Health Benefits Of Onion வெங்காயத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?....உங்களுக்கு தெரியுமா?....படிங்க..

Health Benefits Of Onion  வெங்காயத்திலுள்ள மருத்துவ குணங்கள்  என்னென்ன?....உங்களுக்கு தெரியுமா?....படிங்க..
X
Health Benefits Of Onion வெங்காயத்தை தோலுரித்துவிட்டு சில மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தக்கூடாது. ஏனெனில் தோலுரித்த வெங்காயத்தினைச் சுற்றிலும்சில நிமிடத்திலேயே கிருமிகள் சூழ்ந்துவிடும். நறுக்கிய வெங்காயம் சமையலுக்கு போக மீதி இருந்தால் மறுநாள் திரும்பவும் பயன்படுத்தக்கூடாது.

Health Benefits Of Onion

வெங்காயம்...உரிக்க உரிக்க ஒன்றுமே உள்ளே இருக்காதுன்னு பலர் கேலி பேசினாலும் இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பார்த்தீர்கள் என்றால் நீங்களே மலைச்சுபோயிடுவீங்கன்னா பார்த்துக்கங்களேன்...வாங்க என்னான்னு பார்ப்போமே-?

வெங்காயத்தின் உபயோகத்தினை நம் முன்னோர்கள் வெகுகாலத்திற்கு முன்பே அறிந்து அதன் பயனை அனுபவித்து வந்துள்ளனர். வெங்காயத்தில் ஒன்றும் இல்லை என்பது வேடிக்கையாகச் சொன்னாலும் அதனுடைய வீரியம் சொல்லில் அடங்காது. மருத்துவத்திலும் அதன் பணியானது மகத்தானதாக விளங்கி வருகிறது.

வெங்காயம் போன்று வெங்காயத்தின் பூவிலும் அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளமையால் அதனையும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். வெங்காயத்தில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், என இரண்டு வகை உள்ளது.

Health Benefits Of Onion


பெரிய வெங்காயத்தில் சிப்பு பூசா, கல்யாண்பூர், சிவப்பு உருண்டை, ராம்பூர் , பூனைவெள்ளை என்று பல வகைகள் உள்ளது. நாட்டுவெங்காயம் என்று யாழ்ப்பாணத்து சிறிய வெங்காயமும் உள்ளது.எப்படி என்றாலும் வெங்காயத்திலுள்ள வீரியம் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 100கிராம் வெங்காயத்தில் கிடைக்கும் கலோரி 51 ஆகும்.புரதம், கால்சியம், ரிபோபிளைவின், வைட்டமின் -சி, முதலியவை. அதிக அளவில் இருப்பதினால் உடலுக்கு தேவையான சத்தாகவும் வெங்காயம் சிறந்து விளங்குகிறது.

வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதினால் ஜீரண சக்தியை உண்டாக்கி உடலின் உஷ்ணத்தைத் தணிக்கிறது. ரத்தத்தினைச் சுத்திகரிக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உள்ளமையால் இருதயத்திற்கு நல்லசக்தியை அளிக்கிறது. எலும்புகளுக்கு வலிமையையும் கொடுக்கிறது.

தொற்று நோய்கள் நம்மை அணுகாதபடி தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. இது ஒரு கிருமி நாசினியாகும். வெங்காயத்தினை காலையில் வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை அணுகாது. தவிரவும் ஈறுகள் வலுப்பெற்று பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும்.

வெங்காயத்தை தோலுரித்துவிட்டு சில மணிநேரம் கழித்து உபயோகப்படுத்தக்கூடாது. ஏனெனில் தோலுரித்த வெங்காயத்தினைச் சுற்றிலும்சில நிமிடத்திலேயே கிருமிகள் சூழ்ந்துவிடும். நறுக்கிய வெங்காயம் சமையலுக்கு போக மீதி இருந்தால் மறுநாள் திரும்பவும் பயன்படுத்தக்கூடாது. வெங்காயத்தின் நெடியினால் எல்லா கிருமிகளையும் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளமைதான்இதற்கு காரணம். வெங்காயம் சமையல் மூலம் நமக்கு பலன் அளிப்பதைப் போன்று மருத்துவத்திற்கும் நல்ல பலனைக் கொடுக்கிறது

புகைப் பிடிப்பவர்களுக்கு பிரண்ட்

புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் புகையினால் பாதிக்கப்படுகிறது. இதனால் பின்னாளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனைப் போக்கிகொள்ள ஒரு வேளைக்கு அரை அவுன்ஸ் வெங்காயச்சாறு வீதம் தினசரி நான்கு வேளை அருந்திவரவேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறும்.இருமல், கபம்,சளி, ரத்தவாந்தி போன்றவைகளும் நீங்கும்.

