/* */

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் கருஞ்சீரகம்.... உங்களுக்கு தெரியுமா? .....

kalonji in tamil மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் பெரும்பாலும் அக்கால இயற்கை வைத்திய முறைகளின் மூலம் குணமாகிறது. அந்த வகையில் கருஞ்சீரகம் நம் உடல் ஆரோக்ய விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

HIGHLIGHTS

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் கருஞ்சீரகம்.... உங்களுக்கு தெரியுமா? .....
X

அதிக மருத்துவ குணம்கொண்ட  கருஞ்சீரகம்  (கோப்பு படம்)

kalonji in tamil

டென்ஷன்....டென்ஷன்...டென்ஷன் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை இதே நிலைதான். காரணம் பரபரப்பான வாழ்க்கை. யாருக்கும் யாருடனும் பேசக்கூட நேரமில்லை. எல்லாமே கணினி மயம்...என்ன செய்ய? முன்பெல்லாம் மேனுவலாக இருந்தது. பிரச்னையில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஆபீசிற்கு சென்றாலும் கம்ப்யூட்டர் முன்தான் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு சில நேரத்தில் சர்வர் கோளாறால் நம் வேலை தடைப்படும். இதனால் நமக்கு டென்ஷனாகும். முக்கியமான கட்டத்தில் அது ஸ்ட்ரைக் செய்யும்.இதுபோல் தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னையை சந்தித்துக்கொண்டேயிருக்கிறோம். இதனால் நமக்கு மன உளைச்சலானது கூடிக்கொண்டே போகிறது.

kalonji in tamil


kalonji in tamil

டென்ஷனான வாழ்க்கையின் காரணமாக நம் உடல்நலம் மனநலம் பாதிப்படைகிறது. இதனால் நோய்கள் முன்பு போல் இல்லாமல் அதிகமான புதுப்புது நோய்கள் உருவாகின்றன.

மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை என பல காரணிகள் சொல்லப்பட்டாலும் இவைகளையும் மீறி நோய்கள் புது புது அவதாரங்களாக உருவெடுத்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. சொல்லப்போனால் சிறுகுழந்தைகளுக்கு வரும் நோய்கள் இன்ன இனம் என தெரியாமல் ஒரு சில நேரத்தில் டாக்டர்களே விழி பிதுங்கி நிற்கின்றனர்.மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் ஒவ்வொரு நாளும் புதியது புதியதாக தோன்றுகின்றன. எதனால் நோய்கள் உண்டாகிறது என்பதே புரியாத நிலையும் ஒருசில நேரத்தில் உருவாகி விடுகிறது. மருத்துவ உலகிற்கே சவால் விடும் நிலையில் நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

kalonji in tamil


kalonji in tamil

காலமாற்றத்தால் நாகரிகம் என்ற போர்வையில் பல அழகு சாதனப்பொருட்கள், ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் , பேக்கரி அயிட்டங்களின் பயன்பாடுகள் இவையனைத்தும் அதிகரித்து போனதால் நோய்களுக்கு ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டது. அதுவும் தோல் நோய்கள் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் நாகரிக மோகத்தில் நாம் போடும் மேக்அப் சாதனங்களினால் வரும் பக்கவிளைவுகளாக கூட இத்தகைய தோல்நோய்கள் வருமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

அலோபதி மருத்துவம் மட்டும் நம் உடல் உபாதைகளை குணப்படுத்துகிறது என்று சொல்லிவிட முடியாது. ஆயுர்வேதம், சித்தா,யுனானி, ஹோமியோ உள்ளிட்ட பல மருத்துவ முறைகள் நம் நாட்டில் உள்ளதால் அவரவர்களுக்கு ஏற்ற மருத்துவ முறையினை தேர்ந்தெடுத்து அதன் வாயிலாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சித்த மருத்துவத்தில் இக்கருஞ்சீரகமானது சிறப்பான பயன்களை தருகிறது என்று கூட சொல்லலாம்.

kalonji in tamil


kalonji in tamil

கருஞ்சீரகம்- கலோன்ஜி என்று சொல்லக்கூடிய இது ஒரு மூலிகை தாவரம்தான். அரபு நாடுகளில் இப்பொருளானது உணவு சமைக்கவே பயன்படுத்துகிறார்கள் என குறிப்புகள் தெரிவிக்கின்றன.கருஞ்சீரக எண்ணெயானது யுனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.

நோய்எதிர்ப்பு குணம்

நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருளான தைமோகுயினன் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. இதனால் கருஞ்சீரகமான மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதையில்தான் இத்தகைய வேதிப்பொருள் உள்ளது.

