இளமையில் நரை முடியா? எப்படி சரி செய்யலாம்

இளமையில் நரை முடியா? எப்படி சரி செய்யலாம்

பைல் படம்.

கருப்பான தலைமுடியில ஒரு நரை முடி வந்தாகூடா கஷ்டமாதான் இருக்கும். இன்னும் அதிகரிக்காம இருக்க என்ன செய்யணும்னு பாக்கலாம் வாங்க...

நரைமுடியை கண்டாலே பீதி ஆகும் இளவயதினர் அவை மேலும் வெள்ளையாக மாறுவதை தடுக்க வாழ்க்கை முறையில் அன்றாட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

முடி நரைப்பதை மாற்ற முடியாது. ஆனாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரும மருத்துவரின் உதவியுடன் நல்ல முடி பராமரிப்பு மேற்கொள்வது உங்கள் நரைமுடியை கட்டுப்படுத்த செய்யும். என்ன செய்வது எங்கு தொடங்குவது என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு இந்த கட்டுரை உதவும்.

முடி நரைப்பதற்கு சரியான காரணங்கள் இதுதான் என்று உறுதியாக சொல்ல முடியாது. வைட்டமின் குறைபாடு இருந்தால் முன் கூட்டிய நரைக்கு அது காரணமாகிறது. வைட்டமின் பி, பி 12, டி மற்றும் ஈ பயோட்டின் போன்ற வைட்டமின்கள் முடி ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை . எரிச்சலூட்டும் சாம்பல் நிறத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்த வைட்டமின்கள் தேவை.

மரபியல் காரணங்களுக்காகவும் முடி நரைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெற்றோர், தாத்தா, பாட்டி அல்லது வேறு நெருங்கிய உறவினருக்கு முன் கூட்டிய நரை இருந்தால் அது ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் முன்கூட்டியே சரும பராமரிப்பு பிரச்சனையை எளிதாக சமாளிக்க உதவும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக முடியின் நிறம் மாறியிருக்கலாம். சூரியன், மாசுபாடு, தூசி மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள பிற ஃப்ரீ ரேடிக்கல்களின் வெளிப்பாடு சருமத்தை சேதப்படுத்துவதை கவனித்திருக்கிறோம். இவை நரைமுடியையும் அதிகரிக்க செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? உடலில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்து போராட போதுமானதாக இல்லை. அதனால் நரை முடி உண்டாகிறது.

நரைமுடி வரும் போது உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. முன் கூட்டிய நரைத்தலுக்கு வரும் போது உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ளுங்கள். ஒவ்வொரு உணவிலும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன என்பதை உறுதி செய்து தேவையான அளவுக்கு எடுத்து கொள்ளவும். தினமும் விதைகள், கொட்டைகள் சாப்பிடுங்கள்.

க்ரீன் டீ, ஆலிவ் ஆயில், மீன், ஆரஞ்சு போன்ற ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். இது நரை முடியை படிப்படியாக குறைக்கும். இளநரையை கண்டதும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிருங்கள். இது சருமம் மற்றும் முடியை பெரிதும் பாதிக்கிறது. வெள்ளை முடி பரவாமல் தடுக்கிறது. புகைப்பழக்கத்தை தவிர்த்த உடன் நீங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்கலாம்.

மாசு மற்றும் சூரிய ஒளி சேதாரத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்க, ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியே செல்லும் போது தலைக்கு அகலமான தொப்பி அல்லது தடிமனான துணி கொண்டு மூடிவிடுங்கள். முடிக்கு சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம். முடிக்கு அதிக வெப்பக்கருவி சிகிச்சை செய்ய வேண்டாம்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகச்சிறந்தது. நரை முடிக்கு காரணம் மன அழுத்தமாகவும் இருக்கலாம். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு நரைப்பதையும் தடுக்க கூடும். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளின் மூலம் மன அழுத்தம் குறைக்கலாம்.

நடனம், யோகா போன்ற விஷயங்களை செய்ய சிறிது நேரம் ஒதுக்கலாம். எளிய சுவாச பயிற்சிகள் செய்யலாம். இது மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க சிறந்த வழியாகும்.

Tags

Read MoreRead Less
Next Story