குடல் புழுக்களால் அவதிப்படுகிறீர்களா இதற்கான சிகிச்சை தடுப்பு முறை என்ன?
intestinal warm treatment and restriction மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் பல . அதில் நம் வயிற்றிலுள்ள குடல் பகுதியில் தோன்றும் புழுக்களினால் ஒரு சில உடல்பாதிப்புஏற்படுகிறது. அதுகுறித்து காண்போம்.
HIGHLIGHTS

குடல் பூச்சிகளில் பல வகையுண்டு.நாடாப்பூச்சி, கீரைப்பூச்சி, நாக்குப்பூச்சி, இவைகளால் தாம்குழந்தைகளை வாட்டும் பூச்சிகளாகும்.
intestinal warm treatment and restriction
நாக்குப் பூச்சியின் தோற்றம் (மாதிரி படம் )
நாக்குப்பூச்சி
ரவுண்டு வார்ம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நாக்குப்பூச்சி, பார்ப்பதற்கு மண்புழுவைப் போல் நீளமாக இருக்கும். இப்பூச்சியின் முட்டைகள் உணவு, தண்ணீர், காற்று ஆகியவற்றின் மூலமும் உடலுக்குள் செல்கின்றன. அங்குதான் இவை புழுக்களாக மாறி சுமார் 6அங்குலம் முதல் 12 அங்குலம் வரை வளருகின்றன. இப்புழுக்கள் இடும் முட்டைகள் மலத்தின் வழியாக வெளியேறும் .திறந்த வெளியிலும் தெரு ஓரங்களிலும் அசுத்தமான கழிவறைகளிலும், மலம் கழிப்பது காரணமாக இப்பூச்சிகளின் முட்டைகள் குடலுக்குள் போய்ச் சேர்கின்றன.
சரிகுழந்தைகளின் வயிற்றில் இப்பூச்சிகள் இருப்பதை எப்படி அறிவது? வயிற்றுவலி, பசியின்மை, எடைக்குறைவு, இருமல்,சளி, ஆகியவை தோன்றும். வாந்தியும், பேதியும், சில சமயம் உண்டாகலாம். குழந்தை மண்ணை விரும்பி தின்னும். உடம்புஇளைத்து வயிறு பெரியதாக ஆகிவிடும்.ஆஸ்துமா போன்ற இரைப்பு வரும். புழுக்கள் அதிகமானால் குடல்அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க முடியாமல் போகலாம். இப்பூச்சிகள் சில சமயங்களில்குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ பயமுறுத்தும். குழந்தைகளை நாக்கு பூச்சிகள் பற்றாமல் இருக்க பொதுவான நடவடிக்கைகளை ஒவ்வொன்றும் அறிந்து இருப்பது அவசியம். அவை பின்வருமாறு,
சுத்தமான கழிவறைகளில் மலம் கழிப்பு, மலம் கழித்த பிறகு கை , கால்களைச் சோப்பு போட்டுகழுவுவது, சாப்பிடுவதற்கு முன்னர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுவது, தண்ணீரைச்சுட வைத்து குடிப்பது, நகங்களை வெட்டிக் கொள்வது, பச்சைச் காய்கறிகளைச் சுத்தம் செய்து சாப்பிடுவது, ஆகியவை அவசியம் . நாக்குப் பூச்சி இருக்கும் குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றபடி டாக்டர்கள் மருந்து கொடுப்பார்கள்.
intestinal warm treatment and restriction
கீரைப்பூச்சி
கீரைப்பூச்சி, அரை அங்குலம் நீளம் இருக்கும். த்ரெடு வார்ம் என்ற இதனை ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இப்பூச்சி இரவு நேரத்தில் குடலை விட்டு ஆசனவாய் வழியாக வெளியே வரும். அங்குள்ள தோலின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும் இப்பூச்சி முட்டை இடுவதற்காக தோலைக்குடைவதால் நமைச்சலும் குறுகுறுப்பும் ஏற்படும். நமைச்சலின் காரணமாக சொறியும் போது நக இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு இந்த முட்டைகள் மீண்டும்குடலுக்குள் முட்டை சென்ற மூன்று வாரங்களில் பூச்சி உண்டாகிவிடும். சரி,குழந்தைகளைஇதிலிருந்து காப்பது எப்படி? இதிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான தடுப்பு முறையாக குழந்தைகளில் நகங்களை சுத்தமாக வெட்டிவிடவேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர் கைகளைச் சுத்தமாக கழுவச் செய்யவேண்டும்.
இப்பூச்சியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடைகள் படுக்கை விரிப்புகள், பாய்கள் முதலியவற்றை கொதிநீரில் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். துாங்கும்போது அக்குழந்தையைத் தனியாக துாங்க வைக்க வேண்டும். ஏனென்றால் ஒரு குழந்தைகளிடம்இப்பூச்சி இருக்கிறதென அறிந்ததும் ,மற்றவர்களுக்கும் மலப்பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து இதன்மூலம் இந்த நோயை அறவே தவிர்க்க முடியும்.
இந்த நோய் கண்ட குழந்தைகளுக்கு வயிற்றுவலி, துாங்கும்போது சிறுநீர்கழித்தல், வலிப்பு, ஆசனவாயில் நமைச்சல், துாக்கமின்மை, இருமல் போன்றவைகள் காணப்படும்.
intestinal warm treatment and restriction
நாடாப்புழு
நாடாப்பூச்சிகளில் ஒரு வகை நாயுடன் ஒட்டிப்பழகுவதால் வரும் நாடாப்பூச்சியாகும். மதுரை மாவட்ட பகுதிகளில் இது அதிகமாக காணப்படுகிறது. இப்பூச்சிகளின் முட்டைகள் வாய் வழியாக சென்று குடலை அடைகின்றன. அங்கிருந்து ரத்தக் குழாய்களின் மூலம் கல்லீரலுக்குச் சென்று அங்கு பெரிய கட்டியை உருவாக்குகின்றன. சில சமயங்களில் இக்கட்டிகள் , மண்ணீரல், மூத்திரக்குழாய், மூளை, நுரையீரல், எலும்பு போன்ற இடங்களிலும், ஏற்படுவது உண்டு.
இக்கட்டிகளை எக்ஸ்ரே மூலம் காணலாம். நாடாப்புழுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.
intestinal warm treatment and restriction
இதனை தவிர்ப்பது எப்படி?
நமது நாட்டுகுழந்தைகளிடம் அதிகமான அளவில் குடல் பூச்சிகள் காணப்படுவதற்கு காரணம் நமது பழக்க வழக்கங்கள்தான். தெரு ஓரங்களிலும் திறந்த வெளியிலும் மலம் கழிக்கும் பழக்கம் இன்னும் பலரிடம் காணப்படுகிறது. சாப்பிடும் முன்னர் கை, கால்களைச் சுத்தமாக கழுவி, பின்னர் உட்கொள்ளும் பழக்கம் பல பேரிடம் இருக்கும்.
குடல் பூச்சிகளின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் விடுபட வெளியிடங்களில் மலம் கழிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து அறவே நீக்க வேண்டும். சுத்தமான கழிவறைகளில் உட்கார்ந்து மலம் கழிக்கும் பழக்கம் அனைவருக்கும்வரவேண்டும்.
கைகால்களைச்சுத்தமாக கழுவிய பின்னரே சாப்பிடும் பழக்கம் வரவேண்டும். செருப்பு போடும் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். இவை எல்லாம் பார்ப்பதற்கு சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இத்தகைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றாமையாலும், சுத்தத்தையும் சுகாதாரத்தையும், பேணாமையாலுமே குழந்தைகள் குடல் பூச்சிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர வேண்டும்.
இத்தகைய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்க சுகாதாரமான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும். அத்தோடு நில்லாமல் குழந்தைகளும் இவைகளைப் பின்பற்ற அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும் இது மிகவும் முக்கியம்.