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்பல வேதிப்பொருட்களை இது தன்னகத்தேகொண்டுள்ளதால் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

kalonji in tamil


kalonji in tamil

மேலும் நமக்கு அதிக பிரச்னைகளை தரும் சுவாச நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்க இது உதவுகிறது. வலிமை மிகுந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் இக்கருஞ்சீரகமானது நம் உடலின் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது. மேலும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. எலும்பு மஜ்ஜை உற்பத்தியினை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. கணையத்தில் ஏற்படும் கேன்சரை கட்டுப்படுத்துவதில் இது பெரும்பங்கு வகிக்கிறது.

கருஞ்சீரகம் அரு மருந்து

நாம் அன்றாடம் குளிக்கும்போது குளியல் பொடிகளை பயன்படுத்துவோம். அதுபோன்று பயன்படுத்துபவர்கள் அப்பொடியோடு இதன் பொடியும் சேர்த்து பயன்படுத்தலாம்.

மனிதர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நெஞ்சு சளி, மற்றும் நுரையீரலில் உள்ள சளியினை அகற்றும் மருத்துவ குணம் வாய்ந்தது கருஞ்சீரகம் ஆகும். மேலும் இருமலுக்கு அருமருந்தாகவும் இது திகழ்கிறது. இதன் பொடியை ஒருடீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதோடு பூண்டினை அரைத்து அந்த விழுதை ஒரு அரை டீஸ்பூன் சேர்த்து தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தீர்களானால் இருமல் கட்டுப்படும்.

தோல்நோய்களான சொரியாஸிஸ், கரப்பான் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு இது அருமருந்து. இதனை பொடியாக்கி தேய்த்துகுளித்தால் நோய் பரவல் கட்டுப்படும். மேலும் உடம்பில் ஏற்பட்டுள்ள வடுக்களும், தழும்புகளும் மறைந்துவிடும்.

kalonji in tamil


kalonji in tamil

மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் கஷ்டங்களுக்கு நல்ல நிவாரணி இந்த கருஞ்சீரகம் ஆகும். அதாவது அடிவயிற்றில் ஏற்படும் வலியினை ரத்தப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், அடிவயிறு கனமாதல், உள்ளிட்ட சிக்கல்களை இது சரிசெய்கிறது. அதாவது இதனை வறுத்து பொடித்து அதனுடன் தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் குழந்தை பெற்ற பச்சைத் தாய்மார்கள் தங்களுடைய கர்ப்பப்பையில் சேரும் அழுக்கினை அகற்ற இதனை ஒரு டேபிள்ஸ்பூன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிடவேண்டும். காலை மாலை என ஐந்து நாட்கள் குழந்தை பிறந்ததிலிருந்து சாப்பி்ட்டு வரலாம். மேலும் நம் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றவும் இது பயன்படுகிறது. அதாவது வெந்தயம் கால்கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருகவிடாமல் நன்கு வறுத்து பொடியாக்கிவிட வேண்டும்.

இரவு நேரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இதனை நன்கு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டவுடன் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இதனை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் நம் உடல் கழிவுகள் அனைத்தும் மலம், வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற வாய்ப்புகள் உண்டு. மேலும் நம் உடலிலுள்ள ரத்தமானதுநன்கு சுத்தகிரிக்கப்படுவதோடு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் அறவே நீங்க வாய்ப்புகள் உண்டு.

பித்தப்பை கற்கள்

கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு நீங்கும். சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்களும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை நன்கு ஆறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

முன்னெச்செரிக்கை

இத்தகையஅரு மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தினை கடைகளில் வாங்கி பயன்படுத்தும் முன் ஒரு சித்த மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். அவர் வழிநடத்துதலின் பேரில் நீங்கள் இதனை மருந்தாக உட்கொள்ளுங்கள். காரணம் உங்கள் உடம்பில் வேறு என்ன நோய்கள் இருக்கிறது என்பது உங்களுக்கே ஒரு சில நேரங்களில் தெரிய வாய்ப்பில்லை. ஒருசில நோய்கள் சைலன்டாக இருந்துகொண்டு பின்னர் திடீரென விஸ்வரூபமாகிவிடும்.

நீங்கள் சாப்பிடும் எந்த மருந்தாயினும் அந்த மருத்துவ துறை சம்பந்தப்பட்ட டாக்டரை கலந்து ஆலோசித்த பின்னரே நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் எனக்கு தெரியும் என இறங்கினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்தினால் மட்டுமே இந்த நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.அக்கறை காட்டாத பட்சத்தில் நோய்கள் நம்மை நோக்கி வரிசை கட்டி நிற்கும்.எனவே இனியாவது உங்கள் ஆரோக்யத்தில் அனைவரும் அக்கறை செலுத்துங்கள். உணவுகளைக் கட்டுப்பாடுடன் உண்ணுங்கள், உடற்பயிற்சியினை செய்யுங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், மன உளைச்சலை அறவே போக்க யோகாசனம் செய்யுங்கள்.

Updated On: 4 Jan 2023 12:51 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...