குழந்தையின்மைக்கு தீர்வு தரும் ஐவிஎப் சிகிச்சை; இனி கேட்குமே ‘குவா குவா’ சத்தம்

IVF Treatment Meaning in Tamil

IVF Treatment Meaning in Tamil

IVF Treatment Meaning in Tamil-குழந்தையின்மை என்பது, ஒரு தம்பதிக்கு மிகப்பெரிய கவலையாக நீடிக்கிறது. இதற்கு வரப்பிரசாதமாக, ஐவிஎப் என்ற சிகிச்சை முறை அமைந்து, அந்த தம்பதியை பெற்றோராக மாற்றுகிறது.

IVF Treatment Meaning in Tamil-நோய்க்காக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் போன்று, குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் பெருகி உள்ளது. இதிலிருந்தே இந்த பிரச்சனையில் பாதிக்கப்படுவோர் மிக அதிகரித்து வருவதை உணரலாம். தம்பதியரில் ஒருவருக்கு குறைபாடு நேர்ந்தாலும் கூட குழந்தையின்மை பிரச்சனை பெரும் சிக்கலையும் குடும்பத்துக்குள் சச்சரவையும், மன அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், மருத்துவத்துறையின் அபரிமிதமான வளர்ச்சியில் ஐவி எப் என்னும் முறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஐவிஎப் சிகிச்சை குறித்த விவரங்களை அறிந்துகொள்வோம்.

​இயல்பான கருத்தரிப்பு

திருமணம் முடிந்ததும் குழந்தைபேறு என்பதுதான் முன்னோர்கள் காலத்தில் வரையறுக்காத விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டது. சரியான வயதில் திருமணமும், குழந்தைபேறும் என்பதை தவிர்க்காமல் செய்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் நாளடைவில் ஆண்களை போன்று பெண்களும் திருமண வயதை கடந்த பிறகு திருமணம் செய்துகொள்வது அதிகரித்தது. இதனால் இயல்பான கருத்தரிப்பு என்பது சிக்கலை சந்திக்க நேரிட்டது. ஆரோக்கியமாக இருந்தாலும் இந்த சிறிய தாமதம் பலரது கருத்தரிப்புக்கு சிக்கலை உண்டு பண்ணி வருகிறது.

இவை தவிர ஆண்களுக்கு வீரியம் குறைந்த விந்தணுக்கள், பெண்கள் உடல் எடை, தைராய்டு, கர்ப்பப்பை கோளாறு ( இவையும் பெருகிவருகிறது ) போன்றவற்றால் இப்பிரச்னைக்கு ஆளாவது அதிகரித்துவருகிறது. இதன் விளைவு தான் குழந்தையின்மை சிகிச்சைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்துகிறது.

​மருத்துவ பரிசோதனை, ஆலோசனை

​திருமணம் முடிந்து ஒரு ஆண்டு வரை கருத்தரிப்பு நிகழவில்லை என்றால், நீங்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம். அதன் பிறகும் காலதாமதம் ஏற்பட்டால் தம்பதியர் இருவருக்கும் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவில் குறைபாடு கண்டறியப்பட்டால் அவை சரிசெய்யகூடிய பிரச்சனையாக இருந்தால் தாமதமில்லாமல் சிகிச்சை எடுத்துகொள்ளவேண்டும். குறைபாடு நீங்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் கருத்தரிப்பதில் பிரச்னை என்றால் காலம் தாழ்த்தாமல் ஐவிஎப் சிகிச்சை குறித்து ஆலோசிக்கலாம்.

​ஐவிஎப் சிகிச்சை

இந்த சிகிச்சையை பொறுத்த வரை வெற்றியின் சதவீதம் அதிகமாகவே இருக்கிறது.சிகிச்சைக்குட்படுத்தப்படும் பெண்ணின் கருமுட்டை மற்றும் விந்தணுக்களை இணைத்து கருத்தரிக்கப்படுகிறது. கருவானது குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழுவளர்ச்சி அடைய செய்ய வைக்கப்படுகிறது. நவீன மருத்துவ முறையில் பெரும்பாலும் இவை வெற்றியை அளிக்கிறது என்றாலும் இந்த வெற்றி வாய்ப்பு கருமுட்டை, விந்தணுக்கள், கர்ப்பப்பை மூன்றின் ஆரோக்கியத்தை பொறுத்து அதிகரிக்கிறது..

அதன் பிறகும் கர்ப்பக்காலம் முழுமைக்கும் கரு வளர்ச்சியும் தொடர் மருத்துவ கண்காணிப்பும் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் கூட மிகவும் தேவையாக இருக்கிறது.

​தோல்வி அடைந்தால்

​தம்பதியர் பரிசோதனைக்கு பிறகும் ஐவிஎப் சிகிச்சைக்கு முன்பும் இந்த சிகிச்சை குறித்து முழுமையாக தெரிந்துகொள்வது நல்லது. அதே நேரம் டாக்டரிடம் மட்டுமே இது குறித்த ஆலோசனை பெற வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். முதல் முறை ஐவிஎப் சிகிச்சையின் போது ஒருவேளை தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கலாம். பலரும் முதல் முறையே எதிர்பார்த்து விரக்தி அடைவதன் மூலம் அவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஐவிஎப் செய்துகொண்ட தம்பதியர் பலருக்கும் பல முயற்சிக்கு பிறகே வெற்றிகிட்டுகிறது. சிகிச்சையின் போது நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்.

அதிக இடைவெளி வெற்றி வாய்ப்பை குறைக்கும்

ஐவிஎப் சிகிச்சை முதல் முறை செய்யும் போது தோல்வியை கண்டவுடன் பலரும் செய்யும் தவறு அதிக இடைவெளிக்கு பிறகு டாக்டரை அணுகுவது. இப்படி அதிக இடைவெளி விட்டு மீண்டும் இந்த சிகிச்சைக்கு வரும் போது வெற்றி வாய்ப்பு குறையவே செய்யும். தாமதமான ஐவிஎப் சிகிச்சை கருத்தரிக்கும் வெற்றி வாய்ப்பை குறைக்க செய்யும்.

டாக்டரின் ஆலோசனையோடு அவர் கூறும் காலம் மட்டும் ஓய்வு எடுத்து மீண்டும் அடுத்த சிகிச்சைக்கு தயாரவதன் மூலம் ஏற்கனவே இந்த சிகிச்சைக்கு பழகியிருந்த மருந்துகளை உடல் ஏற்றுக்கொண்டு, வெற்றி வாய்ப்பு கிட்டுவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும்.

​வயது அதிகமாகும் போது வெற்றி வாய்ப்பு குறையும்

குழந்தையின்மைக்கு சிகிச்சை என்று ஐவி எப் தேர்வு செய்யும் போது முக்கியமாக பெண்களின் வயதும் கவனிக்கப்படும். 40 வயதுக்கு பிறகு ஐவிஎப் சிகிச்சைக்கு வரும் பெண்களின் வெற்றி விகிதமானது 13 முதல் 18 சதவீதம் வரையே இருக்கும். 35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 41 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை வெற்றி வாய்ப்பு உண்டு. 37 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு வெற்றி வாய்ப்பு 33 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை உளது. 38 முதல் 40 வயதுக்குள்ளான பெண்களுக்கு 23 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையே வெற்றி விகிதம் இருக்கிறது.

வயது ஏற ஏற வெற்றிக்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மையாக இருந்தாலும் அனுபவமிக்க டாக்டர்களின் வழிகாட்டுதலிலும் சிகிச்சைக்கு வருபவர்களின் ஒத்துழைப்பும் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க செய்யும் என்பதையும் மறுக்கமுடியாது.

​ஐவிஎப் சிகிச்சை செய்து கொள்தல்

கருமுட்டை விந்தணுக்கள் இரண்டையும் இணைத்து கருவாக வளர்ந்ததும் கர்ப்பபைக்குள் வைக்கும் வரை அதன் பிறகு அதன் வளர்ச்சியை கண்காணிக்கும் வரை ஓய்வில் இருந்தால் போதுமானது. அதன் பிறகு இயற்கையாக கருத்தரித்த பெண்களை போன்று இருக்கலாம். சாதாரணமாக கர்ப்பிணிகள் படும் உபாதைகளே உங்களுக்கும் இருக்கும். சத்து குறையாத உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் போதும்.

மிக பலவீனமாக இருக்கும் பெண்கள் டாக்டரின் ஆலோசனையுடன் நடந்து கொள்வதன் மூலம் கர்ப்பக்காலத்தை இயல்பாக கடக்கலாம். ஐவிஎப் சிகிச்சை முறையில் பெரும்பாலும் இரட்டை குழந்தைகள் என்றாலும், தற்போது மருத்துவத்துறையில் ஒரு குழந்தை பிறக்க வைப்பதில் முன்னேற்றமும் கண்டுள்ளது.

​ஐவிஎப் குழந்தைக்கு மரபணு குறைபாடு?

​கருவளர்ச்சிக்கு பிறகு கர்ப்பப்பைக்குள் கருவை செலுத்துவதற்கு முன்பாகவே மரபணு சோதனைகளான ப்ரி இம்ப்ளாண்டேஷன் ஜெனிட்டிக் மற்றும் ப்ரீ இம்ப்ளாண்டேஷன் டயக்னாசிஸ் போன்றவற்றின் மூலம் கருமுட்டையின் குரோமோசோம் குறைபாட்டை கண்டறிய உதவுகிறது. மேலும் குழந்தை டவுன் சிண்ட்ரோம், மரபணு நோய்க்கு உட்படுவதை முன்கூட்டியே கண்டறிந்துவிடவும் முடிகிறது.

தம்பதியர் கருத்தரிப்பதில் சிக்கல் என்பதை உணர்ந்தால் இந்த ஐவிஎப் சிகிச்சை தேர்ந்தெடுக்கலாம். இந்த முறை பெருமளவு வெற்றி விகிதத்தை அதிகரிக்கவே செய்யும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story