kidney failure symptoms in Tamil: சிறுநீரக நோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

kidney failure symptoms in Tamil: சிறுநீரக நோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
X

kidney in tamil-சிறுநீரகம் (கோப்பு படம்)

சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் பலர் இருக்கிறார்கள். சற்று கவனமாக இருந்தால் ஆரம்பகால அறிகுறிகளை வைத்து இதை கண்டறிந்துவிடலாம்

kidney failure symptoms in tamil நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் மேம்படுத்த பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் உங்கள் உடலில் கழிவுப்பொருட்களையும் அதிக திரவத்தையும் கட்டமைக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உங்கள் இரத்தத்தில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்களை சமநிலையில் வைக்கின்றன. உங்கள் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன, இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகின்றன, மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைக்கின்றன.

நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். இந்தியாவில் பத்து லட்சம் மக்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள் என்கிறது சுகாதார துறை அமைச்சக அறிக்கை.

இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், தங்கள் சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் பலர் இருக்கிறார்கள். நோய் தீவிரமடைந்த நிலையில்தான் அதனை தெரிந்துகொள்கிறார்கள். இது, டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும். எனவே வளரவிடக் கூடாத பிரச்னை.

சிறுநீரக நோய் என்பது மெல்ல மெல்ல நம்மை கொள்ளும் ஆபத்து. இதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. இருப்பினும் நீங்கள் சற்று கவனமாக இருந்தால் ஆரம்பகால அறிகுறிகளை வைத்து இதை கண்டறிந்துவிடலாம். உங்களுக்கு அனைத்து நோய் அறிகுறிகளும் ஒத்துப்போனால் உடனே மருத்துவரை அணுகுங்கள்

சிறுநீரகத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை உடலில் ஏற்படும் சில அறிகுறிகளே காட்டிக் கொடுத்துவிடும்.

சிறுநீர் பிரச்னை

சிறுநீர் நுரைத்தது போல வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது இவையெல்லாம் சிறுநீரக கோளாறுக்கு அறிகுறிகள்.

வீக்கம்

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.

உங்கள் கண்களைச் சுற்றி வீக்கத்தை நீங்கள் கண்டால், உங்கள் சிறுநீரகங்களை பரிசோதிக்கவும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிறுநீரில் புரதம் வெளியேறும்போது கண்கள் வீங்கும்.

சோர்வு / ரத்தசோகை

நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்கள் , எந்த வேலையிலும் சிறப்பாக கவனம் செலுத்த முடியவில்லை எனில் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகம் எரித்ரோபோய்டின் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது.

சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். சிறுநீரகம் உற்பத்தி செய்யும் எரித்ரோபொய்டின் ஹார்மோன் சுரப்பது குறையும் போது உங்களுக்கு சோர்வு உண்டாகிறது. இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

தடிப்பு

சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது அதன் நச்சு நீக்கம், கழிவு நீக்க வேலைகள் தடைபடுகின்றன. இதனால் அவை சருமத்தில் பக்கவிளைவுகளை உண்டாக்குகின்றன. இதனால் சரும அரிப்பு, தேமல் போன்ற அறிகுறிகளை உணர்வீர்கள்.

மூளையின் குறைந்த செயல்பாடுகள்

சிறுநீரகம் சிறப்பாக செயல்படாத போது இரத்த சிவப்பு அணுக்கள் மூலம் உடலுக்கு ஆக்ஸிஜன் செல்வதில்லை. இதனால் மூளைக்கும் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காத போது தலைச்சுற்றல், மயக்கம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை சந்திப்பீர்கள்.

குளிர்

ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும். மற்றவர்கள் கதகதப்பாகவோ, வெக்கையாகவோ உணர்ந்தாலும் உங்களுக்கு அந்த சூழல் குளிர்ச்சியாகவே இருக்கும். அவ்வாறு இருந்தால் உங்களுக்கு சிறுநீரக பிரச்னை இருக்கலாம். இதனால் இரத்த சோகை பிரச்னையையும் சந்திப்பீர்கள்.

மூச்சுத்திணறல்

எந்த வேலை செய்தாலும் உடனே மூச்சுத் திணறலை அனுபவிக்கிறீர்கள் எனில் இது சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம். பொதுவாக மூச்சுத் திணறல் இரண்டு காரணங்களால் உருவாகும். ஒன்று நுரையீரலில் அதிக திரவம் இருக்கும்போது ஏற்படும். இரண்டாவது உடலின் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும்போது ஏற்படும். நீங்கள் இரண்டாவது காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.


முதுகுவலி

முதுகு அல்லது இடுப்பு வலி : சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் எனில் முதுகு வலி, கீழ் முதுகு வலி ,இடுப்பு மற்றும் அடிவயிற்று வலியை சந்திப்பீர்கள். சிறுநீரகத்தில் கல் இருந்தாலும் முதுகுவலி, இடுப்பு வலி இருக்கும். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

குமட்டல்

சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

சுவாசத்தில் வாடை

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். இந்த யூரியா அமோனியாவாக மாறி மூச்சுக்காற்றை கெட்ட வாடையாக மாற்றும்.

முகம் வீக்கமாக காணப்படுதல் :

முகம் சில நாட்களாக வீங்கியது போல், உப்பியவாறு இருக்கிறது. பார்ப்பதற்கு நீங்களாகவே இல்லை எனில் அது சிறுநீரகத்தின் பாதிப்பாக இருக்கலாம். இதுவும் உடல் நீரை வெளியேற்றாமல் போவதால் உண்டாகும் அறிகுறியாகும்.

சிறுநீரகத்தை பாதுகாக்க சில எளிய வழிகள்

  • தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். எவ்வளவு வேலை, பணிச்சுமையாக இருந்தாலும் இதை மறக்கக் கூடாது. சிறுநீரகச் செயல் இழப்பு வந்தால், டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.
  • சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவும் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • புரத உணவைப் பொறுத்தவரை காய்கறியில் இருந்து கிடைக்கும் புரதம்தான் சிறந்தது.
  • பைனாப்பிள், பப்பாளி, கொய்யா ஆகியவை குறைந்த அளவு பொட்டாசியச் சத்து உள்ளவை. இவற்றைச் சாப்பிடலாம்.
  • சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், உணவில் கட்டுப்பாடு ஆகியவற்றால் சிறுநீரக நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!