சிறுநீரக கற்களை ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா?....படிச்சு பாருங்க...

kydney stone disease ,homeo treatment மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்றுதான் சிறுநீரக கல்பிரச்னை. இந்நோயை ஹோமியோபதி சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியுமா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிறுநீரக கற்களை ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா?....படிச்சு பாருங்க...
X

சிறுநீரக கற்கள் பிரச்னையால் அவதிப்படுவோருக்கு பின்பக்க முதுகுவலி  ஏற்படும் (கோப்பு படம்)

kydney stone disease ,homeo treatmentkydney stone disease ,homeo treatment

மனித வாழ்க்கை என்பது மகத்தானது. இந்த வாழ்க்கையினை இறைவன் நமக்கு அளித்திருந்தாலும் அதனை உரிய முறையில் வாழ்ந்து அனுபவிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. இதில் முக்கியமானது என்னவென்றால் நோயில்லாப் பெருவாழ்வு வாழ அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கான வழிமுறைகள் என்னென்ன? உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடலுழைப்பு போன்றவற்றில் அதிக அக்கறை காட்டவேண்டும். எந்தவிதக்கட்டுப்பாடும் இல்லாமல் வாய்க்கு கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டுவந்தால் கடைசியில் உடல்பருமன் என்ற நோய்க்கு ஆட்பட நேரிடும். உபாதைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

நம்மி்ல் ஒரு சிலர் இருக்கின்றனர். அதாவது நாம் பல முறை சொல்லியுள்ளோம். வழக்கத்துக்கு மாறாக உடல்நிலையில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் . ஆனால் ஒருசிலர் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வலியானது ஒரு சில மணி நேரத்தில் நின்று விட்டால் அதோடு விட்டுவிடுகின்றனர். பிறகு எப்போதும் இந்த பிரச்னைக்காக டாக்டரிடம் செல்லாமல்விட்டுவிட்டு மீண்டும் வரும்போது படாத அவஸ்தை;ப்படுவர். நோயும் முற்றிவிடும். இதுதான் இயல்பாக நடந்து வரும் நிலை. எந்த ஒரு நோயையும் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டால் அதனை எளிதில் உரிய சிகிச்சைகள் மூலம்குணப்படுத்தி விடலாம். அதுவே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பின்னர் நோய் முற்றியவுடன் அலறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினால் எந்தவொரு டாக்டராலும் காப்பாற்ற முடியாத நிலைதான் ஏற்படும். இது நம்முடைய தவறுதான். அந்த வகையில் சிறுநீரக கற்கள் தோன்றுவது குறித்து அறிந்தால் உடனடியாக டாக்டரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.

kydney stone disease ,homeo treatment


kydney stone disease ,homeo treatment

சிறுநீரக கற்களை ஹோமியோ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து சேலம் ஹோமியோபதி டாக்டர். முகுந்தன் அவர்கள் தெரிவிக்கும்போது,

கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சிறுநீரகக்கல் என்பது யாரோ ஒருவருக்குத்தான் உண்டானது. ஆனால் இன்றோ நமது நண்பருக்கோ அல்லது நமது வீட்டில் ஒருவருக்கோ சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னையாக சிறுநீரகக்கல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த அவல நிலை ஏன்? நமது உணவுப்பழக்க மாறுதல்களினாலும், நடைமுறை பழக்க கேடுகளினாலும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து கொண்டே போவதுதான் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

உயிர்போகும் வலி

சிறுநீரகக் கல்லினால் உண்டாகும் வதையாகும். பிரசவ வலியைப் போன்று இரண்டு மடங்கு கொடியதாக இருக்கும். வலி தோன்றிவிட்டால் எந்த இடமாக இருந்தாலும் கதறித்துடிக்கும் அளவுக்கு மிக கடுமையாக இருக்கும்.என்னிடம் வந்த உயர் பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்ததும் கைகளைப்பிடித்துக்கொண்டு ’’ ஏதாவது செய்து கல்லின் வலியைக் குறையுங்கள் அல்லது விஷமாவது கொடுங்கள் டாக்டர் ’’ என கத்தினார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் 1. செ.மீ. உள்ள கல்லானது சிறுநீர்க் குழாயின் மேற்பகுதியில் அடைத்துக்கொண்டிருந்தது. அவரது அறிகுறிகளை ஆராய்ந்து ஹோமியோபதி மருந்துகளைக் கொடுத்து ஒருவாரம் கழித்து சந்திக்க சொன்னேன். 4 நாட்கள் கழித்து அடிவயிற்றில் மி்குந்த வலி உண்டாகிறது. நீர்க்கடுப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். பயம் வேண்டாம். இரண்டு நாட்கள் கழித்து சொல்லுங்கள் என்றேன். அடுத்த நாளே அவர் மிகுந்த சந்தோஷத்துடன் கல் வெளியேறிவிட்டதாகக் கொண்டு வந்து காண்பித்தார்.சுமார் 0.5 செ.மீ. அளவில் கரைந்த நிலையில் அது எளிதாக சிறுநீர்ப்பாதையிலிருந்து வெளியேறிவிட்டது. இது ஹோமியோபதி மருத்துவத்தின் அற்புத ஆற்றலால் ஏற்பட்டது என்பதை சொல்லவும் வேண்டியதில்லை.

kydney stone disease ,homeo treatment


kydney stone disease ,homeo treatment

கல்தோன்றக் காரணங்கள்?

