நோய்கள் வராமலிருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி-?

Immunity Power - மனிதர்களுக்கு நோய்கள் வராமல் இருக்க என்ன வழி என்பதற்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்தால் நோய்கள் அதிகம் பாதிக்காது எனசித்தா டாக்டர்.ராஜாசங்கர் தெரிவிக்கிறார். அதனைப்பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நோய்கள் வராமலிருக்க நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிப்பது எப்படி-?
X

சமையலறையில்  காணப்படும்  ஐந்தரைப்பெட்டி பொக்கிஷம்...

how will you develop immunity power


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழ வகைகள்....

how will you develop immunity power

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே புரட்டி போட்டு விட்டது கொரோனா என்னும் கொடூர நோய். அது தந்த மன உளைச்சலுக்கும்அதனால் உண்டான பேரிழப்பிற்கும் பின்னால் அனைவர் மனதிலும் ஒட்டுமொத்தமாக எழுந்து இருக்கும் ஒரு கேள்வி "நம் எதிர்ப்பு சக்தியை அதிகம்ஆக்கிக் கொள்வது எப்படி.? நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்வதுஎப்படி?" என்பதே. கரோனா போன்ற கொடிய நோய்களை இனி தவிர்க்க முடியாது.விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு (zoonotic)வரும் நோய்கள்அதிகமாகும். நாம் சற்றும் எதிர்பார்க்காத நுண்ணுயிர்களின் தாக்கம்அதிகமாகும். நாம் சாதாரணமாக நினைத்த டெங்கு, மலேரியா போன்றநோய்கள் பேராபத்தை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனம்எச்சரித்து உள்ளது. பருவகால மாற்றங்கள், காடுகளைஅழித்தல், நகரமயமாக்கல் ஆகியனவும் பேரிடர்கள் வர முக்கியகாரணிகள்.புதிது புதிதாக முளைக்கும் இப்படிப்பட்ட வைரஸ் நோய்களுக்கு சிகிச்சைசெய்வதற்கு ரெடிமேட் மருந்துகளும் இல்லை. இனிமேல் இப்படிப்பட்டவைரஸ் கிருமிகளின் தாக்கம் பெருகிக் கொண்டே இருக்கும்.அதன் தீவிரம்மட்டும் எப்படி இருக்கும் என நாம் இப்போது யூகிக்க முடியாது. இப்படிபட்ட சூழலில் நோய் வந்த பின்னர் சிகிச்சை பெற்று சரி செய்துகொள்வதற்கு சாத்தியம் இல்லை. ஒரு வேளை வைரஸ் தொற்று நம்மைதாக்கினாலும், இல்லை வேறு எந்த நோய்கள் வந்தாலும் நோயின் தீவிரநிலைக்கு ஆளாகாமல் சீக்கிரம் நன்னிலைக்கு திரும்ப இப்போதைக்கு நம்கையில் இருக்கும் ஒரே அஸ்திரம் நம் உடல் எதிர்ப்பு சக்தியை நன்றாக்கிகொள்வது மட்டுமே.

how will you develop immunity power


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள்... இக்கால குழந்தைகளுக்கு காய் சாப்பிட பழக்குங்கள்.....

how will you develop immunity power

மிக அதிகமாக பெருகி வரும் தொற்றா நோய்களானசர்க்கரை நோய், இரத்தகொதிப்பு நோய், போன்ற தொற்றா நோய்கூட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வதும்அவசியம். அதற்கு உணவிலும் வாழ்வியல் முறைகளிலும் நாம் மிகுந்தஅக்கறை காட்ட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே உணவின்மேலான அக்கறை மக்கள் மத்தியில் கூடியுள்ளது.எது தனக்கானஉணவு, எது தன் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு, என்ற தேடல் அதிகரித்துஉள்ளது."வரும் முன் காப்போம், உணவே மருந்து மருந்தே உணவு " என்ற சித்தமருத்துவத்தின் அடிப்படை தத்துவங்களுக்குள் மிக அழகாய் பொதிந்துகிடக்கும் சூட்சுமங்களும் பொக்கிஷங்களும் சொல்லும் இதற்கானவிடையை அழகாய்.

