மன நோய்களுக்கு நல்ல மருந்து பப்பாளி ?...உங்களுக்கு தெரியுமா?.....
Health Benefits Of Papaya
நாம் அன்றாடம் சாப்பிடும் பழவகைகள் அனைத்திலும் தாதுச்சத்துகள் தனித்தனியே அடங்கியுள்ளது.ஆனால் இக்காலத்தில் குழந்தைகள் பழ வகைகளை சாப்பிடுவதில் போதிய ஆர்வத்தினை செலுத்துவதில்லை. பெற்றோர்கள் இதனை பழக்கப்படுத்தவேண்டும். பாஸ்ட்புட் மற்றும் பேக்கரி அயிட்டங்களில் காட்டும் ஆர்வத்தினை பழவகைகள் மற்றும் சத்தான சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட காட்டுவதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சத்து குறைந்து நோய்கள் எளிதில் பற்றிக்கொள்ள காரணமாகவும்அமைகிறது.
பப்பாளி பழத்தினைப்பற்றி அனைவருக்குமே தெரியும். பப்பாளி மரம் முன்பெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மரத்திலேயே பழுத்து சாப்பிடுவதற்கு ஆளில்லாமல் இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதற்கும் கிராக்கியாகிவிட்டது. காரணம் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை வியாதியானதாக இருந்தது. ஆனால் தற்போது மாறிவரும் உணவுப்பழக்கத்தினால் இளையோர்களுக்கு ஏன் சிறுவர்களுக்கும் கூட இந்நோய் தாக்க ஆரம்பித்துவிட்டது.
Health Benefits Of Papaya
இதற்கெல்லாம் காரணம் என்ன? சரியான சத்தான உணவு இல்லை. அதேபோல் அனைவரிடமும் உடல் உழைப்பானது குறைந்து போனதால் நோய்கள் இனம் புரியாமல் தாக்க ஆரம்பித்துவிட்டதே உண்மை. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழவகைகளில் பப்பாளி முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்குமட்டுமே இப்பழம் உற்ற நண்பன். பப்பாளி பழத்திலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி பிரக்டோஸ், விட்டமின் ஏ, அதிகம் கொண்டிருக்கும் பழம் இது.பப்பாளி எந்தளவு கனிகிறதோ, அந்த அளவுக்கு விட்டமின் சி அதிகரிக்கும்.
நுாறுகிராம் பப்பாளியில் காய் என்றால் 32 கிராம் அளவுக்கும், கொஞ்சம் கனிந்த பப்பாளி என்றால் 40முதல் 72 மி.கிராமும், பாதிக்கும் மேல் கனிந்த பப்பாளி என்றால் 53 முதல் 95 மில்லி கிராமும் விட்டமின் சி இருக்கிறது.
*மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளியில் சர்க்கரைச் சத்தும், விட்டமின் சியும் மிக அதிகமாக இருக்கும்.
*பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி, விட்டமின் பி2, மற்றும் நியாசின், ஆகியவை உள்ளது. பச்சைக்காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர்.இது புரோட்டீனை செரிக்கஉதவும்.
*மண்ணீரல் வீக்கத்துக்கு சிறந்த நிவாரணி
*மன நோய்களுக்கு நல்ல மருந்து.கல்லீரலுக்கும் ஏற்பட்டது.
*கணைய பாதிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் சிறுநீர் பிரச்னைகளைத்தீர்க்கும்.
*இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்
*உடலில் உள்ள சதைகள் எலும்புகளை வலுவூட்டும்
*உடலிலுள்ள நச்சுகள் பப்பாளியால் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
* பப்பாளியிலுள்ள என்சைம்களின் சேர்க்கை,புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் பெற்றது.
Health Benefits Of Papaya
டிபயாடிக் மருந்துகளால் குடல் தசைகளில் அழிக்கப்பட்டு இருக்கும். நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
*பப்பாளியிலுள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன் என்பது ஆண்களின் உயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது. கார்பின் இருதயத்திற்கும் பைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது
*டெங்கு காய்ச்சலால் குறைந்த தட்டுகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறு பயன்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Health Benefits Of Papaya
Health Benefits Of Papaya
பற்களில் ஏதேனும் பிரச்னை இருப்பின் இப்பழத்தினை சாப்பிட்டால் ஓரளவு குணம் தெரியும். அதேபோல் சிறுநீர்க்கல்லை கரைக்கக்கூடிய சக்தி பப்பாளிப்பழத்திற்கு உள்ளது. நம் உடலிலுள்ள நரம்புகள் பலப்படவும் , ரத்த விருத்தி உண்டாவதற்கும், பப்பாளி பழத்தினை தொடர்ந்து சாப்பிடலாம். அதேபோல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நல்லநினைவாற்றல் அதாவது ஞாபக சக்தியை உருவாக்க பப்பாளிபழத்தினை சாப்பிடவும்.
ஒரு சிலருக்கு தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்னையானது இருக்கும். அதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தினை சாப்பிட்டால் அப்பிரச்னை எளிதில் தீர்வாகும்.
பப்பாளிப்பழத்தில் குறைவான கலோரிகள்தான் உள்ளது.இருந்தாலும் நம் உடலில் ஏற்படக்கூடிய பலபிரச்னைகளுக்கு இது ஒரு அருமருந்தாக உள்ளது. அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதாலும், ஜீரண சக்திக்கு பெரும் உதவி செய்வதோடு உடல்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu