குறட்டை என்பது மாரடைப்பின் அறிகுறியா? டாக்டர் சொல்றதை கேளுங்க...

குறட்டை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுப்பதில்லை. அது நமக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறட்டை மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குறட்டை என்பது மாரடைப்பின் அறிகுறியா? டாக்டர் சொல்றதை கேளுங்க...
X

கணவரின் குறட்டை சத்தம், உங்களை பாடாய் படுத்துகிறதா? (கோப்பு படம்)

குறட்டை என்பது ஒரு வியாதி. ஒருவர் தூங்கும் போது குறட்டை விடுகிறார் என்றால் சிலர் அதனை அயர்ந்து தூங்குவதாக நினைக்கின்றனர். கணவர் குறட்டை விடுகிறார். குறட்டை விடும் கணவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அருகில் படுத்திருக்கும் மனைவியால் தூங்க முடியாது. கணவர் அயர்ந்து தூங்குகிறார் என்று எண்ணிக்கொண்டு அவர் தூக்கத்தை தொலைத்து தவித்துக் கொண்டிருப்பார். அவ்வாறு குறட்டை விட்டு தூங்குபவர்களை, அயர்ந்து தூங்குகிறார் என்று எண்ணுவது தவறு.


குறட்டை வருவது எப்படி?

குறட்டை என்பது நாம் சுவாசிக்கும் மூச்சு காற்று தடைபடுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறும். அப்போது குறட்டை ஏற்படுகிறது. தூங்கும்போது நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும், மல்லாந்து படுக்கும் போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் சுவாசப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது.


குறட்டை என்பது அரைகுறையான தூக்கம். குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும். சிலர் இரவில் குறட்டை விட்டபடி தூங்குவா், அவர்களுக்கு அரை நிமிடம் மூச்சே நின்று விடும். பின்னர் அரக்கபரக்க எழுந்து உட்காருவர். ஒரு நாளைக்கு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதிலும் 4 மணி நேரம், தொடர்ச்சியாக தூங்க வேண்டும். ஆனால், நமக்கே தெரியாமல் ஒவ்வொரு மணி நேரமும் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த குறட்டை. இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு மேல் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்லீப் ஆப்னியா

தூங்கும் போது மூச்சு தடைபடுதலை ‘ஸ்லீப் ஆப்னியா’ என்கின்றனர். இந்த வார்த்தை இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது. அதிக எடையால் குறட்டை வரும். குறட்டை விடுபவர்களுக்கு உடல் எடை கூடும். அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருகிறது. உதாரணமாக 100 பேரில் 90 பேருக்கு குறட்டை இல்லை, 10 பேர் குறட்டை விடுகின்றனர். அந்த 90 பேருக்கு எடை 70 முதல் 80 கிலோ வரை இருக்கும். சர்க்கரை அளவு 120, 140 இருக்கும். குறட்டை விடும் 10 பேருக்கு உடல் எடை 90 ஆகி விடும். சர்க்கரையின் அளவு 200, 300 கூட மாறும். குறட்டை விடாதவர்களுக்கு ரத்த அழுத்தம் 130, 140-க்குள் தான் இருக்கும். குறட்டை விடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் 200 ஆகி விடும்.


இரவில் தூக்கம் கெட்டுப்போனால் காலையில் எழுந்ததும் கடுமையாக தலை வலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும் போது இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்படும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும். அதனால் குறட்டை விட்டு தூங்குவது நீண்ட தூக்கம் கிடையாது.

குறட்டை வந்தால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. மூளை பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் 2 முழங்கால்களிலும் பலமான வலி ஏற்படும். திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறக்க கூட தாமதம் ஆகும். குறட்டை விடுவதை சரி செய்ய வழி உண்டு. மேலும் வரும் குறட்டையால் வேறு எதாவது பாதிப்புகள் குறித்தும் கண்டுபிடிக்கவும் வசதிகள் உள்ளன.

ஸ்லீப் ஸ்டடி

மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை, தொண்டை பிரச்னைகள், தைராய்டு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பிரச்னைகளால் குறட்டை வருகிறது என்று தெரிந்தால் அதற்கு சிகிச்சை பெறலாம். அதுபோன்ற பிரச்னை இல்லாமல் குறட்டை வருகிறது என்றால் ‘ஸ்லீப் ஸ்டடி’ என்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘ஸ்லீப் ஸ்டடி’ சிகிச்சை அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும். அந்த சிகிச்சைக்கு வருபவர்கள், இரவு 8 மணிக்கு மருத்துவமனைக்கு வர வேண்டும். அங்கு குறட்டை வருபவரின் இதயம், மூளை என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒயர்கள் பொருத்தி அதனை மருத்துவ எந்திரத்துடன் இணைத்து விடுவர். பின்னர் அவருக்கு தூக்கம் வந்ததும் தூங்கி விடலாம். அவருக்கு துணையாக உறவினர் ஒருவர் கூட இருக்கலாம். அடுத்த அறையில் இருந்து டெக்னீசியன் நோயாளியை கண்காணித்தபடி இருப்பார். அவர் தூங்கி எழுந்ததும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எந்திரத்தில் பதிவான பதிவு விவரங்கள் கிடைக்கும்.