கால்சியம், ஆக்ஸலேட்ஸ், யூரிக் ஆசிட், பாஸ்பேட்ஸ், போன்ற தாது உப்புகள் அதிகம் அடங்கியுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், இந்த தாது உப்புகளை ஜீரணிக்கும் நன்மை உடம்பில் குறைந்திருப்பதாலும் தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதாலும், சிறுநீர்ப் போவதைத் தள்ளிப்போடுவதாலும், சிறுநீர் குறைவாக வெளியேறும் நிலை, தட்ப வெப்பநிலை, முதலியவற்றாலும் , சிலருக்கு பரம்பரையாகவும் கல் உற்பத்தியாகக்கூடும். இதற்கும் மேலாக கல் உற்பத்தியாவதற்குரிய பக்குவம் உள்ள நோயாளிகளுக்கு மேற்கூறிய காரணங்கள்இருக்கும் பட்சத்தில் கல் எளிதாகத் தோன்றுகிறது.

அறிகுறிகள்

கல்லின் வலியானது ரீனல் ஆங்கிலில் தோன்றி முன்புறமாகக் கீழிறங்கி அடிவயிற்றுப் பகுதிக்கு வரக்கூடும். பிறப்புறுப்பு, தொடை, அடிமுதுகு, போன்ற இடங்களில் வலி பரவும். நீர்க்கடுப்பு, வாந்தி, அடிக்கடி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ரத்தம் கலந்த அல்லது கலங்கலான சிறுநீர் வெளியேறும்.

kydney stone disease ,homeo treatment


kydney stone disease ,homeo treatment

தடுப்பு முறைகள்

நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் நல்லது. சிறுநீர்கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழிக்க வேண்டும். தள்ளிப்போடக்கூடாது. (ஆபீசில் வேலை பார்க்கும் பெண்கள் கவனிக்கவும்)மேற்கூறிய தாது உப்புக்கள் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்கவும். குறிப்பாக தக்காளி, முட்டைக்கோஸ், காலிபிளவர், பீட்ரூட், பீன்ஸ்,மாமிச வகைகள், பால் சம்பந்தப்பட்ட உணவுகள், சாக்லேட், கொய்யா, மாதுளை முதலியவைகளைத் தவிர்க்கவும். உணவில் முள்ளங்கி ,வாழைத்தண்டு முதலிவற்றைநிறைய சேர்த்துக்கொள்ளவும்.

kydney stone disease ,homeo treatment


kydney stone disease ,homeo treatment

மருத்துவ சிகிச்சை

கல் என்றவுடன் ஆபரேஷன், லேசர் சிகிச்சை என்ற பயம் மனதைக் கவ்வுகிறது. ஹோமியோபதி மருந்துகளால் சிறுநீரகக் கற்களை எளிதாக கரைத்து வெளியேற்ற முடியும். கல்லின் அளவு, இருக்கும்இடம் ( சிறுநீரகம், சிறுநீரகக்குழாய், சிறுநீர்ப்பை) கல்லினுடைய தன்மை, நோயாளியின் எதிர்ப்புத்திறன் முதலியவற்றைப் பொறுத்து கல்லானது சில நாட்கள் முதல் சில வாரங்களில் கரைந்துவெளியேறுகிறது.

ஹோமியோபதி மருந்துகள் கற்களைக் கரைப்பதோடு, திரும்பவும் உற்பத்தியாகாமல் இருக்க எதிர்ப்புச் சக்தியையும் வளர்க்கிறது. ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகளற்றவை. நோயாளியின் மனநிலை, உடல்நல அறிகுறிகள் யாவற்றையும் ஆராய்ந்து கொடுக்கப்படும் கான்ஸ்டிடியூஷனல் மருந்து கற்களை விரைவில் கரைப்பதோடு இந்நோய் எதிர்ப்புத்திறனையும் வளர்த்து ஒரு ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும். ஹோமியோபதி மருந்துகள் சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதாமாகும் என்றார்.

நன்றி :டாக்டர். முகுந்தன், சேலம்.

Updated On: 23 May 2023 8:46 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
 2. தமிழ்நாடு
  கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
 3. இந்தியா
  Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
 4. தமிழ்நாடு
  ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 5. தமிழ்நாடு
  தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
 6. இந்தியா
  Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 8. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
 9. தேனி
  தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
 10. சிவகாசி
  சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!