உங்கள் முகம் எப்பவும் ‘பளிச்’ சென இருக்க, ‘ஜோஜோபா’ ஆயில் இருக்குதுங்க...!

jojoba oil in tamil- கோடைக் காலம், சுட்டெரிக்க துவங்கி விட்டது. இனி, முகம் வெயிலில் வாடி, வதங்கி போய்விடுமே என்ற கவலை, பெண்களுக்கு தேவையே இல்லை. சருமத்தை பொலிவுடன் பாதுகாக்க ‘ஜோஜோபா’ ஆயில் உதவுகிறது.

HIGHLIGHTS

உங்கள் முகம் எப்பவும் ‘பளிச்’ சென இருக்க, ‘ஜோஜோபா’ ஆயில் இருக்குதுங்க...!
X

jojoba oil in tamil- இனிமேல், உங்கள் முகத்தை பொலிவுடன் பராமரிக்க ‘ஜோஜோபா’ ஆயில் பயன்படுத்திப் பாருங்க... 

jojoba oil in tamil -ஜோஜோபா எண்ணெய் என்பது வட அமெரிக்காவில் வளரக்கூடிய வற்றாத தாவரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய். கடுமையான பாலைவனங்களில் செழித்து வளரும் இந்த தாவரம் சிறந்த குணங்களை கொண்டிருக்க கூடியது. இந்த ஜோஜோபா செடியின் கொட்டைகள் எண்ணெயாக தயாரிக்கப்படுகிறது.


இதை மற்ற எண்ணெய்களோடு கலந்து பயன்படுத்தினாலும் இதன் மென்மை குணம் மாறாமல் இருக்கும். இந்த குணங்களுக்காகவே இதை சருமத்திற்கு பலரும் பயன்படுத்துகின்றனர். இவை சருமத்துக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொண்டால் இனி உங்கள் பராமரிப்பிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.


முகப்பருக்களுக்கு தீர்வு

​முகப்பருவுக்கு காரணமே எண்ணெய் பசை மிகுந்த சருமம் தான். அப்படி இருக்கும் போது சருமத்துக்கு எப்படி என்ணெய் பயன்படுத்துவது என்று யோசிக்கலாம். ஆனால் ஜோஜோபா எண்ணெய் முகப்பருக்களை அதிகமாக்காமல் தீவிரத்தை குறைக்க செய்யும். முகப்பருக்களிலிருந்து நிரந்தரமாக தீர்வு தரும்.

பொதுவாக சருமத்துக்கு எண்ணெய் பயன்படுத்தும் போது அது முகத்தில் ஒட்டி பிசுபிசுப்புத் தன்மையை கொடுக்கும். ஆனால் ஜோஜோபா எண்ணெய் முகத்தில் ஒட்டாது. அதோடு இது முகப்பருவினால் உண்டாகும் எரிச்சலை போக்கும். சருமத்துளைகளில் சென்று அடைக்காது. ஜோஜாபா எண்ணெயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் சத்துகள் முகப்பருக்களால் உண்டாகும் காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் செய்யும்.


சருமத்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு

​சருமத்துக்கு ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம், அது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. சருமத்தில் பாக்டீரியா ஊடுருவலை தடுத்து எந்த கிருமித்தொற்றும் சருமத்தை தாக்காமல் பாதுகாக்கிறது. இதனால் சருமம் நோய்த்தொற்றை எதிர்த்து போராடுகிறது.

ஜோஜோபா எண்ணெயில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் மற்றும் புஞ்சை காளான் பண்புகள் ஈகோலை, தொற்று மற்றும் கேண்டிடாவை எதிர்த்து போராடும் பூஞ்சைகளையும் பாக்டீரியாக்களையும் கொல்பவை என்பதால் இது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. சருமத்தில் வீக்கம், எரிச்சல் போன்றவை எப்போதும் இருக்காது.

நீரேற்றமான சருமம்

சருமத்தில் இருக்கும் துளைகளில் எண்ணெய்சுரப்பு அதிகரிப்பது இயல்பானது. இவை அதிகமாகும் போது முகத்தில் எண்ணெய் பசை அதிகரிக்கும். இவை குறையும் போது சருமம் வறட்சியை உண்டாக்கும். சருமத்தை எப்போதும் சம நிலையில் வைத்திருக்க செய்ய வேண்டுமெனில் எப்போதும் சருமத்தை ஈரப்பதம் இழக்காமல் வைத்திருக்க வேண்டும்.