இரவில் தூங்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைய வேண்டும். பகலில் ரத்த அழுத்தம் 200 இருந்தால் இரவில் 160-க்கு வரவேண்டும். அதனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்துள்ளதா? எவ்வளவு நேரம் மூச்சை நிறுத்தி வந்தது? குறட்டை எப்படி மூச்சை நிறுத்தி, தூக்கத்தை கெடுக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும். அந்த விவரங்களை கொண்டு எதனால் குறட்டை வருகிறது, மாரடைப்பு வருமா? என்பதை கண்டுபிடித்து விடலாம். அதன் மூலம் மேல் சிகிச்சை பெறலாம்.

குறட்டை நீங்க நோயாளிகளுக்கு முகக்கவசம் போன்ற சீ பேப் எந்திரம் (மூச்சு அழுத்தம் கொடுக்கும் கருவி) ஒன்று பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படும். பம்ப் மூலம் காற்று சீராக சென்று கொண்டு இருக்கும். இதனால் சுவாசிக்கும் காற்று தடைபடாது. இந்த சிகிச்சை மூலம் 3 மாதத்தில் குறட்டை நீங்கும். அதன்பிறகு எடை குறையும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராகும். எனவே தினமும் குறட்டை விடுவது, குறட்டை சத்தத்தில் மாறுபாடு இருப்பது தெரிந்தால் நுரையீரல் சிகிச்சை சிறப்பு டாக்டரை அணுகுவது நல்லது. ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.


குறட்டையை தடுக்கும் வழிமுறைகள்

இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு சுடுநீர் குடிப்பதும் நல்ல பலனை கொடுக்கும். தூங்கும் போது 2 தலையணை வைத்து சாய்வாக படுத்து தூங்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சியும் செய்யலாம். மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக்கூடாது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது குறட்டையை தவிர்ப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். எனவே ஆண்கள் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பெண்கள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். உடல் எடை அதிகரித்த பின்னர் தான் குறட்டை விடும் பழக்கம் வந்தது என்றால் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும்.மனிதர்கள் உயரத்துக்கு ஏற்ப அவர்களது உடல் எடை இருக்க வேண்டும்.


உடல் பருமன்

குழந்தைகளுக்கு நாம் விளையாட சொல்லிக் கொடுப்பதில்லை. ஓடுவதை சொல்லிக் கொடுப்பது இல்லை. வீட்டு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு அவர்களை நடந்தே போக பழக்க வேண்டும். பள்ளிக்கூடத்துக்கு நடந்து போகச் சொல்ல வேண்டும். நாம் அப்படி செய்வதில்லை. பள்ளிக்கூடம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தால் கூட காரில் கொண்டு போய் விடுகிறோம். முன்பு வீடுகளில் கழிவறை இருக்காது. கிராமங்களில் எல்லாம் பாத்ரூம் போக வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். இப்போது வீட்டு அறைக்குள்ளேயே கழிவறை இருக்கிறது. வீட்டுக்கு வெளிப்புறம் கழிவறை இருந்தால் கூட அங்கு செல்ல வருத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு குழந்தைகளை சோம்பேறித்தனமாக வளர்க்கிறோம்.

குண்டாக இருக்கும் பலருக்கு கழுத்து பகுதியில் இரண்டாவது கழுத்து போல் கொழுப்பு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நடப்பதே மிகவும் கடினமாகத் தான் இருக்கும். அவர்களால் ஓட முடியாது. அதிக எடையால் குறட்டை வராமல் தடுக்க உணவு பழக்க வழக்கத்தை மாற்றி உடல் எடையை குறைத்து குறட்டை மற்றும் மாரடைப்பில் இருந்து விடுபடலாம்.

Updated On: 18 March 2023 4:19 PM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 2. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
 3. தேனி
  தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
 4. சிவகாசி
  சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
 5. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
 6. தேனி
  தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள்...
 7. ஆலங்குளம்
  சாலையை சீரமைக்க கோரி செடி நடும் போராட்டம்
 8. தமிழ்நாடு
  Thevar Dialogue in Tamil Lyrics-முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகள்..!
 9. தேனி
  தலைகீழாக மாறியது தேனி மாவட்டத்தின் பருவநிலை
 10. ஈரோடு
  ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்...