Imol Tablet Uses in Tamil-வலிகளுக்கு தலை சிறந்த நிவாரணியான இ மோல் மாத்திரை பற்றி தெரியுமா?
Imol Tablet Uses in Tamil
Imol Tablet Uses in Tamil
மனித வாழ்க்கையில் நோய்கள் வருவது சகஜம்தான். ஆனால் இவ்வளவு நோய்கள் எல்லாம் வரக்கூடாதுப்பா? என சொல்லும் அளவிற்கு வித விதமான நோய்கள் தற்காலத்தில் வரிந்து கட்டிக்கொண்டு மனிதர்களை தாக்கி வருகின்றன. இக்காலத்தினைப்பொறுத்தவரை நோயில்லாதவர்களே பணக்காரர்கள் என்று சொல்லும் அளவிற்கு நோய்கள் அதிகப்படியாக ஆக்ரமித்துள்ளன.
2020 ம் ஆண்டு மார்ச் மாதம் உலகையே உலுக்க வில்லையா கொரோனா என்ற கொடிய வைரஸ் அரக்கன் நோய்? இதில் எத்தனை பேர் மடிந்தார்கள் தெரியுமா? இதுபோல் புதுப்புது தொற்றுக்களாலும் மனித உயிர்கள் அநாவசியமாக பலியாகி வருகின்றன. மருத்துவ உலகில் எத்தனை புதுப்புது ஆராய்ச்சிகள் நடந்தாலும் அதற்கேற்ப நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது நோய்கள் அவதாரம் எடுத்து வருகின்றன.
மனித உடலிலுள்ள உறுப்புகள் நன்றாக வேலை செய்யும் வரை எந்தவித பிரச்னைகளும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு உறுப்பு வேலைநிறுத்தம் செய்தால்தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. அந்த வகையில் மனிதர்களின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளில் ஒரு சில நேரத்தில் அநாவசிய வலிகள் தோன்றி நம்மை இம்சைப்படுத்துவது உண்டு. அதேபோல் பற்களிலும் வலி உயிரையே எடுக்கும்.இதுபோன்ற வலிகளுக்கு சிறந்த நிவாரணியாய இமோல் மாத்திரைகள் பலனளிக்கிறது.
இமோல் மாத்திரையானது இபுப்ரோஃபென், பாராசிட்டமால், காஃபின் போன்ற மருந்துகளின் கூட்டுக்கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரையினை உட்கொள்ள அவசியம் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு அவசியம் தேவை. நீங்களாகவே வாங்கி சாப்பிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். நம் உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் அழற்சிகளுக்கு சிறந்த குணமளிக்கும் மருந்தாக இமோல் விளங்குகிறது. மேலும் வலி , வீக்கத்தினை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் ஒரு ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தாக இது செயல்படுகிறது. இதனால் இம்மருந்தானது பல்வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகில்வலி, பிற வகை சிறு காயங்கள், மாதவிடாய் பிடிப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. வயதானவர்கள் மற்றும் 6 மாத மற்றும அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற மருந்தாக இது விளங்குகிறது.
நீங்கள் இதய நோய் மற்றும் பக்கவாத நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாய நிலையில் இருந்தால்,இருதய பிரச்னை இல்லாதவர்கள் கூட இமோல் பிளஸ் மாத்திரை மருந்தை நீண்ட நேரம் உபயோகிப்பதால் பக்கவாதம் , அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீங்கள் சமீபத்தில் மாற்று வழி அறுவை சிகிச்சை செய்திருந்தால், நீங்கள்இமோல் பிளஸ் மாத்திரை மருந்தில் ஏதேனும் அலர்ஜியாக உங்களுக்கு தோன்றும் பட்சத்தில் இதனை பயன்படுத்த வேண்டாம்.
அதேபோல் இதற்கு முன்பாக உங்களுக்கு ஆஸ்துமா, திரவதேக்கம், சிறுநீரக பிரச்னைகள் , அடிக்கடி புண் (அல்சர்) ஏற்பட்டிருந்தால் மற்றும் ரத்தக்கசிவு பிரச்னைகள் போன்றவைகள் இருந்தால் நீங்கள் இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்ளும் முன்பாக உங்கள் டாக்டரிடம் இது பற்றி முன்னதாகவே தெரிவித்துவிடவும். . கர்ப்பத்தின் கடைசி முப்பருவ காலத்தில் இந்த மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது, ஏனெனில் அது கருவில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தீங்கில்லை என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் நீங்கள் உங்கள் டாக்டரிடம் தாய்ப்பால் அளிப்பது குறித்து முன்னதாகவே தெரிவித்துவிடுதல் நலம் பயக்கும்.
பக்க விளைவுகள்
ரத்தசோகை, வாந்தி, பதற்றம், ரத்தப்போக்கு, குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள், மற்றும் ரத்த செவ்வணுநலிவு, போன்ற சில சிறிய பக்க விளைவுகளை இம்மருந்து ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. ஆனால் இவை தற்காலிகமானவை விலகி சென்றுவிடும். அதே நேரத்தில் வயிற்றுவலி, சுவாசிப்பதில் பிரச்னை, அஜீரணம், எடை அதிகரிப்பு, அரிப்பு, உடல் சோர்வு மற்றும் பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், குடல் அசைவுகள்,இரைப்பையில் அமிலத்தை அதிகரிக்க செய்தல், போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் சிலவற்றை நீங்கள் உணர்ந்தால் இதுகுறித்து உடனடியாக டாக்டரிடம் தெரிவியுங்கள்.
இம்மாத்திரையின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தகுந்த டாக்டரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
*மாதவிடாயின் போது ஏற்படும் அதிக வலிகளை தணிக்கு இமோல் மாத்திரை பயன்படுகிறது.
* முதுமை மூட்டழற்சி நோயுடன் தொடர்புடைய மென்மையான மற்றும் கடுமையான மூட்டுகள் வலி போன்ற அறிகுறிகளைக் குணப்படுத்த இமோல் பிளஸ் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
*வீக்கம், வலி மற்றும் முடக்கு வாதத்துடன் தொடர்புடைய மூட்டுகளின் விறைப்புத் தன்மை போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இமோல் பிளஸ் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
*தலைவலி, முதுகு வலி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த இமோல் பிளஸ் மாத்திரை பயனளிக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu