உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு..

Diarrhoea Meaning in Tamil-உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கின் தீவிரம் பற்றி அறிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

Diarrhoea Meaning in Tamil
X

Diarrhoea Meaning in Tamil

Diarrhoea Meaning in Tamil

நம்மில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ஏற்படாமல் போயிருக்கலாம். ஆனால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இனி அதை அலட்சியம் செய்யக் கூடாது. உயிரையே பறித்துவிடும் அளவுக்கு மோசமானது இது. வயிற்றுப்போக்கால், ஒரு நாளைக்கு 1,600 வீதம், வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுக்க மரணமடைகிறார்கள். இவர்களில், பெரும்பாலும் உயிரிழப்பது இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளே. எனவே, பெற்றோர் விழிப்புஉணர்வுடன் செயல்படவேண்டியது அவசியம்.

வயிற்றுப்போக்கு

Diarrhoea Meaning in Tamil

வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது, ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி, தடுக்க என்ன செய்ய வேண்டும்?’’ என்பதை இனி பார்ப்போமா?

அதிக நீரோடு மலம் வெளியேறுவதையும், ஒரு நாளில் மூன்று முறைக்கு மேலே மலம் கழித்தலையும் வயிற்றுப்போக்கு (Diarrhoea) என்கிறோம். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது மலத்தில் ரத்தம் கலந்திருந்தால், அதற்குப் பெயர் வயிற்றுக்கடுப்பு (Dysentery). வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களில் 10-15 சதவிகிதம் நபர்களுக்கு இரண்டு வாரங்களுக்குமேல் தொடர்ந்து இருக்கும். இதற்கு ‘பெர்சிஸ்டென்ட் டயரியா’ (Persistent Diarrhoea) எனப் பெயர். அதேபோல ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். இதை ‘டயரியா வித் சிவியர் மால்நியூட்ரிஷன்’ (Diarrhoea with severe Malnutrition) எனக் குறிப்பிடப்படுகிறது.

யாருக்கெல்லாம் வரும்?

Diarrhoea Meaning in Tamil* சுற்றுப்புற சுகாதாரம் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள்.

* சுத்தமில்லாத நீரைக் குடிப்பவர்கள்.

* ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்.

* தாய்ப்பால் சரியாகப் பெறாத குழந்தைகள்.

* நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள்).

நீர்ச்சத்து குறைபாடு

Diarrhoea Meaning in Tamil

வயிற்றுப்போக்கால் இரு முக்கிய பிரச்னைகள் ஏற்படும். ஒன்று நீர்ச்சத்துக் குறைபாடு, மற்றொன்று ஊட்டச்சத்துகளை இழப்பது. சாப்பிட்ட உணவு செரிக்காமல் போவதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காது. இதை ஈடுகட்ட, ஏற்கெனவே உடலிலிருக்கும் சத்துகள் அனைத்தும் பயன்படுத்தப்படும். இதனால் உடலிலுள்ள சத்துகள் தீர்ந்துபோய், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

Diarrhoea Meaning in Tamilவயிற்றுப்போக்கால் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சினை உடல் வறட்சி எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு. நம் உடல் 60 சதவிகிதம் நீரால் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலிலுள்ள நீர் முழுமையாக மலத்தின்வழியே வெளியேறிவிடும். நீருடன் சேர்ந்து சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற அத்தியாவசியமான நுண்சத்துகளும் வெளியேற்றப்படும். இதன் காரணமாக, உடலில் அமில-கார சமன்பாடு பாதிக்கப்பட்டு, இறப்புகூட நேரிடலாம்.

3 வகை நீர்ச்சத்து குறைபாடு

Diarrhoea Meaning in Tamilநீர்ச்சத்து குறைபாட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நீர்ச்சத்து குறைபாடு இல்லாதவர்களுக்கு 50 மில்லிகிராம்/கி.கி (ml/kg) அளவுக்கு மட்டுமே நீரிழப்பு ஏற்படும்.

லேசான நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் 50-லிருந்து 100 மில்லிகிராம்/கி.கி (ml/kg) வரை நீரை இழப்பார்கள்.

தீவிரமான நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 100 மில்லிகிராம்/கி.கி (ml/kg) வரை நீரை இழந்துவிடுவார்கள்.

அறிகுறிகள்

Diarrhoea Meaning in Tamil* நீர்ச்சத்து குறைபாடு இல்லாதவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கண்ணீரின் அளவு இயல்பாக இருக்கும். வாய் மற்றும் நாக்கு ஆகியவற்றில் சுரக்கும் எச்சில் இயல்பாகவே காணப்படும். போதுமான அளவுக்கே தண்ணீர் குடிப்பார்கள். தாகம் இருக்காது. சிறுநீர் கழிப்பதும் இயல்பாக இருக்கும்.

* லேசான நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எரிச்சலுடன் காணப்படுவார்கள். கண்ணீர் சுரப்பது குறைவாக இருக்கும். வாய் மற்றும் நாக்கு கொஞ்சம் உலர்வாகக் காணப்படும். தாகம் அதிகரிக்கும் என்பதால், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். சிறுநீர் கழிப்பது குறைந்துவிடும்.

* தீவிரமான நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தூங்கி வழிவார்கள் அல்லது மயக்கத்துடனே காணப்படுவார்கள். அவர்களது கண்ணீர் காய்ந்திருக்கும். வாய் மற்றும் நாக்கு அதிகமாக உலர்ந்துபோய்விடும். தண்ணீரைக்கூடக் குடிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். சிறுநீர் கழிப்பது என்பது மிக மிகக் குறைவாக இருக்கும்.

சிகிச்சை முறை

Diarrhoea Meaning in Tamilநீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய மூன்று வகையான சிகிச்சைத் திட்டங்களை உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கிறது. அது என்ன என்பதை பார்ப்போமா?

* நீர்ச்சத்துக்குறைபாடு இல்லையெனில், நீர்ச்சத்து அதிகமுள்ள திரவ ஆகாரங்களைக் கொடுத்தால் போதும். இவர்கள் வீட்டிலேயே சிகிச்சையை எடுத்துக்கொள்ளாம், மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.

தரவேண்டிய திரவங்கள் - உப்பு மற்றும் சர்க்கரை கலந்த நீர், உப்பு கலந்த கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அதிகம் கலக்காத பழச்சாறுகள், ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட்ஸ் (ORS - Oral rehydration salts).

Diarrhoea Meaning in Tamilதரக் கூடாத திரவங்கள் - வேதிப்பொருள் கலந்த பழரசங்கள், கடைகளில் விற்கும் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை நிறமூட்டப்பட்ட திரவங்கள், சர்க்கரை அதிகம் கலந்த டீ, காபி.

* லேசான நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு, உலக சுகாதார நிறுவனம் உருவாக்கிய ORS (Oral Rehydration Solution ) திரவம் தந்தால் போதுமானது. இவர்கள் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.மருத்துவமனையில் கிடைக்கும் ORS பெற்றுக்கொண்டு, வீட்டிலிருந்தபடியே சிகிச்சையைத் தொடங்கலாம். நான்கு மணிநேரத்துக்குள் 75 ml/kg அளவு நீர்சத்தை திரும்பப் பெறும் அளவுக்கு திரவங்களை உட்கொண்டால் போதும்.

Diarrhoea Meaning in Tamil* தீவிரமான நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவர்களுக்கு ரத்தக்குழாயின் வழியே திரவங்கள் செலுத்தப்படும்.

உயிருக்கே ஆபத்தாகலாம்

diarrhoea meaning in tamilவயிற்றுப்போக்குக்கு அதனால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் சிகிச்சைகளே போதுமானவை. 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சரியான திரவங்களை உட்கொண்டாலே வயிற்றுப்போக்கு சரியாகிவிடும். ஆனால், சரியான அளவில் நீரை அருந்தாமல் விட்டுவிட்டால் தீவிரமான பிரச்சினையாக மாறி உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதால் வயிற்றுக்போக்கு வியாதியை நாம் கவனமாக கையாளவேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Feb 2024 11:11 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 4. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 5. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
 6. அரசியல்
  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
 7. தமிழ்நாடு
  நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
 8. இந்தியா
  Corruption Free India In Tamil ஊழற்ற இந்தியாவை உருவாகக் நாம் என்ன...
 9. இந்தியா
  இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் கமிஷனர் யார் தெரியுமா?
 10. இந்தியா
  TCAS இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? விமான விபத்து...