சிறுநீர் எரிச்சல்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகி கஷ்டத்தைக் கொடுத்தால் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு குணமடையலாம். மூன்று சிறிய வெங்காயத்தை தோல் நீக்கிஇரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். நீ்ர் கொதித்து ஒரு டம்ளராகச் சுண்டியதும் கீழே இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய நீரை குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்துவந்தால் எரிச்சல் இ ல்லாமல் போகும்.

Health Benefits Of Onion


சீறுநீர் கல் கரைய

சிறுநீரகத்தில் கல் உண்டானால் மிக அபாயகரமான தொந்தரவுகளைக் கொடுக்கும். இதனால் சிறுநீர் வெளியேறாமல் வயிறு உப்பி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனை வெங்காயத்தின் மூலம் குணமாக்கலாம். வெங்காயம் 100 கிராம், பச்சை நொய் உமி 100 கிராம், சங்கிவை 100 கிராம், ஆகிய இம்மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறை

இந்த சாறை 100 மிலி வீதம் தினசரி காலை , மாலை இரண்டு வேளை தொடர்ந்து உட்கொண்டால் சில நாட்களிலேயே சிறு நீரகத்திலுள்ள கல் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும். உடல் நலமாகும்.

உடல் பெருத்திருந்தால்

அளவுக்கு மீறி உடல் பெருப்பதற்கான காரணம் உடலி்ல் அளவுக்கு மீறி கொழுப்புச்சத்து சேருவதுதான். கொழுப்பு சத்து இல்லாத ஒரு பொருள் உண்டென்றால் அது வெங்காயம்தான். ஆகையினால் அளவுக்கு மீறி உடல் பெருத்தவர்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவுடன் சேர்த்துகொள்ள வேண்டும்.

உண்ணும் வகையான வெங்காய தோசை, வெங்காய தயிர் பச்சடி, வெங்காய வடை, வெங்காய ஊத்தப்பம், வெங்காய சட்னி, வெங்காய ரவாதோசை, என்று பலவகையில் உணவுடன் வெங்காயத்தைச் சேர்த்து உண்டால் அவசியமில்லாமல் பெருத்திருந்த உடல் இளைத்து கவர்ச்சியோடு காணப்படுவீர்கள்.

மூட்டுவீக்கம்

கீல்வாய்வினால் , மூட்டு வீங்கி நன்றாகச் சிவந்து நடக்க முடியாமல் எரிச்சல் கொடுப்பதுண்டு. இதுபோன்றவற்றினால் கஷ்டப்படுகிறவர்கள் கீழ்க்காணும் முறையில் நிவாரணம் பெறலாம். மருந்து கடையில் சதகுப்பை என்று கேட்டால் கொடுப்பார்கள் அதனை வாங்கி வந்து அந்த அளவுக்கு வெங்காயத்தைச் சேர்த்து அம்மியில் வைத்து மெழுக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனை வீக்கத்தின் மேல் தொடர்ந்து பத்துப்போட்டு வந்தால் வீக்கம் அகன்றுவிடும். வலியும் மறைந்துவிடும்.

நரம்புத்தளர்ச்சி

நரம்பு தளர்ச்சியுள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை ஒரு வேளைமட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். இதுபோன்ற இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்த சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி தானாகவே குணமாகிவிடும்.

குடல் வாத நோய்க்கு வெங்காயப்பூ

குன்மநோயையும், குடல் பற்றிய வாத நோயையும் குணமாக்கும் ஆற்றல் வெங்காயப்பூவுக்கும் உண்டு. வெங்காயப்பூவைச் சமைத்து உண்டால் குடலிலுள்ள வாயுவை வெளியேற்றி குன்ம நோயைக் கண்டிக்கும். வெங்காய பூவை நன்கு உலர்த்தி துாள் செய்து வைத்துக்கொண்டு இதிலிருந்து காலை-மாலை இரு வேளையும் 5 அரிசி எடையளவு எடுத்து வெந்நீரில் போட்டு குடித்துவந்தால் வாய்வு அகலும். சூதக வலியினால் துன்பப்படும் பெண்கள் இம்முறையைக் கையாண்டால் சூதக வலியும் நிவர்த்தியாகும்.

மேக நோய் குணமாக

மேகநோய் என்பது கொடிய வியாதியாகும். இது உடனடியாக ஒழிக்கப்படவேண்டிய வியாதியாகும். இந்த ரகசிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்ள கூச்சப்பட்டு நாள் ஆக ஆக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

இந்த ரகசிய நோயை வெங்காயம் குணமாக்குவதினால் இந்த வைத்தியத்தைக் கடைப்பிடித்து குணமாக்கிகொள்ளவும். வெள்ளை வெங்காயம் 200 கிராம், கோதுமை மாவு 150 கிராம், சர்க்கரை 50கிராம், நெய் 250கிராம், பசும்பால் 1லிட்டர் ஆகிய சரக்குகளை தயார் செய்து கொள்ளவும்.

முதலில் பசும்பாலை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் வெள்ளை வெங்காயத்தை நறுக்கிப் போடவும். வெங்காயம் வெந்ததும் கோதுமை மாவையும், சர்க்கரையையும் கொட்டிக்கிளறவும். சற்று கெட்டியானதும் நெய்யை ஊற்றி நன்றாக கிளறவும். லேகியப்பதத்துடன் வந்ததும் கீழே இறக்கி ஆறியதும் சுத்தமான பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்திக்கொள்ளவும். மேக வியாதிக் கண்டவர்கள் இந்த லேகியத்திலிருந்து வேளை ஒன்றுக்கு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து சாப்பிடவும். இது போன்று மூன்று வேளையும் சாப்பிடவும். இதுபோன்று இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால் மேக வியாதி குணமாகும். மருந்து சாப்பிடும் நாட்களில் சிறுநீர், சற்று அதிகமாக வெளியேறும். அதற்காக பயப்படத் தேவையில்லை. இருப்பினும் அளவைக் குறைத்து இரண்டு வேளை உட்கொள்ளவும். ஆனால் 27 நாட்கள் என்பதை 36 நாட்கள் வெங்காய லேகியத்தைச் சாப்பிட வேண்டும். ஒரு வேளைக்கு கொட்டைப்பாக்கு அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும். ஆகையினால் கவனத்துடன் உட்கொண்டு நல்ல பலனைப்பெறுங்கள்.

வெயில் கட்டி

இது பொதுவாக வெயில் காலத்தில் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வருவதுண்டு. சில சமயம் இது பெரிய கட்டியாக மாறி பழுத்து உடையாமல் சதா வலித்துக்கொண்டே இருக்கும். இந்த தொந்தரவினால் எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட உடனடியாக வெங்காயத்தைச் சுட்டு அத்துடன் மஞ்சள் துாளும் , நெய்யும் விட்டு மெழுக அரைத்தெடுத்து லேசாக கூட வைத்துக்கொள்ளவும். இளஞ்சூட்டுடன் கட்டியின் மீது இதனை வைத்துக்கட்டினால் விரைவில் கட்டிப் பழுத்து உடைந்துவிடும்.

தாம்பத்திய சுகம்

தாம்பத்ய சுகத்திற்கு வெங்காயம் துணைபுரிகிறது. ஆதலின் கீழ்க்காணும் முறையைப் பின்பற்றி சுகம் பெறுங்கள். வெங்காயத்தில் சாம்பார் வெங்காயம் என்று ஒன்று உள்ளது. அதனை சாம்பாரில் பயன்படுத்துவதினால் சாம்பார் வெங்காயம் என்று கூறுவார்கள். அந்தசின்ன வெங்காயத்தை தாம்பத்திய உறவு கொள்ளுவதற்கு முன்னர் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மென்று அதன் சாறை உள்ளே முழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்னர் தாம்பத்திய உறவு சுகமாக இருக்கும்.

Tags

Next Story