/* */

ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல்... காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை!

H3N2 Symptoms Tamil-ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்

HIGHLIGHTS

H3N2 Symptoms Tamil
X

H3N2 Symptoms Tamil

H3N2 Symptoms Tamil

உலகில் முற்றிலுமாக அழிக்கப்படாத வைரஸ்களில் முக்கியமானது இந்த இன்புளூயன்ஸா வைரஸ். சீசனல் ஃப்ளூ என்றும் இது அழைக்கப்படுகிறது. காரணம் உலகின் ஏதாவது ஒரு மூலையில் அந்தந்த வானிலையைப் பொறுத்து இந்த காய்ச்சல் பரவி வந்துகொண்டே இருக்கும்.

சாதாரண சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி, தலைவலி என சின்ன சின்ன அறிகுறிகளை காட்டி நம்மை கொஞ்சம் ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸ், சாதாரண ஆண்டிபயாடிக்கால் குணமாகிவிடக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வரை அச்சமில்லை. ஆனால் தற்போது பரவி வருவது அதனினும் வீரியமானது. பிரச்னை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா மற்றும் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.


ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல் காரணங்கள் | H3N2 Virus causes

பெரும்பாலும் இந்த வைரஸ்கள் தான் காரணம். ஆனால் இந்த வைரஸ்கள் பரவுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை அலட்சியப்படுத்துபவர்களாலேயே இந்த வைரஸ் அதி தீவிரமாக பரவி பல்வேறு துன்பங்களை உருவாக்கி விடுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பலரும் தடுப்பூசி போட்டிருந்தும் அறிகுறிகள் தென்படவே செய்தன. ஆனால் பெரிய பாதிப்பில்லை. அதுபோலவே இந்த காய்ச்சலிலும் அறிகுறிகள் தென்படும். பெரிய பாதிப்பு இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஷாக்கிங் செய்தி ஒன்று வந்திருக்கிறது.


ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல் முதல் மரணம் | H3N2 Virus Death

கடந்த மார்ச் 10, வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதுவரை கர்நாடக மாநிலத்தில் 16 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.


ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் | H3N2 Virus symptoms

 • இருமல் அதிகமாக இருக்கும். ஓரிரு வாரங்கள் தொடர வாய்ப்பிருக்கிறது. ஆனால் 2 வாரங்களுக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவரைக் காண வேண்டும்
 • காய்ச்சல் மற்றும் இருமலோடு சேர்ந்து தொண்டை வலி ஏற்படலாம்.
 • தலைவலி கடுமையாக இருக்கலாம். தொடர் வலி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 • வயிற்றுப்போக்கும் கூட சில நேரங்களில் ஏற்படக்கூடும். அதோடு சேர்ந்து உடல் வலியும் இருக்கலாம்
 • சுவாச பிரச்னை - மூச்சு விட கொஞ்சம் சிரமமப்பட நேரிடும்.
 • அதிக வாந்தி - இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக வாந்தி இருக்கலாம்.
 • டீஹைடிரேசன் வரவும் வாய்ப்பிருக்கிறது. அதீத நீர் இழப்பு உடலில் ஏற்படும்
 • குறை ரத்த அழுத்தம் - உடலின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படக்கூடும். அது அளவுக்கதிகமாக குறையலாம்
 • ஏற்கனவே உங்களுக்கு கிட்னி, நுரையீரல், இதய பிரச்னைகள் இருந்தால் அதை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட நேரிடலாம்
 • வறண்டு போல உதடுகள், முகமும் வறண்டு தோல் பிரச்னை ஏற்படலாம்.
 • இது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் வேறு சில உடல்நலக் கோளாறுகளை துணைக்கு அழைத்து வரலாம்.


ஹெச்3என்2 ஃப்ளூ காய்ச்சல் சிகிச்சை | H3N2 Virus Treatment

மூன்று நாட்கள் வரை நீடிக்கும் இந்த காய்ச்சலுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி பாரசிட்டமால் மருந்து, ஊசி, இருமல் டானிக் போன்றவை அளிக்கப்படுகிறது.

மூன்று தினங்களுக்கும் மேல் தொடர்ந்தால் மருத்துவர் அதற்குரிய சோதனையை செய்வார். பிரச்னை இல்லையென்றால் வீட்டிலேயே ஓய்வு எடுத்தால் போதுமானது.


தற்காத்துக் கொள்வது எப்படி? | Prevention Technique

முக கவசம் என்பது உங்களை 99 சதவிகிதம் காற்றில், எச்சில் பரவும் வைரஸ்களிலிருந்து காத்துக் கொள்ள உதவும். அதை தொடர்ந்து கடைபிடியுங்கள்.

சளி, இருமல் ஏற்படாமல் இருக்க, அல்லது வீரியமாக இல்லாமல் இருக்க வீட்டிலேயே இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை அதிகம் உணவில் சேர்த்து வரவேண்டும்.

நகங்களை வெட்டி, கைகளைக் கழுவி, வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 March 2024 8:59 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...