/* */

உங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து விட்டதா? இது தாங்க அறிகுறி

உங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து விட்டதா? என்பதை அறிய சில அறிகுறிகள் பற்றி பொது நல மருத்துவர் கூறும் அறிவுரைகளை பார்ப்போம்.

HIGHLIGHTS

உங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து விட்டதா? இது தாங்க அறிகுறி
X

‘ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு இன்று வயது வித்தியாசம் இன்றி 20முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கூட வந்து விடுகிறது. மாரடைப்புக்குரிய அறிகுறி தெரிந்தால் உயிரை காப்பாற்றி விடடலாம் என்கிறார் சிவகங்கையை சேர்ந்த அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.


அவர் கூறும் அறிவுரைகள் என்ன என்பதை இனி பார்ப்போமா?

இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு ( MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய ரத்த நாள அடைப்பு என்பது அவசர நிலையாகும்

ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து அடைப்புக்குள்ளான அந்த குறிப்பிட்ட தமனியால் ஊட்டம் பெறும் இதயத்தின் தசைப்பகுதி செல்கள் வேகமாக இறக்க ஆரம்பிக்கின்றன.

நாம் இதை அவசர நிலையாகக் கருதி உடனடியாக ரத்த நாள அடைப்பை சரி செய்யாவிடில் இதயத்தின் பெரும்பகுதி தசைகள் இறந்து அதனால் இதயத்தின் ரத்தத்தை உந்தும் ஆற்றல் குறைந்து இதயம் செயலிழந்து மரணம் சம்பவிக்கும். அல்லது காலம் முழுவதும் இறந்த இதயத் தசைகளை வைத்துக் கொண்டு செயல் குன்றிய இதயத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.


இடது பக்க நெஞ்சுப் பகுதியில் உள்ளிருந்து குடைவதைப் போலஅதீத வலி ஏற்பட்டாலோ இடப்பக்க நெஞ்சு வலி இடப்பக்க தோள் பகுதி வரை , தாடை வரை, இடப்பக்க நெஞ்சின் பின் பகுதி , கழுத்துப் பகுதி வரை வலி பரவலாம் சில நேரங்களில் நெஞ்சுப்பகுதியில் வாயுக்குத்து போல வலி ஏற்படக்கூடும். வாந்தி குமட்டல் வயிற்று வலி என்று உணவினால் ஏற்படும் நச்சின் அறிகுறிகள் போலவும் தோன்றலாம்.

இவையன்றி மூச்சு விடுவதில் சிரமம் மூச்சுத் திணறல் தலைசுற்றல் / பதட்டம் / படபடப்பு முழுவதும் மயக்கமடைதல் போன்ற அறிகுறிகளுடன் இதய ரத்த நாள அடைப்பு வெளிப்படக்கூடும். மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஈசிஜி எனும் இதயத்தின் மின்இயங்குவியல் வரை படத்தைப் பார்த்து இதய ரத்த நாள அடைப்பை கண்டறிய முடியும் . எனினும் ஹார்ட் அட்டாக் வந்த சிலருக்கு ஈ.சி.ஜி. நார்மலாக இருக்கும் . அறிகுறிகள் அனைத்தும் இதய ரத்த நாள அடைப்பை விளக்கும் விதமாக இருக்கும்.


இவர்களுக்கு ட்ரோபோனின்(TROPONIN) எனும் நொதியை அளக்கும் பரிசோதனை செய்யப்படும். இதயத்தின் தசைகள் காயத்துக்கு உள்ளாவதை ட்ரோபோனின் அதிகரிப்பை வைத்து அறிய முடியும்.

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருப்பதை நவீன இதய மீட்பு சிகிச்சை வசதிகள் இல்லாத கிளினிக்குகள் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் கண்டறியப்படும் வாய்ப்பே அதிகம்

அதுவரை ரத்த நாள அடைப்பை கரைக்கும் வண்ணமாய் LOADING DOSE எனப்படும் ரத்த உறைதலை மட்டுப்படுத்தச் செய்யும் ஆஸ்பிரின்(ASPIRIN) மாத்திரை 325 மில்லிகிராம் அளவு க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 600 மில்லிகிராம் அளவு அடோர்வாஸ்டாட்டின்(ATORVASTATIN) 80 மில்லிகிராம் என்ற மூன்று மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரைகள் ரத்தக் கட்டியை மேலும் உறைந்து கட்டிப்படாமல் பார்த்துக் கொள்ளும். இதன் விளைவாக இதயத்தின் தசைகள் இறக்காமல் காத்திட முடியும். இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன இதய மீட்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனையை அடைந்தால்

ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்தை சிரை வழியாக செலுத்தி அடைப்பைக் கரைக்க முடியும். இது முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன சிகிச்சை கிடைக்கும் ஐ.சி.யூ. வசதி உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும். ஸ்ட்ரெப்டோகைனேஸ் ஆல்டெப்லேஸ் டெனெக்டெப்லேஸ் போன்ற மருந்துகள் ரத்த கட்டியை கரைக்கும் தன்மையுடன் செயல்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் போன்றவற்றை மூன்று மணிநேரங்களுக்குள் அடைவது மூலம் ரத்த நாள அடைப்பை நீக்கும் THROMBOLYSIS சிகிச்சை பெற முடியும்

நவீன கேத் லேப் எனப்படும் இதய அவசர சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போதுதோல் வழி கேதிட்டர் எனும் நெழிவுத்தன்மை கொண்ட குழாயை சிரை வழியாக செலுத்தப்படும்.

இதயத்தின் அடைபட்ட ரத்த நாளத்திற்கு சென்றதும் இந்த கேதிட்டரின் முனையில் இருக்கும் பலூன் ஊதப்படும். இதனால் ரத்த நாள அடைப்பு எடுக்கப்படும். அங்கே ஸ்டெண்ட் எனும் எஃகினால் செய்யப்பட்ட கருவி பொருத்தப்படும்.

இந்த ஸ்டெண்ட்டில் இருந்து மேற்கொண்டு ரத்த கட்டியோ கொழுப்பு கட்டியோ உருவாகாத படி சிறிய அளவில் மருந்து உமிழப்பட்டுக் கொண்டே இருக்கும். இதை PRIMARY PERCUTANEOUS INTERVENTION என்று அழைக்கிறோம்

ஹார்ட் அட்டாக் வந்தால் முதல் மூன்று மணிநேரத்திற்குள் இதய அவசர சிகிச்சை செய்யத்தகுந்த மருத்துவமனையை அடைய வேண்டும். லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

ஹார்ட் அட்டாக் மரணங்களில் பெரும்பான்மை மரணங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் நிகழ்வதாகவே இருக்கின்றன. இதை கவனத்தில் கொண்டு உடனே செயல்படுவோம்உயிர்களைக் காப்போம்

மேற்கண்டவாறு டாக்டர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.

Updated On: 4 April 2023 3:35 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 2. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 3. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 4. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 5. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 6. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...
 7. திருவள்ளூர்
  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள்...
 8. திருவள்ளூர்
  100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன
 9. விளையாட்டு
  சார்பட்டா பரம்பரை: வடசென்னையின் குத்துச்சண்டை மரபு
 10. சிங்காநல்லூர்
  ‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்