சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
![சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/10/05/1337495-seendil.webp)
சீந்தில் மூலிகை (கோப்பு படம்)
சீந்தில் மூலிகை, ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, கூடுச்சி (Tinospora cordifolia) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு தன்மை குறித்து சமூக ஊடகங்களிலும், சில அறிவியல் இதழ்களிலும் கருத்துகள் வெளியாகி சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை பாதுகாப்பானது. ஆனால், அதேபோன்ற தோற்றத்தில் காணப்படும் தினோஸ்போரா கிரிஸ்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரங்கள், தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை ஆயுஷ் சிகிச்சையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை குறித்து பல ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கல்லீரலை பாதுகாக்கும் இதன் குணங்கள், நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுர்வேத மருந்தை, பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அது அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu