலானது பல சத்துக்களை கிரகிக்க கூடியதாக இருக்காது.இதுபோன்ற குறை இருப்பவர்களுக்கு உடல் மெலிதல், மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னை, ஜீரணக்கோளாறு, எலும்பு வளர்ச்சி குறைபாடு, மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த சோகை குறைபாடு

தற்காலிக ரத்த சோகை குறைபாடுகளை உப காரணிகள் கொண்டு சரிசெய்து விடலாம். ஆனால் பல நாட்களாக இப்பிரச்னைகளால் பாதிப்படைவோருக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன்மூலமே குணப்படுத்த முடியும். உங்கள் உடலில் தேவையான ஆக்சிஜன் இல்லாத பட்சத்தில் நீங்கள் மிகவும் சோர்வடைந்துவிடுவீர்கள். இது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான காரணியாகும். சிவப்பு ரத்த அணுக்களின் குறைபாடும் ரத்த சோகைக்கு முக்கிய காரணியாகிறது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story