காலையில் தண்ணீர் குடிப்பது நல்லதா?.... நோயின்றி வாழ்வது எப்படி?......இதைப் படியுங்க...
தினமும் பால் குடிப்பது உடல் ஆரோக்யத்துக்கு மிக மிக நல்லது...
health maintenance tips for daily life
மனிதர்களாக பிறந்தவர்கள் இறைவன் கொடுத்த இந்த உயிரை உடலினை நல்ல ஆரோக்யத்துடன் பேணிப் பாதுகாக்க வேண்டும்.நம்மில் எத்தனை பேர் ஆரோக்ய விஷயத்தில் அக்கறை காட்டுகிறோம்? .... வண்டி நல்லாத்தாம்பா ஓடுது...ன்னு பேசாம சிறிய சிறிய உடல் நல கேடுகள் வந்தால் கண்டுக்காம இருந்துடறோம்... அதுவே ஒரு நாள் பெரிய செலவாக வைக்கும்போதுதான் ஆமாம்பா... ஆமா... உடல் நலனைப்பொறுத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே இனி பார்த்துடனும்து புத்தி நமக்கு வருது...இதுதாங்க உண்மை....
health maintenance tips for daily life
health maintenance tips for daily life
இரவில் காய்ச்சிய சுடு நீரை மண் கலத்தில்அல்லது செம்பு பாத்திரத்தில் வெது வெதுப்பான நிலையில் ஊற்றி மண்மூடி அல்லதுசெம்பு தட்டால் அதை மூடிவைக்கவேண்டும். மின்விசிறியால் தண்ணீரின் சூடு ஆறினால் தண்ணீருக்கும் வாயு கொண்டுவிடும். அதைக்குடிப்பதால் உடல் வலிஏற்படும். அதனால் சுழலும் மின் விசிறியின் கீழ் வெந்நீரை வைக்க கூடாது. தானாகவே ஆறிவிடும். வெந்நீரை சூர்யோதயத்திற்கு முன்பாக பல் துலக்கி நாக்கை சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு 150 மி.லி. முதல் 300 மி.லி வரைகுடிக்கலாம். அதற்கு மேலாக குடித்தால் பசி மத்தித்து விடும்.
இடைவிடாமல் தொடர்ந்து தினமும் விடியற்காலையில் இவ்வாறு தண்ணீர் பருகுவது ஒரு சிறந்த காயகல்பம். இதனால் நீடுழி வாழ்ந்து இன்பம் பெறலாம். கிழத்தனம் வராது.
முக்கியமாக மூலம், ரத்தசோகை, மலச்சிக்கல், உள் காங்கை, தோல்வியாதிகள், இடுப்புப்பிடிப்பு, வயிற்றுவலி, ரத்தக்கொதிப்பு நோய்கள் குணமடையும். கண், காது, மூக்கு, நோய்களுக்கு தெளிவும் வலிவும் தரும். சுடுநீரை இரவில் ஆற வைத்து சீரகம், கொத்தமல்லி விதை, நன்னாரி வேரின் பட்டை, ரோஜாபுஷ்பம், தாமரை புஷ்பம், இவைகளை எல்லாவற்றையுமோ அல்லது கிடைத்தவற்றை மட்டுமோ போட்டுஊறவைத்து, காலையில் அவைகளை அகற்றிவிட்டு அந்த நீரைப் பருகுவது உடல் ஆரோக்யத்துக்கு நல்லது.
health maintenance tips for daily life
health maintenance tips for daily life
மனிதன் சில முக்கியமான நோயணுகா விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவன் ஆயுளையும், மகிழ்ச்சியையும், பெருக்கிக் கொள்ள முடியும். காலமரணம், அகாலமரணம், என்ற இருவகையில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றால் முடிவு நேரக்கூடும். காலமரணம் தவிர்க்க முடியாதது. வாழ்க்கையில் சரியான முறைகளைக் கடைப்பிடிக்காதவன் ஆயிரம்வழிகளில் அகால மரணத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அகால மரணத்தினை தவிர்க்க நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பினை அறிந்து கொள்வோம்.
பாலை முக்கிய உணவாக உபயோகிக்கவும், எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரை பயன்படுத்துவோம். பகல் துாக்கம் கூடாது.இளவெயிலில் காயக்கூடாது. மலம்,சிறுநீர் உந்துதலை அடக்கக்கூடாது. இடது கையை கீழாக வைத்து படுக்கவும் . வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது. மலக்குடலில் அதிக தேக்கமும் வாயுவும் ஏற்படுத்தக் கூடிய காய்கறிகளை உண்ண வேண்டாம்.நன்கு உறைந்த தயிரையே உண்ண வேண்டும். அமுதமாயினும் முதல் நாள் சமைத்து புலால் உணவைச் சாப்பிடவே கூடாது. பசித்தால்அன்றி உணவு சாப்பிடவே கூடாது.இப்படி கட்டுப்பாடுகளுடன் நீங்கள் இருந்தால் எமனுக்கு உங்களிடம் என்ன வேலை-?
health maintenance tips for daily life
health maintenance tips for daily life
ஒரு நாளில் இரு வேளைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். 3 வேளைகள் சாப்பிடக்கூடாது. மண்ணினுள் படர்ந்து வளரும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்றவற்றைச் சேர்க்க வேண்டாம். வாழையின் இளம் பிஞ்சான காயைத் தவிர முற்றிய காயைச் சாப்பிட வேண்டாம். உண்ட பின்னர் உடனே படுக்காமல் சிறிது நேரமாவது நடை பழகுவது அவசியம் ஆகும்.
6 மாதங்களுக்கு ஒரு தடவை மேல்நோக்கி வாந்தியாக கபங்களைப் போக்கிக் கொள்வோம. 4 மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டுக்கொண்டு தலைப்பகுதியில் நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும். துாசி நம்மை பாதிக்காமல் அதை சுவாசிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வயிற்றில் உணவு இருக்கும்போது காமசுகம் அனுபவிக்க வேண்டாம். தான் வளர்க்கும் பசு, தெய்வம், தாய், தந்தையரை வணங்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் எமனுக்கு என்ன வேலை? நம் வாழ்க்கையின் முக்கிய தேவைகளாக மூன்றைக்குறிப்பிடலாம். உணவு, உறக்கம், உறவு, இம் மூன்றும் சரியாக அமைந்திருக்குமானால் ஆரோக்யம் நிலைக்கும்.உணவு சரியாக அமைந்துள்ளதா என்பது ஐந்து முக்கிய அம்சங்களைப் பொறுத்தது. வயது, செய்யும் வேலை, ஜீர்ண சக்தி, பருவகாலங்கள், உணவுப்பொருளின் தன்மை, என்பவையே அவை. தன் இரைப்பையில் பாதியளவு உணவும்,கால் பங்கு திரவமும், கால் பங்கு காற்றும் தடையின்றி சென்று வர காலியாக வைத்திருக்க வேண்டும்.
health maintenance tips for daily life
health maintenance tips for daily life
தீய பழக்கத்திலிருந்து விலகவும், நல்ல பழக்கங்களை பழகவும், புலனடக்கம் முக்கியமான சாதனம், புலனடக்கம் என்பது எளிதில் கை வரக்கூடியது அல்ல. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கருத்துடன் பயில்பவர்களுக்கே அது வாய்க்கும். அதற்கு முதற்பாடம் நாவடக்கம்.ஞானேந்திரியமாகவும், கர்மேந்திரியமாகவும்,சுவை, பேச்சு, உண்பது போன்ற 3 ஜீவாதார பணிகளில் பயன்படும் வாய்ப்பு்ம் பெற்றதாலே நாக்கு ஒன்றில் கட்டுப்பட்டாலும் மற்றொன்றில் ஏமாற்றிவிடும். முதலில்சுவையும், பிறகு உணவும், பிறகு பேச்சும், கட்டுக்கு அடங்கினால் ஆனந்தம்நிலைக்கும். இதற்கான பழக்கத்தினை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu