'அந்த' மாதிரி படங்களை பார்த்தால்... ஆபத்து உங்களுக்குதான்

முன்பெல்லாம், 'அந்த' மாதிரி படங்களை பார்க்க, ஒளிந்து, மறைந்து சினிமா தியேட்டர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்போது, மொபைல் போனை தட்டினால், மணிக்கணக்கில் காட்சிகள் தொடர்கிறது.

HIGHLIGHTS

அந்த மாதிரி படங்களை பார்த்தால்... ஆபத்து உங்களுக்குதான்
X

‘அந்த’ படங்களை பார்க்காதீங்க...! 

சிகரட் புகைப்பது, மதுபானம் அருந்தும் பழக்கம் போல, சிலருக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் நோய்களுக்கு இணையாக ஆபாச படங்களுக்கு பலரும் அடிமையாவதும், அதிகமாக அதை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள வயது வந்தோரில் 3 முதல் 6 சதவீதம் பேர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றும், அளவுக்கு அதிகமாக ஆபாச படங்களை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


அதிகமான ஆபாச படங்களை பார்ப்பது, ஒருவரது தினசரி வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நாளடைவில், மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அவரது குணநலன்களில் குறிப்பிட்ட சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதிக ஆபாச படம் பார்ப்பதால், ஒருவரது பாலியல் செயல்பாடுகள் குறைந்து விடுவதாக கூறப்படுகிறது.

ஆபாச படமும், மூளையும்

ஒருவரது உடலில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கென ஒரு சில ஹார்மோன்கள் மூளையில் உள்ளன. ஒருவர் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கும்போது, அவரை உற்சாகப்படுத்தும் மற்றும் உணர்வின் உச்சத்தை உணர வைக்கும் டோபமைன் ஹார்மோன் அதிகமாக சுரந்து, இனி அவர் உன்மையில் மகிழ்ச்சியாக உணரும் விஷயங்களில் கூட அந்த உணர்வை ஏற்படுத்தாமல் செய்து விடும்.

​குணநலனில் மாற்றம்

இது ஒருவரது குணநலனிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆபாச படம் பார்க்க துவங்கிய ஆரம்ப கட்டத்தில் சுரக்கும் அதிக அளவு டோபமைனால் அடையும் உச்சம் போக போக குறையும் போது, மனம் மிக மோசமான ஆபாச படங்களை பார்க்க வேண்டும் என்று அவரை தூண்டும். மேலும், அதிக ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் அடிமையானவர்கள் பெண்கள் மீது அதிகமான வன்மம் கொண்டவர்களாகவும், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

​பாலியல் செயல்பாடுகளில் பாதிப்பு

அதிகமாக ஆபாச படங்களை பார்த்து, பார்த்து தங்களது பார்ட்னர்கள் உடன் இருக்கும் போதும் கூட அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் 'அந்த' நேரத்திலும் ஆபாச படங்கள் தேவைப்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ஆபாச படமும், மனஅழுத்தமும்

ஆபாச படங்கள், மிக சீக்கிரமாக மனிதர்களின் மூளையை ஆக்கிரமித்து கொண்டு அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகளை உருவாக்கி விடுகிறது. இது அவர்களுக்கு பலவிதமான மனஅழுத்த பிரச்சனைகளை தருகிறது. மேலும், அதிக நேரம் இவர்கள் உண்மையான மனிதர்களிடத்தில் இருந்து தங்களை தனிமைப் படுத்தி கொண்டு அதிகமான நேரம் ஆபாச படங்களில் மூழ்கி விடுகின்றனர். மேலும் இவர்கள், மிக சாதாரணமான விஷயங்களுக்கு கூட எளிதில் கோபப் படுபவர்களாக இருப்பதாக தெரிய வருகிறது.


​வேலை பறி போகலாம்

பலரும் தங்களது அலுவலகங்களில் கூட ஆபாச படங்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலையில் நாட்டமின்மை, கவனக்குறைவு, அதிக மனரீதியான, உடல்ரீதியான செயல்பாடு தேவையான இடங்களில் மோசமான செயல்பாடு போன்றவற்றால் பலரும், மேலை நாடுகளில் வேலையை விட்டு அனுப்ப பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 3 Dec 2022 2:54 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 3. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 4. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 7. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 8. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
 9. அரசியல்
  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
 10. தமிழ்நாடு
  நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைப்பு