உடல் சூட்டை தணிக்கும் வழிகள் தமிழில்..

How to Reduce Body Heat in Tamil
X

How to Reduce Body Heat in Tamil

How to Control Body Heat in Tamil-உடலின் வெப்பநிலையைக் குறைத்து, சீரான அளவில் பராமரிக்க உதவும் சில ஆயுர்வேத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

How to Control Body Heat in Tamil

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

உடலின் வெப்பநிலையைக் குறைத்து, சீரான அளவில் பராமரிக்க உதவும் சில ஆயுர்வேத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றி வந்தால், உடல் சூடு பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

குளிர்ந்த பால்

வெயில் காலத்தில் பச்சை பாலை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்துவிடும். உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த முறையை கட்டாயம் தினமும் பின்பற்றினால், விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். முக்கியமாக பால் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கக்கூடாது. பச்சைப் பாலை குடிக்கப் பிடிக்காதர்கள், அத்துடன் விருப்பமான ப்ளேவர்களை சேர்த்து கலந்து மில்க் ஷேக் போன்று தயாரித்துக் குடியுங்கள்.

தண்ணீர்

உடல் சூட்டைத் தணிக்க தண்ணீரை விட சிறந்த பானம் வேறு எதுவும் இல்லை. கோடைக்காலத்தில் வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட, சற்று அதிகமாக அதுவும் அடிக்கடி நீரைக் குடித்து வந்தால், உடலினுள் உள்ள வெப்பநிலை குறைந்துவிடும்.

உடல் சூடு இருப்பவர்கள் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் சூடு உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட வேண்டும். கீரை வகைகளில் முக்கியமாக பருப்பு கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக உடலில் இருக்கும் வெப்பத்தன்மை நீங்கும்.

இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.

பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது.

நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.

தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும். எனவே மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம்.

உடல் சூட்டை உடனடியாக குறைப்பதற்கு உடனடி தீர்வு கொடுக்கும் பொருள் என்றால் அது விளக்கெண்ணெய்.

மரச்செக்கு விளக்கெண்ணெய் வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உடல் சூடு எப்போது அதிகமாக இருக்கின்றதோ அதிகப்படியான உடல் உஷ்ணத்தினால் அவதிப்பட்டு வருகிறீர்களோ, அந்த சமயம் இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை உங்களுடைய இரண்டு கை ஆட்காட்டி விரலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய இரண்டு காலில் இருக்கும் கட்டை விரலின் நகத்தில் மேல் இந்த விளக்கெண்ணையை நன்றாக தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின்பு ஒரு காட்டன் துணியை வைத்து அந்த விளக்கெண்ணையை நகத்திலிருந்து துடைத்து விடுங்கள். இல்லை என்றால் உடல் அதிக குளிர்ச்சியாகி விடும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுடைய உடலில் இருக்கும் சூடு உடனடியாக தணியும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம்,

குழந்தைகளுக்கு வயிற்று வலி வரும் சமயங்களில் இந்த விளக்கெண்ணையை நம்முடைய முன்னோர்கள் தொப்புளில் தடவ சொல்லுவார்கள். இப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு சூட்டினால் எடுக்கக்கூடிய வயிற்றுவலி உடனே தணியும்.

இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினால் உடல் சூடு குறையும்.

வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம்.

சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். இதனை குறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம் முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.

பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம்.

பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-௨


Tags

Next Story
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகின் ரகசியத்துக்கு  இந்த பால் தான் காரணமா..?