உடலில் புகுந்து நோய் உண்டாக்கக் கூடிய கிருமி நம் உடலுள் புகுவதைஅழகாய் இனம் கண்டு *ஏல யாரு ல நீ இங்க?" என விரட்டி அடிக்கும்உடலின் ஆற்றலே நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆகும். நோய் எதிர்ப்புமண்டலத்தின் கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட செயல்பாடு இது...உடலில் உள்ள எலும்பு மஜ்ஜை, தைமஸ் சுரப்பி, மண்ணீரல், நிணநீர்கோளம் மற்றும் தோல் ஆகியன நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மிகமுக்கிய உறுப்புக்கள் ஆகும். நோய் எதிர்ப்பு தன்மை உள்ளார்ந்த நோய்எதிர்ப்பு தன்மை,(innate immunity) மற்றும் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு தன்மை (acquired immunity) என இரண்டு வகைப்படும். பிறவியிலேயே நமக்குஅமைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி ஆகும்..இது மிக வேகமாக செயல்படும் தன்மை உடையது.


நோய்க்கூட்டங்களில்இருந்து நம்மை பத்திரமாக பாதுகாக்கும் அரண் இது. இந்த வகை நோய்எதிர்ப்பு சக்திக்கு நினைவாற்றல் கிடையாது. ஒரு முறை உடலை தாக்கியகிருமி மீண்டும் தாக்கும் போது அதே வேகத்தில் செயல்படும் சக்தியும்கிடையாது.முதல் முறை போராடி அக்கிருமியை வெளியேற்றிய உடன்அதனை மறந்து விடுகிறது.பெறப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது ஒரு நோய் கிருமி உடலைதாக்க வருகிறது என தெரிந்ததும் அதை எதிர்த்து போராட உடல்தானாகவே அதற்கான எதிர்வினை பொருளை( antibodies) உற்பத்திசெய்கிறது. இந்த வகை நோய் எதிர்ப்பு ஆற்றல் கிருமி தொற்று உடலுள்புகுந்தவுடன் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் போல் உடனடியாகசெயல்படுவது இல்லை. கிருமி தொற்று உட்புகுந்து ஒரு வாரம் கழிந்தபின்னரே செயல்பட தொடங்கும். இதை மரபு வழியாக பெற முடியாது.ஒரு முறை ஒரு தொற்று ஏற்பட்டு நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம்அதை எதிர்த்து போராடி அழித்து இருப்பின் அதே கிருமி மீண்டும் ஒருமுறை எப்போது தலை காட்டினாலும் அப்போது உடனடியாக செயல்பட்டுஅதை அழிக்கும் ஞாபக திறன் உடையது. இந்த இரு வகை எதிர்ப்புஆற்றலும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் சார்ந்தும் செயல்படுவதே நம்நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடின் சிறப்பு அம்சம். " Auto immune disorders' எனப்படும் முடக்கு வாதம், சோரியாசிஸ் போன்றநோய்களில் நம் உடலை பாதுகாக்க வேண்டிய நோய் எதிர்ப்பு மண்டலம்தனக்கே எதிராக செயல்படும்.அடிக்கடி உண்டாகும் மன அழுத்தம், தொற்று நோய்கள், அடிக்கடிஉண்டாகும் அசதி, சளி பிடித்தல், புண்கள் மெதுவாகஆறுதல்,பசியின்மை, வயிற்றுப் போக்கு ஆகியன உடலின் நோய் எதிர்ப்பு வன்மை

குன்றியதன் குறிகுணங்கள். உடலின் சத்து குறைபாட்டாலும், சிலநோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளாலும், சில நோய்நிலைகளிலும் உடலின் எதிர்ப்பு தன்மை மிக குறைவாக இருக்கும்.நாட்பட்ட மன அழுத்தத்தாலும் உடலின் எதிர்ப்பு சக்தி குறைபடும்.பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குன்றி இருப்பவர்களுக்கு புற்று வரும்சாத்தியங்கள் சற்று அதிகம்.சரி, நம் உடலின் எதிர்ப்பு சக்தியை சீராக்கி கொள்வது எப்படி?நம் உடலின் எதிர்ப்பு சக்தி குடலில் உள்ள நுண்ணுயிர்களின்(gutbiome) நல்ல ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது என சமீபஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லா நுண்ணுயிர் கிருமிகளும் உடலுக்குகேடு செய்வது இல்லை உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கிருமிகளை "ப்ரோபயாடிக்ஸ்" என கூறுகிறது மருத்துவ உலகம். சீரணபாதையில் மட்டும் கிட்டத்தட்ட 300 ட்ரில்லியன் நுண்ணுயிர் கிருமிகள்வசிக்கின்றன. அதில் அநேகமானவை பாதிப்பு ஏதும் செய்யாதவைதான்.

how will you develop immunity power


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்தரைப்பெட்டி மருந்துகள்...கசாயத்திற்கு தயாராகிறது....(பைல்படம்)

மோர், இட்லி, நீராகாரம் போன்ற உணவுகளில் உடலுக்கு தேவையானப்ரோபயாடிக்ஸ் அதிகமாக உள்ளன. இவைகளின் ஆரோக்கியமானசெயல்பாட்டிற்கு உணவாகும் பொருட்கள் "ப்ரீபயாடிக்ஸ்" எனகூறப்படுகின்றன. பயறு வகைகள், வாழைப்பழம், சின்னவெங்காயம், வெள்ளை பூண்டு, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியன மிகநல்ல ப்ரீபயாடிக் உணவுகள் ஆகும். நம் சீரண மண்டலத்தால் சீரணிக்கமுடியாத நார் சத்து உணவுகளும் இதில் அடங்கும்,. நம் உடலுக்குதேவையான இந்த கிருமிகள் குடலில் நலமாகவும் ஆரோக்கியமாகவும்இருக்கும் போது உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.மலச்சிக்கல்வராது, உடல் பருமன் உண்டாகாது. எலும்புகளின் அடர்த்தி குறைபடாது.பரம்பரை காரணமாக வரும் சர்க்கரை நோயும்( type 2 diabetesmellitus) வருவதற்கான சாத்தியங்கள் குறைவு. வெள்ளை சர்க்கரை சேர்ந்தஇனிப்பு உணவுகள், பொறித்த மற்றும் வறுத்த கொழுப்பு உணவுகள் நம்குடலில் நலமாக இருக்கும் இந்த நுண்ணுயிர் கிருமிகளுக்கு உலைவைக்கும். அதனால் உணவுகளில் இவற்றை தவிர்க்க வேண்டும். துரிதஉணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பூட்டிகள் சேர்ந்தஉணவுகள், சிவப்பு இறைச்சி ஆகிய அனைத்து குப்பை உணவுகளுக்கும்"டாட்டா "சொல்லி விட வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் எண்பதுசதவீதம் காய்கறிகளும் பழங்களுமாக இருக்க வேண்டும். மீதி இருபதுசதவீதம் மட்டும் அரிசி கோதுமை போன்ற தானிய வகைகளாகஇருக்கலாம் என மிக சமீபத்திய ஆய்வுகள் பகர்கின்றன. நிறமி சத்துஅதிகம் செறிந்த சிறு தானியங்கள் மிக நல்லவை. தினையில் உள்ளபீட்டா கரோட்டின், கேழ்வரகில் உள்ள இரும்பு மற்றும் சுண்ண சத்து