இந்த நீரேற்றத்துக்கு ஜோஜோபா எண்ணெய் உதவும். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதோடு எண்ணெய்ப்பசையையும் கட்டுப்படுத்துவதால் சருமம் எப்போதும் பொலிவோடு இருக்கிறது. இதனால் முகப்பருக்களும் தடுக்கப்படுகிறது.

​தழும்புகளை போக்கும்

​ஜோஜாபா எண்ணெய் முகத்தில் உண்டாகும் தழும்புகளை போக்கும் குணங்களை கொண்டிருக்கிறது. விரிசல் விழுந்த சருமத்தை காயமில்லாமல் இணைக்கும் அருமையான பண்புகள் இதில் உண்டு. உடலில் தழும்புகள், காயங்கள், கீறல்கள் போன்றவை இருக்கும் போது அவை சருமத்தில் கருமை நிறத்தை உண்டாக்க செய்யும்.

இந்த நிறம் இழக்காமல் வடுக்களை போக்கும் குணங்களை ஜோஜாபா எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ கொண்டிருக்கிறது. முகத்தில் அதிக வடுக்கள், அம்மை தழும்புகள் இருந்தால் நீங்கள் இதை முயற்சிக்கலாம்.


​முகச்சுருக்கங்களை குறைக்கும்

​சருமம் விரைவில் வயதான தோற்றத்தை பெறுவதாக உணர்ந்தால், ஜோஜோபா எண்ணெயை தேர்வு செய்யலாம். இது முகத்தில் நெற்றியில் கோடுகள், கன்ன சுருக்கங்கள் போன்றவற்றை தடுத்து அதன் தீவிரத்தை குறைக்கவும் செய்கிறது. ஜோஜாபா எண்ணெய் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருப்பதால் இது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை பாதுகாக்க செய்கிறது. இதை பயன்படுத்தும் போது வயதான அறிகுறிகள் உருவாவதை தாமதப்படுத்தும்.

சரும எரிச்சலை போக்கும்

உணர்திறன் சருமம் கொண்டவர்களுக்கு சூரியனின் கதிர்வீச்சு மறைமுகமாக சருமத்தை தாக்கினாலும் சரும எரிச்சல் தீவிரமாகும். சன்ஸ்கீரின் வகைகளில் ஜோஜோபா எண்ணெய் முக்கிய பொருளாக உள்ளது. வைட்டமின் இ, பிற ஆக்ஸிஜனேற்றங்களுடன் இணையும் போது அது சருமத்தை சூரிய கதிர்களிலிருந்து உண்டாகும் பாதிப்பை தடுக்க உதவுகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜோஜோபா எண்ணெய் இந்த இரண்டையும் கொண்டுள்ளது.

வெயிலினால் சரும பாதிப்பு ஏற்படும் பொது சருமம் நீரிழப்பை உண்டாக்கும். ஜோஜோபா எண்ணெய் வைட்டமின் இ நிறைந்ததால் இது சரும நீரிழப்பை தடுத்து சருமத்துக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கிறது. சரும எரிச்சலுக்கு இதை பயன்படுத்தினால் விரைவில் நிவாரணம் அளிக்கும்.


ஜோஜோபா ஆயில் சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

மற்ற எண்ணெய்களை நீர்த்து செய்த பிறகு தான் பயன்படுத்துவோம். ஆனால் ஜோஜோபா எண்ணெயை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தலாம்.ஜோஜாபா எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்பு மட்டும் உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள ஒரு பரிசோதனை அவசியம்.

கைகளில் இரண்டு சொட்டு ஜோஜாபா எண்ணெயை பயன்படுத்துங்கள். பிறகு அந்த இடத்தை கட்டி 24 மணி நேரம் வைத்திருந்து கட்டுகளை அகற்றி சருமத்தை பரிசோதியுங்கள். சிவத்தல் எரிச்சல், அறிகுறிகள் இல்லை எனில் நீங்கள் ஜோஜாபா எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

உதடுகளுக்கு இரவில் பயன்படுத்துவதன் மூலம் உதடுகள் பளபளப்பாக இருக்கும். இரவு தூங்கும் போது இதை பயன்படுத்துவதன் மூலம் சரும நன்மைகளை நீங்கள் பெற முடியும்.

Updated On: 15 March 2023 9:14 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. தமிழ்நாடு
  98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! அமைச்சர் தகவல்
 3. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...
 6. திருச்செந்தூர்
  மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
 7. அரசியல்
  அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி
 8. உலகம்
  ரஷ்ய நாட்டு இளைஞர்களுக்கு அதிபர் விளாடிமிர் புதினின் புதிய வேண்டுகோள்
 9. அரசியல்
  சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
 10. இந்தியா
  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக போகிறது வந்தே பாரத் ரயில்கள்