உடலின் எதிர்ப்பு திறனை கூட்டும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்செறிந்த மீன்கள், ப்ளாக்ஸ் விதைகள் ஒரு மிக நல்ல தேர்வு. நோய்எதிர்ப்பு ஆற்றலை சீராக்க புரத சத்து நிறைந்தபாசிப்பயறு, கொண்டைக்கடலை நல்லவை. இவற்றை முளை கட்டியும்எடுத்துக் கொள்ளலாம்.,பதார்த்த குண சிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல் கூறும் "பிணிஅணுகா விதி" ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.பசித்தால் மட்டுமேஉணவு அருந்த வேண்டும்.பகலில் எந்த காரணம் கொண்டும் தூங்ககூடாது.முதல் நாள் சமைத்த உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும்அதை மறுநாள் உண்ணக் கூடாது.போன்றவை அவற்றுள் மிக முக்கியவிதிகள்..உணவில் வைட்டமின் A,C,D, E சத்து சேர்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.வைட்டமின் *ஏ" சத்து பச்சை காய்கறிகளிலும்கீரைகளிலும் அதிகம் உள்ளது.வைட்டமின் "சி" சத்து சிட்ரஸ் பழங்களில்அதிகம். நெல்லிக்கனி வைட்டமின் சி சத்து செறிந்த உணவுஆகும்.வைட்டமின் "டி" சத்து காளான்கள் மற்றும் முட்டையின் மஞ்சள்கருவில் அதிகம் உள்ளது. கீரைகளிலும் உலர் பழங்களிலும் வைட்டமின்"ஈ" சத்துஅதிகம், நிலக்கடலை, எள்ளு ஆகியன துத்தநாக சத்து நிறைந்தஉணவுகள்.. இவை உடலில் கிருமிகளோடு போராடும் வெள்ளைஅணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.நாகம், செம்பு மற்றும்செலீனியம் சத்துசேர்ந்த உணவுகளும் நம் எதிர்ப்பு தன்மையைஅதிகரிக்கும்.நறுமண பொருட்களான சீரகம், மல்லி,இலவங்கம்,மஞ்சள்,வெந்தயம் போன்ற அஞ்சறைப்பெட்டிபொக்கிஷங்களை ஏதாவது ஒரு விதத்தில் உணவில் சேர்க்கவேண்டும்.

how will you develop immunity power


தினமும் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த குறைந்தபட்சம் 45 நிமிடம் வாக்கிங் போங்க...

அவற்றுள் பொதிந்து இருக்கும் மூலிகை கூறுகள் நம்நல வாழ்விற்கான அட்சய பாத்திரம்.இதை தவிர ஏழு மணி நேர ஆழ்ந்த தூக்கம்,காலை அரை மணி நேரநடை பயிற்சி, உடல் பயிற்சி, மூச்சு பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிஆகியன மிக மிக அவசியம்.யோகாசன பயிற்சி வளர்சிதை மாற்றநோய்கள் வராமல் தடுக்கும். மூச்சுப் பயிற்சி இரத்தத்தில் அதிகம் பிராணவாயுவை சேர்க்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.மனதில் கவலையும்பதட்டமும் குடி கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும்.இவைகள் அனைத்தும்சேர்ந்து உடலின் எதிர்ப்பு சக்தியை சீராக்கும். இவை அனைத்தோடும்மனதையும் மகிழ்வாகவும் நிறைவாகவும் வைத்துக் கொள்ள வேண்டியதுமிகஅத்தியாவசியமான ஒன்று.மொத்தத்தில் எங்கோ எப்படியோ தொலைத்த நம் தமிழர் நல்லுணவையும்நல வாழ்வையும் அழகாய் மீட்டு எடுத்து நம் அடுத்த தலைமுறைக்கும் அதை அழகாய் கற்றுக்கொடுத்துக் கொண்டேநல்ஆரோக்கியத்தோடு,வாழ்வோம் ,

நன்றி:Dr.க.ராஜாசங்கர் M.D.(siddha)அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 10:57 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...